சற்று முன்
சினிமா செய்திகள்
5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர்...
Updated on : 31 March 2020
ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.
இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை ஆதரிப்பதற்காக சமூக அமைப்புகள் முன்வந்து உதவி வருகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை நகரில் தியாகி அண்ணாமலை நகர், கீழ்நாத்தூர், பெரியார் நகர், அண்ணா நகர், சின்னக்கடை தெரு கட்டிட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி, கள் நகர், வேங்கிக்கால், மற்றும் திருவண்ணாமலை அருகில் உள்ள அய்யம்பாளையம், இராஜபாளையம், ஆடையூர் செங்கம் அருகிலுள்ள குளியம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களை ஆர் எஸ் எஸ் எஸ் இந்நிறுவனத்தின் திரைப்படதயாரிப்பாளரும் தொழிலதிபருமான எஸ் தணிகைவேல் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தையும் வழங்க முன்வந்துள்ளார்.
வீடு வீடாக இந்த இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு உதவியாக நீர்த்துளி இயக்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று 1500 குடும்பங்களுக்கு இந்த இலவச ரேஷன் பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளில் தொழிலதிபர் எஸ் தணிகைவேல் சார்பில் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


சமீபத்திய செய்திகள்
‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்
வெவ்வேறு ஜானர்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுத் திரைப்படமான ‘திரௌபதி 2’-க்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் நாளை (ஜனவரி 23, 2026) வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு, ஜிப்ரானின் இசை முக்கியமான பலமாக அமைந்துள்ளது.
படம் குறித்துப் பேசிய ஜிப்ரான்,
படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்து கொண்டதாவது, "நாம் வாழும் காலத்தைத் தாண்டி, கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி. ‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல! அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசன் சார் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தில் இசையில் பல புதிய விஷயங்களை ஆராய்ந்து கொண்டு வந்தேன். அதேபோன்று நிறைய ஆராய்ந்து இந்தப் படத்திலும் புது இசையை கொடுத்திருக்கிறேன். பிலிப் கே. சுந்தரின் அற்புதமான ஒளிப்பதிவுக்கு இணையாக பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது என நம்புகிறேன். நாளை திரையரங்குகளில் படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன்" என்றார்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வரலாறு, உணர்வு மற்றும் இசையின் கலவையுடன் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’, ஜிப்ரானின் பின்னணி இசை மூலம் ரசிகர்களுக்கு ஒரு தீவிரமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai
தென் ஆசியாவிலும் உலகளாவிய அளவிலும் உருவாகும் ஆவணப்படங்களை கொண்டாடும் முக்கிய விழாவாக Docu Fest Chennai சென்னையில் தொடங்கியுள்ளது. மறைந்துள்ள உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், புறக்கணிக்கப்பட்ட குரல்களுக்கு வலு சேர்க்கவும், நிஜ வாழ்க்கைக் கதைகள் வழியாக அர்த்தமுள்ள சமூக உரையாடலை உருவாக்கவும் இந்த விழா அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
சென்னையின் கடல் மரபை நினைவூட்டும் வகையில், விழாவின் லோகோவில் இடம்பெற்றுள்ள கலங்கரை விளக்கைப் போல, ஆவணப்பட இயக்குநர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வழிகாட்டும் ஒளியாக Docu Fest Chennai செயல்பட விரும்புகிறது. வலிமையான உண்மை கதைகள் தங்களுக்கான பார்வையாளர்களை அடையும் ஒரு திறந்த வெளி நிலத்தை உருவாக்குவதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.
ஜனவரி 22ஆம் தேதி தொடங்கிய இந்த இரு நாள் ஆவணப்பட விழாவை, திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் முதன்மை விருந்தினராக தொடங்கி வைத்தார். ICAF அமைப்பைச் சேர்ந்த திரு. சிவன் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
இந்த Docu Fest Chennai விழாவில், 12க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவான 14 ஆவணப்படங்கள் இரண்டு நாட்களாக திரையிடப்படுகின்றன. சமூக, கலாச்சார, அரசியல், மனிதநேய பார்வைகளை முன்வைக்கும் இந்த ஆவணப்படங்கள், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்த விழா அனைவருக்கும் இலவசமாகவும், திறந்தவையாகவும் நடத்தப்படுகிறது. சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், சமூக மாற்றத்திற்கான ஒரு வலுவான ஊடகமாகக் காண விரும்புவோருக்கு Docu Fest Chennai ஒரு முக்கிய மேடையாக உருவெடுத்துள்ளது.
‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!
‘சிறை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L.K. அக்ஷய் குமார், கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ படத்தின் பூஜை விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் L.K. அக்ஷய் குமார் உடன் ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் P.A., ஷாரீக் ஹாஸன் மற்றும் ‘டியூட்’ படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுமையான ஃபன் எண்டர்டெய்னராக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவை லியோன் பிரிட்டோ மேற்கொண்டு வருகிறார். இசையமைப்பை ஜென் மார்ட்டின், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை P.S. ஹரிஹரன் கவனிக்கின்றனர். ஆடை வடிவமைப்பாளராக பிரியா பணியாற்ற, K. அருண் மற்றும் மணிகண்டன் நிர்வாக தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க, L.K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை, எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, L.K. அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘சிறை’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ குறித்த புதிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பிரம்மாண்டமான தயாரிப்பான “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்துக்கு வலுவான கவனத்தை பெற்ற நிலையில், டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸை வழங்கியுள்ளது.
டோவினோ தாமஸின் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில், ஒரு சிறப்பு பிறந்தநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டு, பான்–இந்தியா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
டோவினோ தாமஸ் இதுவரை ரசிகர்கள் காணாத முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் சார்பில் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சாணுக்கியா சைதன்யா சரண் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு காலகட்டப் பின்னணி திரைப்படமாக உருவாகியுள்ளது.
நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ள இப்படத்தில், விஜயராகவன், சுதீர் கரமண, பாபுராஜ், வினோத் கெடமங்கலம், பிரஷாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1950–60கள் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள கதைக்களம், ரசிகர்களுக்கு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி, இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங்கை ஸ்ரீஜித் சரங், கலை வடிவமைப்பை திலீப் நாத் மேற்கொண்டுள்ளனர்.
இணை தயாரிப்பாளர்களாக மேகாஸ்யாம் மற்றும் தண்சீர் பணியாற்ற, உடை வடிவமைப்பை மஞ்சுஷா ராதாகிருஷ்ணன், மேக்கப்பை ரஷீத் அகமது கவனிக்கின்றனர். லைன் புரொட்யூசராக அலெக்ஸ் E. குரியன், நிதிக் கட்டுப்பாட்டாளராக அனில் அம்பல்லூர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக ராஜேஷ் மேனன் பணியாற்றியுள்ளனர்.
‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!
தமிழ் சினிமாவில் புதிய முகங்களுக்கு நம்பிக்கையுடன் வாய்ப்பளித்து, அவர்களின் படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறது. அந்த வரிசையில், “மாயபிம்பம்” திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், இயக்குநர் K.J. சுரேந்தரின் நேர்மையான முயற்சியையும், குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கதை சொல்லிய விதத்தையும் பாராட்டி, அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார்.
தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகர்–இயக்குநர் RJ பாலாஜி, ‘டயங்கரம்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் VJ சித்து உள்ளிட்ட பல திறமைவாய்ந்த கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இந்த நிறுவனத்துக்கே உரியது. வித்தியாசமான கதைக்களங்கள், புத்தம் புதிய ஐடியாக்கள் மற்றும் இளம் படைப்பாளிகளின் கனவுகளை நிஜமாக்கும் அணுகுமுறையே வேல்ஸ் ஃபிலிம்ஸின் அடையாளமாக மாறியுள்ளது.
“மாயபிம்பம்” படத்தை பார்த்த ஐசரி K கணேஷ்,
“ஒரு புதிய இயக்குநர், முற்றிலும் புது முகங்களை வைத்து எளிமையான ஆனால் மனதைத் தொடும் கதையை சொல்லியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு, படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகவும், இயக்குநரின் பயணத்திற்கு புதிய உற்சாகமாகவும் அமைந்துள்ளது.
ஒருபுறம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பல புதிய படைப்புகள் உருவாகிக் கொண்டிருக்க, மறுபுறம் “மாயபிம்பம்” இயக்குநர் K.J. சுரேந்தர் இயக்கும் புதிய படம் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
K.J. சுரேந்தர் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள “மாயபிம்பம்” திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2005 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெய்னர், தற்போது ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55
நடிகர் தனுஷ் நடிப்பில், ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. தற்காலிகமாக #D55 என அழைக்கப்படும் இந்த படம், ஆரம்பத்தில் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அதிகாரப்பூர்வ பூஜையும் நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முன் தயாரிப்பு பணிகளும் வேகமாக நடந்தன.
ஆனால் கதையின் அளவு, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் தயாரிப்பு தேவைகள் காரணமாக படத்தின் பட்ஜெட் கணிசமாக உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தயாரிப்பாளர் அன்புச்செழியன் இந்த திட்டத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, திட்டத்தில் தற்காலிக இடைவேளை ஏற்பட்டாலும், தற்போது புதிய தயாரிப்பு அமைப்புடன் படம் மீண்டும் பாதையில் திரும்பியுள்ளது.
புதிய ஏற்பாட்டின்படி, Wunderbar Films மற்றும் RTake Studios இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. இதன் அடையாளமாக, சமீபத்தில் மீண்டும் ஒரு முறை பூஜை நடத்தப்பட்டு, படத்தின் புதிய தொடக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி, படத்திற்கு வலுவான தயாரிப்பு மதிப்பையும், சர்வதேச தரத்திலான தொழில்நுட்ப அணுகுமுறையையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் இந்தப் படத்தில் இதுவரை பார்க்காத புதிய தோற்றம் மற்றும் ஆழமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி, சமூகப் பின்னணி மற்றும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவர் என்பதால், #D55 ஒரு பெரும் அளவிலான, உள்ளடக்கச் செறிவான படமாக உருவாகும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, நட்சத்திரப் பட்டியல் மற்றும் வெளியீட்டு காலக்கெடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

“மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனவரி 23 ஒரு சிறப்பு நாளாக மாறியுள்ளது. காரணம், ஒரே நாளில் தல அஜித் குமாரின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் மற்றும் ரிச்சர்ட் ரிஷி நடித்த ‘திரௌபதி 2’ புதிய வெளியீடு திரையரங்குகளை அலங்கரிக்கவிருக்கிறது.
2011-ல் வெளியான ‘மங்காத்தா’, அஜித் குமாரின் திரைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாக அமைந்த படம். ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையிலான கோட்டையை உடைத்து, முழுக்க முழுக்க கிரே ஷேட் கதாபாத்திரத்தில் அஜித் மிரட்டிய அந்த படம், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மைல்கல் படம், இப்போது ரீ-ரிலீஸ் மூலம் மீண்டும் பெரிய திரையில் ரசிகர்களை சந்திக்கிறது.
அதே நேரத்தில், சமூக அரசியல் பேசுபொருளால் கவனம் பெற்ற ‘திரௌபதி’ படத்தின் தொடர்ச்சியான ‘திரௌபதி 2’, ரிச்சர்ட் ரிஷியின் கேரியரில் மிக முக்கியமான படமாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்பை விட கூர்மையான அரசியல், அழுத்தமான வசனங்கள், தீவிரமான கதைக்களம் என படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே தேதி… இரண்டு விதமான அனுபவங்கள்!
மங்காத்தா - நாஸ்டால்ஜியா, ஸ்டைல், ஸ்டார் பவர்
திரௌபதி 2 - சமகால அரசியல், சர்ச்சை, கருத்து மோதல்
இதனால், சினிமா வட்டாரத்தில் “இது நேரடி போட்டியா, இல்லை இரண்டு தலைமுறை ரசிகர்களுக்கான திருவிழாவா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் மங்காத்தா ரீ-ரிலீஸ் மற்றும், புதிய சர்ச்சை பேசுபொருளுடன் வரும் திரௌபதி 2
ஜனவரி 23, தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத நாளாக மாறுமா?
சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் வெற்றிகளுக்குப் பெயர் பெற்ற சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்திருப்பது, ரசிகர்களிடையே மட்டுமல்லாது திரையுலக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய திரைப்படம், முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S. அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றனர். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆக்ஷன் ஹீரோ விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இன்றைய இளம் ரசிகர்களின் விருப்ப இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது திரைப்படம் என்பதே “புருஷன்” படத்தின் முக்கிய சிறப்பு. இதற்கு முன், “ஆம்பள” திரைப்படத்தில் சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில், அதே கூட்டணி மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார்.

சமீபத்தில் வெளியான “புருஷன்” படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி, நகைச்சுவை மற்றும் மாஸ் தருணங்கள் கலந்த சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணியை வெளிப்படுத்தி, குறுகிய நேரத்திலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். “கமர்ஷியல் கிங்” சுந்தர் சி-யின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் வகையிலான ஒரு முழுமையான எண்டர்டெயினராக “புருஷன்” உருவாகி வருகிறது.
படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், படத்தில் இணையும் மற்ற நடிகர்–நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு மாஸ் கமர்ஷியல் விருந்தாக “புருஷன்” அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, தனது நான்காவது தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தரமான கதையம்சம் மற்றும் வலுவான பொழுதுபோக்கு அம்சங்களை இணைப்பதே சாந்தி டாக்கீஸின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சியான் 63’ படத்தையும் சாந்தி டாக்கீஸ் தயாரித்து வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘புரொடக்ஷன் நம்பர் 4’ திரைப்படம் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய படத்தில், வளர்ந்து வரும் நாயகனாக தனது நகைச்சுவை கலந்த இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாரத், கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பால் பாராட்டைப் பெற்ற நடிகை சான்வி மேக்னா நடிக்கிறார். இப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்குகிறார்.
இன்று (ஜனவரி 21, 2026) காலை, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. முழுப் படப்பிடிப்பும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 45 முதல் 50 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நகைச்சுவை மற்றும் கதாபாத்திர நடிப்பில் தொடர்ந்து தனி முத்திரை பதித்து வரும் பாலசரவணன், இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியாகவும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில்,
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை கவனிக்க, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார். உடை வடிவமைப்பை கிருத்திகா சேகர் கவனித்து வருகிறார்.
வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு மற்றும் புதிய அணுகுமுறையுடன் உருவாகும் இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 4’ திரைப்படம், சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், பிரமாண்டமான வரலாற்று கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘திரௌபதி 2’. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அதன் தீவிரமான கதையம்சம் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், தேவியானி ஷர்மா, திவி வைத்யன் ஆகியோருக்கு, தங்கள் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் விதமான முக்கியமான கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் நடித்துள்ள திரௌபதி, ஆயிஷா, கோதை என்ற கதாபாத்திரங்கள், பெண்களின் வலிமை, உணர்ச்சி, அறிவு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன், இந்த அனுபவத்தை தனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். ஆழமான உணர்ச்சிகளும், தாங்கும் உறுதியும், அதே சமயம் நளினமும் கொண்ட கதாபாத்திரமாக திரௌபதி இருப்பதாகவும், அந்த உணர்வுகளை திரையில் வெளிப்படுத்துவது ஒரு பெரிய சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி, தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஆயிஷா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தேவியானி ஷர்மா, இந்த படம் தன் வாழ்க்கையில் பெருமையான தொடக்கம் எனக் கூறியுள்ளார். அறிவும், அமைதியும், மன உறுதியும் கொண்ட ஆயிஷா கதாபாத்திரத்தை இயக்குநர் மோகன் ஜி அழகாக திரையில் வடிவமைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களின் மனதை தொடும் இசையும், ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தர் அவர்களின் பிரமாண்டமான ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோதை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவி வைத்யன், உறுதியான உண்மையான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரமாக கோதை இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த வீரத்தையும் உறுதியையும் தன் நடிப்பில் முழுமையாக வெளிப்படுத்தியிருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்த ஆக்ஷன் சந்தோஷ் அவர்களுக்கும், படப்பிடிப்பில் வழிகாட்டியாக இருந்த ரிச்சர்ட் ரிஷி அவர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில், ரிச்சர்ட் ரிஷி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வலுவான பெண்கதாபாத்திரங்கள், வரலாற்று பின்னணி, பிரமாண்டமான காட்சியமைப்பு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான கதையம்சம் ஆகியவற்றின் சங்கமமாக ‘திரௌபதி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு தாக்கம் கொண்ட சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













