சற்று முன்

அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |    மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு போட்டி போட்டு உதவிய திரை பிரபலங்கள்   |    மாஸ்க் அணிந்து பிரபல ஹீரோ செய்த செயல் - அதிர்ச்சி வீடியோ   |    விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்   |    விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மோதல் காரணம் கில்லி தாங்க   |    முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும்   |    5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர்...   |    லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்தாரா - வைரலாகும் லாஸ்லியா வீடியோ   |    அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை   |    அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ   |    அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்   |    FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்   |    அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது   |    மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம்   |    திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்   |    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்   |    அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்   |   

சினிமா செய்திகள்

திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்
Updated on : 22 March 2020

தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் விசு. 90களில் அவர் எடுத்த படங்களில் பேசப்படும் அவருடைய வசனங்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்க இடம் பிடித்தவை. பல குடும்பங்களுக்கு அவர் படங்கள்  வாயிலாக கொடுத்த அட்வைஸ் உதாரணமாக அமைந்தன. இன்றும் டிவி சேனல்களில் விசுவின் படங்கள் என்றால் எத்தனை முறை பார்த்திருந்தாலும் திரும்ப பார்க்க தூண்டும் அவருடைய கதைகள் யதார்தமானவை.  

அவரை கடைசியாக ஒரு பத்திரிகைக்காக சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் மற்றும் சின்னத்திரை சங்கத்தின் பொருளாளர் பலேஷ்வருடன் சேர்ந்து  மேஜர்தாசன் அவருடைய திரைப்பயணத்தை பற்றி கேள்விகள் கேட்க அந்த சுவாரசியமான தருணத்தை சேவியர் மரியாபெல் படம் பிடித்தார். அன்று அவருடைய திரைத்துறை அனுபவங்களை நம்முடன் மிகவும் சந்தோசமாக பகிர்ந்து கொண்டார். அவை மறக்க முடியாதவை. 

இப்படி பெருமைக்குரிய திரு விசு அவர்கள், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிக மோசமான நிலையில் சோழிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய மூன்று மகள்கள் அமெரிக்காவில் வசித்துவந்தனர். தந்தையின் உடல்நிலை கேள்விப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பே அமெரிக்காவில் இருந்து வந்து விசுவுடன் இருந்து அவரை கவனித்து கொண்டனர். உடல்நிலை சற்று தேறிவந்த நிலையில் செய்தியாளர் மேஜர்தாசனுடன் தொடர்புகொண்டு பேசிவந்தார். 

 

இந்த நிலையில், இன்று சுமார் மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி  விசு மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கு வயது 74.  அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ்சகா வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா