சற்று முன்

துல்கர் சல்மான் நடிக்கும் “ஐ அம் கேம்” – 2026 ஆகஸ்டில் உலகம் முழுவதும் வெளியீடு   |    ZEE5-இன் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடர் “வாரண்ட்” டிரெய்லர் வெளியீடு   |    சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |   

சினிமா செய்திகள்

அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்
Updated on : 28 March 2020

‘குட்டி புலி’ படம் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் தமிழ் செல்வி. அப்படத்தை தொடர்ந்து ‘கொம்பன்’, ‘மெட்ராஸ்’, ‘காஷ்மோரா’, ‘கதக்களி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்து வருபவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு என்று பெரிய ரசிகர் வட்டமே இருக்க, இவரை பல ரசிகர்கள் ‘தமிழ் செல்வி ஆண்டி’ என்று செல்லமாக அழைப்பதோடு, இவர் பற்றி சமூக வலைதளங்களில் அவ்வபோது பல பதிவுகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.



 



 



இந்த நிலையில், சமீபத்தில் யுடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை தமிழ் செல்வி, அஜித், கமல், சூர்யா, கார்த்தி என பல ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறேன். சில ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், கால்ஷீட் காரணமாக நடிக்க முடியாமல் போயுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.



 



 



அதே சமயம், ரஜினி, கமல் ஆகியோர் படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை. அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால், தேதி பிரச்சினை வந்தாலும், மற்றவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களின் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன். அதிலும், கமல் கூப்பிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிடுவேன், என்று தெரிவித்துள்ளார்.



 



இதே பேட்டியில், அஜித் படத்தில் நடிக்கும் போது, அவரை பார்த்ததும் அவர் கன்னத்தை பிடித்து கிள்ள வேண்டும், போல இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா