சற்று முன்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |   

சினிமா செய்திகள்

FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்
Updated on : 24 March 2020

இன்று இரவு 12 மணி முதல் இந்தியாவே முழுமையாக முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சினிமா பிரபலங்களும் ட்விட்டரில் பேசி வருகின்றனர். மக்களை 21 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று கொரோனாவால் வேலையிழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நிதி அளித்திருந்தனர். ரஜினி 50 லட்சம் ரூபாயும், விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும், சூர்யா-கார்த்தி குடும்பம் 10 லட்சம் ரூபாயும் வழங்கினர். அது மட்டுமின்றி பிரகாஷ்ராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் அரிசி மூட்டைகளை அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் உதவி கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தனி அதிகாரி மூலம் செயல்பட்டு வரும் அந்த சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் அளித்த மனு அடிப்டையில், ஷூட்டிங் நடந்தால் மட்டும் கிடைக்கும் தின சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கும் 90 சதவீத நலிந்த நடிகர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பார்த்து முதல் ஆளாக 10 லட்சம் ரூபாயை உதவியாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.  

  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா