சற்று முன்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |   

சினிமா செய்திகள்

அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை
Updated on : 28 March 2020

கொரோனா வைரஸ் பரவுவது குறித்த விழிப்புணர்வை கோலிவுட் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:  கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் நடிகை நடிகர்கள் பலர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாம் எல்லோரையும் பாதுகாப்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால் சில இளைஞர்கள் எந்தவித பயமும் இல்லாமல் குருட்டு தைரியத்தில் நமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்து வெளியில் செல்கிறார்கள். அவர்களுக்கு வைரஸின் சீரியஸ் குறித்து தெரியவில்லை. அவர்களுக்கு வைரஸ் ஒருவேளை தாக்கினால் அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரவும் அபாயம் உள்ளது.  மேலும் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு நிறைய பேர் வந்து உள்ளார்கள். அவர்களை தற்போது அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது. அவர்களுடைய வீட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. எனவே அவர்களை தனிமையில் இருக்க விடுங்கள். அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்.  மேலும் மார்க்கெட் சென்றாலும் காய்கறி வாங்க சென்றாலும் ஒரு மீட்டர் தள்ளி நின்று ஒருவரை ஒருவர் தொடாமல் பார்த்துக் கொள்ளவும். இது ஒரு பாதுகாப்பான நடவடிக்கையாகும். முதலில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் அடுத்தவரையும் பாதுகாக்க முடியும்.  அதுபோல் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் உள்பட அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரவர்களுக்கு பிடித்த நடிகர்கள் கூறிய வழிமுறைகளை ஒரு ரசிகராக கடைபிடியுங்கள். மருத்துவர்கள் மற்றும் அரசுகளும் நமக்காக நல்லது செய்து வருகின்றார்கள். நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அது தப்பான முடிந்துவிடும். இந்த வாரமும் அடுத்த வாரமும் நாம் கடந்து விட்டோம் என்றால் அதன் பின்னர் பெரிய பாதிப்பு இருக்காது. எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா