சற்று முன்
சினிமா செய்திகள்
அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்
Updated on : 22 March 2020
தற்போது மனித இனத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது பல உலக நாடுகளில் அதிகம் பரவி உள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் அதிகம் மக்கள் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.
இதற்கு நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்திருந்தார். இந்த அசாதாரணமான சூழலில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தேவை என கூறியிருந்தார் அவர். மேலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று கமல் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் சற்றுமுன் கமல் கொரோனா விழிப்புணர்வுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
"கொரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது ஐந்தாவது வாரத்தில் பல மடங்கு அதிகம் ஆகிறது என்பது மற்ற பல நாடுகளில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைரஸ் பாதித்த சிலர் தொற்று அறிகுறி எதுவும் தெரியாத சமயத்தில் வெளியிடங்களுக்கு சென்று கொண்டிருப்பார்கள். ஐந்து பேரிடம் இருந்து 25 பேருக்கு பரவும், அது பின்னர் 100 பேருக்கு பரவும். அதை தடுக்க ஒரே வழி தான் இருக்கிறது.. சோசியல் டிஸ்டன்சிங்.. விலகி இருத்தல்."
"நான்காவது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வாருங்கள். இந்த அறிக்கையை உங்களுக்கு சொல்வதற்காகத்தான் நான் வெளியே வந்திருக்கிறேன். வெளியில் வராமல் இருந்தால் இதன் மூலமாக வைரஸ் பரவுவதை தடுக்கலாம்" என கமல் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகள்
மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”
Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow).
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் பேசியதாவது..,
இது என்னுடைய முதல் படம். இந்தப் படம் இங்கு வரக்காரணம் தயாரிப்பாளர்பிரசாந்த் தான். தயாரிப்பாளராக முழு ஆதரவாக இருந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை 8 ஆண்டுகளாகத் தெரியும் அவர் முதன் முதலில் நடித்த குறும்படத்திற்கு நான் தான் கேமராமேன், இப்போது அவரது முதல் படத்திற்கு நான் கேமராமேன் என்பது மகிழ்ச்சி. நவம்பர் 21 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.
எடிட்டர் ஶ்ரீ வாட்சன் பேசியதாவது..,
இப்படம் ஆரம்பித்து 2 வருடம் ஆகிவிட்டது. படக்குழு அனைவரும் ஒன்றாக இருந்து இப்படத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸிற்காக, நானும் ஹரி பூர்ணிமாவை பார்க்க போனோம், அதிலிருந்து இப்போது படம் வரை வந்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
கலை இயக்குநர் கார்த்திக் கிருஷ்ணன் பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பித்த போது கொஞ்சம் நெர்வஸாக இருந்தது. கதை கேட்கும் போது மிகவும் ஊக்கம் தருவதாக இருந்தது. பயணம் தான் படம் என்பதால் பல இடங்களைத் திரையில் சரியாகக் கொண்டு வர நிறைய உழைத்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைவரும் எல்லோரும் பெரிய அளவில் வந்து, பிஸியாக உழைக்க நான் சாபம் தருகிறேன். அனைவருக்கும் நன்றி.
உடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது..,
எனக்கு வாய்ப்புத் தந்த தயாரிப்பாளர், பூர்ணிமாவுக்கு நன்றி. சென்னைக்கு வந்து சாதித்த ஒரு இளம்பெண் பூர்ணிமா அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி.
இசையமைப்பாளர் கிளிஃபி கிரிஷ் பேசியதாவது..,
இது என் முதல் படம் எனக்கு வாய்ப்பு தந்த ஹரி பிரதருக்கு நன்றி. நான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பண்ணிக் கொண்டிருந்தேன் என்னைத் திரைத்துறைக்கு அழைத்து வந்ததற்கு நன்றி. பிரசாந்த் ப்ரோவுக்கு நன்றி. நான் இந்தப்படத்தில் நான்கு பாடல்கள் செய்துள்ளேன். பூர்ணிமாவுடன் நெருங்கிய நண்பராகிவிட்டேன். இந்தப்படம் கலர்ஃபுல் எண்டர்டெயினராக இருக்கும், அனைவருக்கும் நன்றி
இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத் பேசியதாவது..,
இது என் முதல் மேடை, தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணா அவரை இன்று தான் நேரில் பார்க்கிறேன். என்னை நம்பி வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஹரி அண்ணாவுடன் நாலைந்து வருடம் முன் ஆரம்பித்த நட்பு, இன்று வரை தொடர்கிறது. அவர் பெரும் உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். அபி ஆத்விக் விஷுவல் அற்புதமாக வந்துள்ளது. பாடல்கள் நன்றாக வந்துள்ளது. பாடலாசிரியர் மோகன்ராஜ் அண்ணாவிற்கும் சரண் குமாருக்கும் நன்றி. பூர்ணிமா அக்காவுடன் ஒரு வெப் சீரிஸ் வேலைபார்த்துள்ளேன், அது வளர்ந்து இன்று திரைக்கு வந்துள்ளது. வைபவ் நன்றாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இது குழந்தைகள் ஃபேமிலி என எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
பாடகர் அந்தோணி தாசன் பேசியதாவது..,
இந்தப்படத்தில் எனக்கும் பாட வாய்ப்பு தந்த இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. யெல்லோ மஞ்சள் நிறம், மக்களை மகிழ்விக்கட்டும். திரையரங்கில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் சாய் பிரசன்னா பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பிக்கும்போது யாரையும் தெரியாது, ஆனால் இப்போது வா மச்சான் என பேசும் அளவு நெருக்கமாக ஆகிவிட்டோம். ஆரம்பத்தில் ஹரி அண்ணா கொரில்லா மேக்கிங்கில் கதை இல்லாமல் தோன்றுவதை எடுக்கலாம் என்றார், ஆனால் அதன்பிறகு உட்கார்ந்து பேசி எழுதி, நிறைய உழைத்து, ஜாலியாகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். பூர்ணிமா சிறப்பாக நடித்துள்ளார் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
உத்ரா புரடக்சன்ஸ் உத்தாரா பேசியதாவது..,
நவம்பர் 21 ஆம் தேதி உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் தமிழகமெங்கும் யெல்லோ திரையரங்கில் வெளியாகிறது. இப்படி ஒரு தரமான படத்தை வெளியிட என்னிடம் கொண்டு வந்த அஹமத் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் எல்லோரையும் ஒரு டூர் கூட்டிப்போவது போல், எல்லோரையும் மகிழசிப்படுத்தும். இந்த காலத்தில் ஒரு படத்தை எடுத்து திரைக்குக் கொண்டு வருவது மிகப்பெரிய விசயம். இந்த குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்து, இப்படத்தை எடுத்துள்ளார்கள். மலையாளப்படம் போல் தமிழ்ப்படம் இல்லை என்பதைச் சொல்வதை மறந்து, இப்படத்தைப் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் வைபவ் முருகேசன் பேசியதாவது..,
நான் பேட்டை படத்தில் பேக்ரவுண்ட் ஆர்டிஸ்டாக ஆரம்பித்து, வதந்தி முதல் பல படைப்புகளில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இப்போது நான் நாயகனாக நடித்து யெல்லோ படம் திரைக்கு வருகிறது. பிரசாந்த் பிரதர் பல தடைகளைத் தாண்டி, இப்படத்தை முடித்து திரைக்குக் கொண்டு வந்துள்ளார். ஹரி பிரதர், இப்படம் ஒரு டிராவல் படம் என்பதால் பல இன்னல்கள் இருந்தது, ஆனால் அதையெல்லாம் தாண்டி இப்படத்தை அருமையாக இயக்கியுள்ளார். பூர்ணிமா அவர் தான் இந்தப்படத்தின் மையமாக இருந்தார். அனைவரையும் ஒருங்கிணைத்தது அவர் தான். பாடல்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளது. ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். பிரபு சாலமன் எங்களை நம்பி, நாங்கள் கேட்டதால் ஒரு கதாப்பாத்திரம் நடித்துத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. இது என் முதல் படம் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் லோகி பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் ஹரி அண்ணாவுக்கு நன்றி. ஃபர்ஸ்ட் ப்ரேம் ஆசையாக நடிக்கத் தயாராகி டயலாக் கேட்டேன், நீயே பேசுடா என்றார். இப்போது வரை படத்தில் நான் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் படம் வேலை செய்தது மிக ஜாலியாக இருந்தது. படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் ஹரி மகாதேவன் பேசியதாவது..,
தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணாவுக்கு நிறையக் கடமைப்பட்டுள்ளேன். பூர்ணிமா தான் அவரை அறிமுகப்படுத்தினார். கொரில்லா மேக்கிங் ஸ்டைலில் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு பயணம் போவோம், என்ன கிடைக்கிறதோ அது தான் படம் என்றேன். இதைக்கேட்ட பிறகும் அவர் என்னை நிராகரிக்கவில்லை. என்னை முழுதாக நம்பினார். பின்னர் ஒரு திரைக்கதை முழுதாக எழுதி அவரிடம் காட்டினேன். நான் நினைத்ததை விடப் பெரிய அளவில் அவர் ஆதரவாக இருந்தார். அவர் கேமரா யூனிட் வைத்துள்ளார். அதை வித்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார். நான் கொரோனா காலத்தில் பல திரைக்கதை எழுதி, பலரைத் தொடர்பு கொண்டேன், அதில் ஒப்புக்கொண்டு நடித்தவர் பூர்ணிமா மட்டும் தான். அவருடன் ஒரு படம் செய்யலாம் என டிஸ்கஸ் செய்தது தான் இந்தப்படம். இந்தப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் ஓய்வே இல்லாமல் இப்படத்தில் நடித்துத் தந்தார். வைபவ் பூர்ணிமா மூலமாக வந்தவர், சிறப்பாக நடித்துள்ளார். சாய் என்னுடைய நெருங்கிய நண்பர் இந்தப்படத்தில் அவர் நடித்ததைத் தாண்டி எல்லா டிபார்ட்மெண்டிலும் வேலை பார்த்துள்ளார் நன்றி. கிளிஃபி நானும் அவரும் டீக்கடையில் உட்கார்ந்து பலமுறை விவாதித்துள்ளோம். அவர் தந்த பாடல்களுக்கு நன்றி. ஆனந்த் என்னுடைய முகவரியான காத்தாடி பாடலை தந்தவன், அவனை நான் முழுதாக நம்புகிறேன். அபி இரவு பகல் பாராமல் கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் கேமரா செய்து தந்துள்ளார். புரடக்சனிலும் நிறைய உதவியாக இருந்தார். காஸ்ட்யூம் செய்து தந்த மீராவிற்கு நன்றி. நல்ல பாடல்கள் தந்த மோகன்ராஜ், ராஜேஷ் இருவருக்கும் நன்றி. ஹரி உத்தாரா பல புரடக்சன் கம்பெனி ஏறி இறங்கிய பிறகு, எங்களை நம்பி, எங்கள் படத்தைப் பார்த்து வெளியிடுவதற்கு நன்றி. என்னுடன் திரைக்கதையிலிருந்து முழுதாக சப்போர்ட்டாக இருந்த ஹரிஷ்மாவிற்கு நன்றி. டெல்லிகணேஷ் சார் எங்களை நம்பி வந்து நடித்துத் தந்தார். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகை பூர்ணிமா பேசியதாவது..,
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்த விழா நேற்று வரை கனவாக இருந்தது. எஙகள் படத்தின் இசை விழா என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒரு படத்தின் வெற்றியாக நினைப்பது அடுத்தடுத்த வாய்ப்புகள், எக்ஸ்பீரியன்ஸ் பணம். ஆனால் இந்தப்படத்தில் எங்கள் எல்லோருக்கும் பல பாடங்கள் கிடைத்தது. நிறையக் கற்றுக்கொண்டோம். பலருக்குப் பெரிய படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கும், நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை உருவாக்கி உழைத்துள்ளோம். இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம். எங்கள் டீமை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர் பிரசாந்த்திற்கு எங்கள் வளர்ச்சியில் நிறையப் பங்கு உள்ளது. மீடியா படத்தைப் பார்த்து நல்ல கருத்துக்களை எழுதுங்கள். படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இது கொரில்லா மேக்கிங், பல தடைகள் இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். பிரசாந்த் அண்ணா உறுதுணையாக இருந்தார். என் நண்பர்கள் குடும்பத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
இந்த உலகம் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், அப்படியான ஆச்சரியங்கள் தான் இந்த படத்தின் மையம். மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நாயகனாக வைபவ் நடித்துள்ளார். பூர்ணிமா ரவி முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் வரும் நவம்பர் 21 ஆம்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது . உத்ரா புரடக்சன்ஸ் தமிழகமெங்கும் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது.
மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”
Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow).
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் பேசியதாவது..,
இது என்னுடைய முதல் படம். இந்தப் படம் இங்கு வரக்காரணம் தயாரிப்பாளர்பிரசாந்த் தான். தயாரிப்பாளராக முழு ஆதரவாக இருந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை 8 ஆண்டுகளாகத் தெரியும் அவர் முதன் முதலில் நடித்த குறும்படத்திற்கு நான் தான் கேமராமேன், இப்போது அவரது முதல் படத்திற்கு நான் கேமராமேன் என்பது மகிழ்ச்சி. நவம்பர் 21 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.
எடிட்டர் ஶ்ரீ வாட்சன் பேசியதாவது..,
இப்படம் ஆரம்பித்து 2 வருடம் ஆகிவிட்டது. படக்குழு அனைவரும் ஒன்றாக இருந்து இப்படத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸிற்காக, நானும் ஹரி பூர்ணிமாவை பார்க்க போனோம், அதிலிருந்து இப்போது படம் வரை வந்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
கலை இயக்குநர் கார்த்திக் கிருஷ்ணன் பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பித்த போது கொஞ்சம் நெர்வஸாக இருந்தது. கதை கேட்கும் போது மிகவும் ஊக்கம் தருவதாக இருந்தது. பயணம் தான் படம் என்பதால் பல இடங்களைத் திரையில் சரியாகக் கொண்டு வர நிறைய உழைத்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைவரும் எல்லோரும் பெரிய அளவில் வந்து, பிஸியாக உழைக்க நான் சாபம் தருகிறேன். அனைவருக்கும் நன்றி.
உடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது..,
எனக்கு வாய்ப்புத் தந்த தயாரிப்பாளர், பூர்ணிமாவுக்கு நன்றி. சென்னைக்கு வந்து சாதித்த ஒரு இளம்பெண் பூர்ணிமா அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி.
இசையமைப்பாளர் கிளிஃபி கிரிஷ் பேசியதாவது..,
இது என் முதல் படம் எனக்கு வாய்ப்பு தந்த ஹரி பிரதருக்கு நன்றி. நான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பண்ணிக் கொண்டிருந்தேன் என்னைத் திரைத்துறைக்கு அழைத்து வந்ததற்கு நன்றி. பிரசாந்த் ப்ரோவுக்கு நன்றி. நான் இந்தப்படத்தில் நான்கு பாடல்கள் செய்துள்ளேன். பூர்ணிமாவுடன் நெருங்கிய நண்பராகிவிட்டேன். இந்தப்படம் கலர்ஃபுல் எண்டர்டெயினராக இருக்கும், அனைவருக்கும் நன்றி
இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத் பேசியதாவது..,
இது என் முதல் மேடை, தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணா அவரை இன்று தான் நேரில் பார்க்கிறேன். என்னை நம்பி வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஹரி அண்ணாவுடன் நாலைந்து வருடம் முன் ஆரம்பித்த நட்பு, இன்று வரை தொடர்கிறது. அவர் பெரும் உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். அபி ஆத்விக் விஷுவல் அற்புதமாக வந்துள்ளது. பாடல்கள் நன்றாக வந்துள்ளது. பாடலாசிரியர் மோகன்ராஜ் அண்ணாவிற்கும் சரண் குமாருக்கும் நன்றி. பூர்ணிமா அக்காவுடன் ஒரு வெப் சீரிஸ் வேலைபார்த்துள்ளேன், அது வளர்ந்து இன்று திரைக்கு வந்துள்ளது. வைபவ் நன்றாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இது குழந்தைகள் ஃபேமிலி என எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
பாடகர் அந்தோணி தாசன் பேசியதாவது..,
இந்தப்படத்தில் எனக்கும் பாட வாய்ப்பு தந்த இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. யெல்லோ மஞ்சள் நிறம், மக்களை மகிழ்விக்கட்டும். திரையரங்கில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் சாய் பிரசன்னா பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பிக்கும்போது யாரையும் தெரியாது, ஆனால் இப்போது வா மச்சான் என பேசும் அளவு நெருக்கமாக ஆகிவிட்டோம். ஆரம்பத்தில் ஹரி அண்ணா கொரில்லா மேக்கிங்கில் கதை இல்லாமல் தோன்றுவதை எடுக்கலாம் என்றார், ஆனால் அதன்பிறகு உட்கார்ந்து பேசி எழுதி, நிறைய உழைத்து, ஜாலியாகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். பூர்ணிமா சிறப்பாக நடித்துள்ளார் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
உத்ரா புரடக்சன்ஸ் உத்தாரா பேசியதாவது..,
நவம்பர் 21 ஆம் தேதி உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் தமிழகமெங்கும் யெல்லோ திரையரங்கில் வெளியாகிறது. இப்படி ஒரு தரமான படத்தை வெளியிட என்னிடம் கொண்டு வந்த அஹமத் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் எல்லோரையும் ஒரு டூர் கூட்டிப்போவது போல், எல்லோரையும் மகிழசிப்படுத்தும். இந்த காலத்தில் ஒரு படத்தை எடுத்து திரைக்குக் கொண்டு வருவது மிகப்பெரிய விசயம். இந்த குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்து, இப்படத்தை எடுத்துள்ளார்கள். மலையாளப்படம் போல் தமிழ்ப்படம் இல்லை என்பதைச் சொல்வதை மறந்து, இப்படத்தைப் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் வைபவ் முருகேசன் பேசியதாவது..,
நான் பேட்டை படத்தில் பேக்ரவுண்ட் ஆர்டிஸ்டாக ஆரம்பித்து, வதந்தி முதல் பல படைப்புகளில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இப்போது நான் நாயகனாக நடித்து யெல்லோ படம் திரைக்கு வருகிறது. பிரசாந்த் பிரதர் பல தடைகளைத் தாண்டி, இப்படத்தை முடித்து திரைக்குக் கொண்டு வந்துள்ளார். ஹரி பிரதர், இப்படம் ஒரு டிராவல் படம் என்பதால் பல இன்னல்கள் இருந்தது, ஆனால் அதையெல்லாம் தாண்டி இப்படத்தை அருமையாக இயக்கியுள்ளார். பூர்ணிமா அவர் தான் இந்தப்படத்தின் மையமாக இருந்தார். அனைவரையும் ஒருங்கிணைத்தது அவர் தான். பாடல்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளது. ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். பிரபு சாலமன் எங்களை நம்பி, நாங்கள் கேட்டதால் ஒரு கதாப்பாத்திரம் நடித்துத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. இது என் முதல் படம் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் லோகி பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் ஹரி அண்ணாவுக்கு நன்றி. ஃபர்ஸ்ட் ப்ரேம் ஆசையாக நடிக்கத் தயாராகி டயலாக் கேட்டேன், நீயே பேசுடா என்றார். இப்போது வரை படத்தில் நான் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் படம் வேலை செய்தது மிக ஜாலியாக இருந்தது. படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் ஹரி மகாதேவன் பேசியதாவது..,
தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணாவுக்கு நிறையக் கடமைப்பட்டுள்ளேன். பூர்ணிமா தான் அவரை அறிமுகப்படுத்தினார். கொரில்லா மேக்கிங் ஸ்டைலில் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு பயணம் போவோம், என்ன கிடைக்கிறதோ அது தான் படம் என்றேன். இதைக்கேட்ட பிறகும் அவர் என்னை நிராகரிக்கவில்லை. என்னை முழுதாக நம்பினார். பின்னர் ஒரு திரைக்கதை முழுதாக எழுதி அவரிடம் காட்டினேன். நான் நினைத்ததை விடப் பெரிய அளவில் அவர் ஆதரவாக இருந்தார். அவர் கேமரா யூனிட் வைத்துள்ளார். அதை வித்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார். நான் கொரோனா காலத்தில் பல திரைக்கதை எழுதி, பலரைத் தொடர்பு கொண்டேன், அதில் ஒப்புக்கொண்டு நடித்தவர் பூர்ணிமா மட்டும் தான். அவருடன் ஒரு படம் செய்யலாம் என டிஸ்கஸ் செய்தது தான் இந்தப்படம். இந்தப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் ஓய்வே இல்லாமல் இப்படத்தில் நடித்துத் தந்தார். வைபவ் பூர்ணிமா மூலமாக வந்தவர், சிறப்பாக நடித்துள்ளார். சாய் என்னுடைய நெருங்கிய நண்பர் இந்தப்படத்தில் அவர் நடித்ததைத் தாண்டி எல்லா டிபார்ட்மெண்டிலும் வேலை பார்த்துள்ளார் நன்றி. கிளிஃபி நானும் அவரும் டீக்கடையில் உட்கார்ந்து பலமுறை விவாதித்துள்ளோம். அவர் தந்த பாடல்களுக்கு நன்றி. ஆனந்த் என்னுடைய முகவரியான காத்தாடி பாடலை தந்தவன், அவனை நான் முழுதாக நம்புகிறேன். அபி இரவு பகல் பாராமல் கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் கேமரா செய்து தந்துள்ளார். புரடக்சனிலும் நிறைய உதவியாக இருந்தார். காஸ்ட்யூம் செய்து தந்த மீராவிற்கு நன்றி. நல்ல பாடல்கள் தந்த மோகன்ராஜ், ராஜேஷ் இருவருக்கும் நன்றி. ஹரி உத்தாரா பல புரடக்சன் கம்பெனி ஏறி இறங்கிய பிறகு, எங்களை நம்பி, எங்கள் படத்தைப் பார்த்து வெளியிடுவதற்கு நன்றி. என்னுடன் திரைக்கதையிலிருந்து முழுதாக சப்போர்ட்டாக இருந்த ஹரிஷ்மாவிற்கு நன்றி. டெல்லிகணேஷ் சார் எங்களை நம்பி வந்து நடித்துத் தந்தார். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகை பூர்ணிமா பேசியதாவது..,
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்த விழா நேற்று வரை கனவாக இருந்தது. எஙகள் படத்தின் இசை விழா என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒரு படத்தின் வெற்றியாக நினைப்பது அடுத்தடுத்த வாய்ப்புகள், எக்ஸ்பீரியன்ஸ் பணம். ஆனால் இந்தப்படத்தில் எங்கள் எல்லோருக்கும் பல பாடங்கள் கிடைத்தது. நிறையக் கற்றுக்கொண்டோம். பலருக்குப் பெரிய படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கும், நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை உருவாக்கி உழைத்துள்ளோம். இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம். எங்கள் டீமை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர் பிரசாந்த்திற்கு எங்கள் வளர்ச்சியில் நிறையப் பங்கு உள்ளது. மீடியா படத்தைப் பார்த்து நல்ல கருத்துக்களை எழுதுங்கள். படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இது கொரில்லா மேக்கிங், பல தடைகள் இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். பிரசாந்த் அண்ணா உறுதுணையாக இருந்தார். என் நண்பர்கள் குடும்பத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
இந்த உலகம் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், அப்படியான ஆச்சரியங்கள் தான் இந்த படத்தின் மையம். மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நாயகனாக வைபவ் நடித்துள்ளார். பூர்ணிமா ரவி முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் வரும் நவம்பர் 21 ஆம்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது . உத்ரா புரடக்சன்ஸ் தமிழகமெங்கும் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!
Burqa மற்றும் Lineman போன்ற விமர்சக பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து, கிணறு குழந்தைத்தனம், நட்பு, நம்பிக்கை, குடும்ப உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையை சொல்லுகிறது. Burkha உலக திரைப்பட விழாக்களில் 5 சர்வதேச விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
கதை
ஒரு கிராமத்தில் நாலு பிள்ளைகள், அருகிலுள்ள வீட்டின் கிணற்றில் விளையாடுவதற்காக அடக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படுகிறார்கள். அதனால், தங்களுக்காகவே ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆனால், மூத்த தலைமுறை நம்பிக்கைகள் மற்றும் தடை அவர்களின் முன்னே நிற்கின்றன. நிலத்தில் தண்ணீர் தேடும் அறிவு, கருவிகளுக்கான சேமிப்பு, பெரியவர்களை நம்ப வைப்பது, பயத்தைத் தாண்டி கனவு நோக்கி ஓடும் இப்பயணம் குழந்தைகளின் கண்களில் அழகாகச் சொல்லப்படுகிறது.
விருதுகள் & விழாக்கள்
• Pegasus Film Festival 2024 – Award Winner
• Accolade Global Film Competition – Award of Merit
• Accolade Global Film Competition – Special Mention – Award of Merit
• IndieFEST Film Awards – Film Feature – Award of Merit
• IndieFEST Film Awards – Direction – Award of Merit
• IndieFEST Film Awards – Cinematography – Award of Merit
• Chennai International Film Festival 2024 – World Cinema Competition பிரிவில் அதிகாரப்பூர்வ போட்டித் தேர்வு
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ரசிக்கும், உணர்ச்சியும் நகைச்சுவையும் நிறைந்த குடும்பப்படமாக கிணறு வெளியாகிறது.
'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் - TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'IPL (இந்தியன் பீனல் லா)' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
'IPL -இந்தியன் பீனல் லா' திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, 'ஆடுகளம்' நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மதன் குமார் பேசுகையில், ''இந்த விழாவிற்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் ஹீரோ வாசன், அவரது ஒரு முகத்தை காண்பித்து நன்றாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி பேசுவதற்கு பல அத்தியாயங்கள் உள்ளது. அவருக்கு இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கும் என் வாழ்த்துகள்.
இயக்குநர் கருணாநிதி என் நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே 25 ஆண்டு கால நட்பு இருக்கிறது. ஒரு நாள் என்னை சந்தித்து யதார்த்தமாக இப்படத்தின் கதையை சொன்னார். இது உண்மை கதை. எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்று இருக்கக்கூடும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு அதிலிருந்து பிறகு மெல்ல மெல்ல மீண்டு வந்திருப்பார்கள். நாட்டில் நடைபெறுகிற ஒரு விஷயம் தான் . அதனை இப்படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனமே வெளியிடுகிறது.
இதற்கெல்லாம் தொடக்க புள்ளி என ஒன்று இருக்கிறது. அவர்தான் என்னுடைய இனிய நண்பர் மார்ட்டின் சுரேஷ். கொரோனா காலகட்டத்தின் போது அதிகார வர்க்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர். இவர் சொன்ன சம்பவங்களை தழுவி தான் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் கருணாநிதி எழுதி, சிறப்பான படத்தை உருவாக்கி இருக்கிறார்,'' என்றார்.
பாடலாசிரியர் கு. கார்த்திக் பேசுகையில், ''இப்படத்திற்காக என்னைத் தொடர்பு கொண்டு, 'ஐபிஎல்' என்றொரு படம், இது போன்றதொரு சூழல், கவித்துவமான பாடல் வரிகள் வேண்டும் என இசையமைப்பாளரும், இயக்குநரும் கேட்டுக் கொண்டனர். இந்தப் படத்தில் 'யாவளோ..' எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன்.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி என்னிடம் பேசும் போது ஒரு மெட்டின் அடிப்படை அமைப்பை அனுப்பி, இதற்கு பாடல் வரிகள் எழுத வேண்டும் என கேட்டார். நாங்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் வாட்ஸப் மூலமாகவே உரையாடினோம். எனக்கு முதலில் முழு திருப்தி கிடைக்கவில்லை. அதன் பிறகு இசையமைப்பாளர், 'முயற்சி செய்து பார்ப்போம். நன்றாக வரும்' என்றார். அதன் பிறகு இசையை இணைத்து, கோர்த்து முழுமையான பாடலாக வழங்கும் போது, அதில் ஒரு ஃபீல் இருந்ததை உணர்ந்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அந்த பாடலுக்கு பொருத்தமான பாடகர், பாடகியையும் தேர்வு செய்திருந்தார். அந்தப் பாடலை சின்மயி பாடியிருந்தார்கள். சிவம் மகாதேவனும் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இது போன்ற வெற்றி பாடலை வழங்கிய இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்திக்கு வாழ்த்துகள். மிகுந்த உயரத்திற்கு செல்வார் என்று நம்புகிறேன்,'' என்றார்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ''இப்படத்தின் இயக்குநர் கருணாநிதி என்னுடைய நண்பர். இயக்குநர் சங்கத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றுபவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்தின் பணியில் ஈடுபட்டிருந்தார். படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் என்னை சந்தித்து, 'இன்னென்ன பிரச்சனை' என்று ஒவ்வொரு பிரச்சனையையும் பட்டியலிடுவார். அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பேன். இந்த மேடையில் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் ஒன்றாக சந்தோஷமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இசை மற்றும் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும், இயக்குநரும் நண்பர்களாக இருக்கிறார்களே, இதுவே இப்படத்தின் வெற்றி. ஏனெனில் பல இயக்குநர்கள் என்னிடம் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரிப்பாளர் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று புகார் தெரிவிப்பார்கள்.
ஆனால் தயாரிப்பாளர் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். அத்துடன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த படத்தின் மீது இயக்குநர் வைத்திருக்கும் நம்பிக்கையை விட அதிகமாக தயாரிப்பாளர் வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதனால் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் பாடகர்களையும், பாடகிகளையும் வரவழைத்து பாடல்களை பாட வைத்தது தான் உண்மையிலேயே இந்த படத்தை சிறப்பாக விளம்பரப்படுத்தும் நிகழ்வு. இது அனைவரையும் சென்றடையும். படத்தின் பணியில் மட்டும் பங்கெடுக்காமல் படத்தினை விளம்பரப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கியதற்காக அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்களை பாடல்கள் திரையிடும்போது நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும். மேடையில் எப்போது நீங்கள் பேசினாலும் உங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிட தவறாதீர்கள். அது தயாரிப்பாளருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும். அவருக்கு நீங்கள் மேடையில் நன்றி தெரிவிக்கும் போது ,அவருடைய வாழ்த்து உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
கலைஞர்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் ஏற்படாமல் சுமுகமாக இயங்க வேண்டும். ஏனெனில் கலைஞர்கள் மக்களின் சொத்து,'' என்றார்.
இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ''இவ்விழாவில் கலந்து கொண்டிருக்கும் நடிகை அபிராமியை மட்டும் என்னால் மறக்க இயலாது. நான் இணைந்து பணியாற்ற விரும்பிய நடிகை. அவருடைய சிரிப்பு சிறப்பானது. அழகானது. என்னுடைய இயக்கத்தில் 'உலகை விலை பேச வா' எனும் படத்தில் கார்த்திக் சாரும், அபிராமியும் நடிப்பதாக இருந்தது. அப்படத்தின் பணிகள் பிறகு நடைபெறவில்லை.
எங்க ஊரிலிருந்து ஒரு பையன் தாறுமாறாக பைக் ஓட்டிக்கொண்டு கண்ட இடங்களில் ஓட்டி வழக்குகளை வாங்கியவன். ஒரே ரகளையாக திரிந்த பையன். இங்கு வந்து அமைதியாக நடித்து நாயகனாக மாறி இருக்கிறார். திடீரென்று அவர் ஹீரோவாகி இருப்பது எனக்கு சந்தோஷம் தான். உன்னால் இந்த திரையுலகம் மேம்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றாக வளர வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்படியே இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த திரைப்பட குழுவினரை பார்த்தவுடன் தான் சினிமா ஆரோக்கியமாய் இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாக தமிழகம் முழுவதும் படத்தை அவரே வெளியிடுகிறார். இதை நான் வரவேற்கிறேன்.
கே .பாக்யராஜ் - பாரதிராஜா வரிசையில் பலர் வந்தாலும் இன்றும் அவர்களைப் பற்றி நாம் பேசுகிறோம் என்றால், அவர்களுடைய கிரியேஷன் தான் காரணம். அவர்களுடைய எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடுதான் காரணம். அந்த வகையில் 'ஐபிஎல்' கூட எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடாக இருக்கும் என நம்புகிறேன்.
கருணாநிதியை போன்ற திறமையான இயக்குநர்கள் ஏராளமானவர்கள் எங்களுடைய இயக்குநர் சங்கத்தில் உள்ளனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கையும் வைக்கிறேன்.
சினிமாவில் தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை தொழிலாளி வரை ஒற்றுமையாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இப்படத்தில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜ் பேசுகையில், ''இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். இப்படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி எனக்கு மெட்டை அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு நான் அவருடைய இசை சார்ந்த பணிகளை பார்வையிட்ட போது அவர் கமர்ஷியலாக பணியாற்றுபவர், ஆனால் என்னுடைய பாடல் கதை சார்ந்து இருக்கிறது. நான் எப்படி அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்தேன். அதன் பிறகு இயக்குநருடன் உரையாடினேன். அப்போதுதான் இசையமைப்பாளருக்கு அவருடைய தேவை என்ன என்பதில் ஒரு தெளிவு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.
இந்தப் படத்தில் 'காத்தோடு போகுமா..' எனத் தொடங்கும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலின் சரணத்தில் 'வெட்டவெளி எங்கேயும் காத்து வழித்துணை ஆகுமே .. விழி அறியா தோழனாக தொட்டுத் தொட்டுப் பேசுமே...' என்ற பாடல் வரிகளும், 'நதி மீது வீசும் கல்லால் காயம் ஆகாதே.. அதை வாங்கி உள்ளே வைக்கும் தேங்கி நிற்காதே...' போன்ற வரிகளை என்னுடைய இளமைக் காலத்தில் என் சொந்த கிராமத்தில் இயற்கையுடன் இணைந்து பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வரிகள் இடம் பெற்றதற்கு இசையமைப்பாளரும், இயக்குநரும் தான் காரணம். அவர்கள் இருவரும் வரிகளை நேசிப்பவர்கள்.
நான் பாடலாசிரியர் ஆர்.வி. உதயகுமாரின் ரசிகன். 'பொன்னுமணி' படத்தில் 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா...' அந்த வரிகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த வரிகள் சாதாரணமாக தெரிந்தாலும், அதை எழுத வேண்டும் என்ற யோசனை என்னை வியப்பில் ஆழ்த்தியது,'' என்றார்.
நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ''நான் சினிமாவை கற்றுக் கொண்டிருக்கும்போது, இன்னும் கூடுதலாக கற்றுக் கொடுத்த படம் 'ஐபிஎல்'. இந்த படத்தின் இயக்குநரின் பெயர். எனக்கு மிகவும் பிடித்தமான பெயர். என் அப்பா என்னை ஊட்டி ஊட்டி வளர்த்த பெயர். அவர் பெயர் கருணாநிதி. பெயருக்கு ஏற்றார் போல் இந்த படத்தில் ஒரு அருமையான அரசியலை சொல்லி இருக்கிறார்.
இந்தப் படத்தின் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் சுரேஷ் என்னிடம் சொன்னார். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, இது சீக்கிரம் திரைப்படமாகும். அதற்கு ஏற்ற கதை என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகு இயக்குநர் கருணாநிதி இந்த கதையை என்னை சந்தித்து சொன்னார் அவருடன் சுரேஷையும் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது.
திடீரென்று நம் வாழ்க்கையில் சில தம்பிகள் குறுக்கிடுவார்கள். அது போல் குறுக்கிட்டவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் மதன் குமார். நான் ஒரு சிக்கலில் இருந்தபோது கேட்காமலேயே கணிசமாக பணம் வழங்கி என்னை அந்தப் பிரச்சனையில் இருந்து மீட்டவர் மதன்குமார். இந்தக் காலத்தில் நேரில் சென்று காலில் விழுந்தாலும் பண உதவி என்பது கிடைப்பது கஷ்டம். அது போன்ற தருணத்தில் மதன்குமாரின் செயல் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருடைய இந்த நல்ல உள்ளத்திற்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.
நடிகை குஷிதா பேசுகையில், ''எனக்கு தமிழ் மொழி தெரியாது. கற்றுக் கொண்டு வருகிறேன். நான் நடித்த 'ஐபிஎல்' தமிழ் திரைப்படம் நவம்பர் 28ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வந்து பார்க்க வேண்டும். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.
நடிகர் டி டி எஃப் வாசன் பேசுகையில், ''இந்த படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.
நான் நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடலுக்காக நடனம் ஆடும் போது நடன இயக்குநருக்கு என்னுடைய கூச்ச சுபாவம் தெரியும். எனக்கு ஆட வேண்டும் என்ற விருப்பம் உண்டு . ஆனால் ஆடத்தெரியாது. இருந்தாலும் இப்படத்தில் நடனமாடி இருக்கிறேன். அதற்காக நடன இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சௌகரியமான பங்களிப்பை அளித்தார்.
இயக்குநருக்கு முதலில் கர்ணன் - அதன் பிறகு கருணாகரன்- இறுதியாக அவருடைய அசல் பெயரான கருணாநிதியையே டைட்டிலில் இடம் பெற வைத்திருக்கிறார்.
படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் டீசர் வெளியான தருணங்களில் இருந்து நான் என் சைடு ப்ரோமோஷனை தொடங்கி விட்டேன். என்னுடைய முதல் படம். என்னை நம்பி ரிஸ்க் எடுத்திருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதாவது நல்லது நடந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் புரமோட் செய்து கொண்டு வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கே
சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!
ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.
குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, ’தி லஞ்ச்பாக்ஸ்’, ’மசான்’, ’பாக்லைட்’ மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற ’காதல்’ போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் சமகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இது அவருடைய பத்தாவது திரைப்படமாகும். கடந்த பத்தாண்டுகளில் ‘பீட்சா’, ’ஜிகர்தண்டா’, ’பேட்ட’, ’இறைவி’, ’மெர்குரி’, ’ஜகமே தந்திரம்’, ’மகான்’, ’ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ மற்றும் ’ரெட்ரோ’ என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல படைப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பகிர்ந்து கொண்டதாவது, “பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார். அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்” என்றார்.
சீக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, “கல்ட் மற்றும் கமர்ஷியல் என்ற இரண்டு விஷயங்களையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அவரது கதைகள் எதிர்பாராத திருப்பங்களையும் அதே சமயம் ஆழமான உணர்வுகளையும் கொண்டிருக்கும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் சரியான கதை சொல்லல் திறமையும் கொண்ட இயக்குநருடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். கார்த்திக் சுப்பராஜூடன் இணைந்திருப்பது சக்திவாய்ந்த வேரூன்றிய கதைகளை, உலகளாவிய சினிமா மொழி மூலம் வெளிப்படுத்தும் சீக்கியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது” என்றார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் தரமான தயாரிப்புகளுக்கும் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் படங்களை கொண்டு போய் சேர்க்கும் உத்திக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ். இந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஆக்ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது .
சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும் அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் கலவையாக இருக்கும்.
நடிகர் சந்தீப் கிஷனை இந்தத் திரைப்படத்தில் முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கலாம். மொழி எல்லைகள் கடந்து ரசிகர்கள் மத்தியில் பான் இந்திய ஸ்டாராக இதன் மூலம் மாற இருக்கிறார் சந்தீப். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி, தமிழ் குமரன் பகிர்ந்திருப்பதாவது, “இயக்குநர் ஜேசன் சஞ்சய் எங்களிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார். திரைக்கதையை திட்டமிட்டபடி, சொன்ன நேரத்திற்குள் படமாக்குவது அவரை முழுமையான இயக்குநராக மாற்றியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பட்ஜெட்டிற்குள்ளும் படமாக்குவதுதான் எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் கனவு. திறமையான நடிகர்களுடன் 65 நாட்களில் 95% படப்பிடிப்பை முடிப்பது என்பது நிச்சயம் புதுமுக இயக்குநராக ஜேசன் சஞ்சயின் சாதனை. லைகா நிறுவனத்தில் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். அவரது எதிர்காலத்திற்கும் வாழ்த்துகிறோம்” என்றார்.
’சிக்மா’ பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டதாவது, “’சிக்மா’ என்ற டைட்டில் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத படமாக மாற்றும். இவர்களின் திறமை மற்றும் ஆதரவால்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விடும். என்றார்.
தமிழ், தெலுங்கு உட்பட பன்மொழி படமாக உருவாகும் ’சிக்மா’ சென்னை, சேலம், தலகோனா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. லைவ் லொகேஷன் மற்றும் கதையின் சாகசத்திற்கு ஏற்ற சிறப்பு செட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் இயக்கி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் இப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு படு வேகமாக படப்பிடிப்பை முடித்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் துவக்கியுள்ளது. இது திரையுலகினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில், விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
.jpeg)
வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி
The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க்.
2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்..,
நடிகை ருஹானி சர்மா பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் சார் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதி சாரின் தீவிர ரசிகை நான், அவர் வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. எங்களுக்கு ஆதரவளிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. இயக்குநர் விகர்னனுக்கு எனக்கு நல்ல கதாப்பாத்திரம் தந்ததற்கு நன்றி. என் கோ ஸ்டார் கவின் அவர் எனக்கு நிறைய ஆதரவாக இருந்தார். கவினுடன் நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிகை, இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எனக்கு டான்ஸ் ஆட மிகச்சிறந்த பாடல்கள் தந்ததற்கு நன்றி. என்னை மிக அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. நவம்பர் 21 அனைவரையும் திரையரங்கில் சந்திக்கிறோம் நன்றி.
நடிகர் பவன் பேசியதாவது…,
இந்தப்படத்தில் நான் கஷ்டப்படவே இல்லை, கஷ்டப்பட்டதெல்லாம் தயாரிப்பாளர், இயக்குநர் தான். எனக்கு அரசியல்வாதி கேரக்டர் ஏசியில் தான் முழுக்க நடித்தேன். கிளைமாக்ஸ் மட்டும் என்னால் மறக்க முடியாது. ரெடின் கிங்ஸ்லியின் ஒரு காட்சி பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. கவின் சூப்பராக நடித்துள்ளார். வெற்றி சார் கடையைச் சாத்துகிறேன் என்றார், ஆனால் இந்த படத்திற்குப் பிறகு நிறையக் கடைகள் திறப்பார். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளராக மாறிவிட்டார் வாழ்த்துக்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது, அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது..,
இயக்குநர் வெற்றிமாறனை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு விகர்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். எனக்கு விகர்ணன் என்ற பெயர் கேட்டவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. மகாபாரத கௌரவர்களின் பெயர், அதை வைத்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள். எம் ஆர் ராதா மிகப்பெரிய ஆளுமை, அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் கொண்டு வந்ததற்கு நன்றி. ஆண்ட்ரியா மேடம் ஒரு படத்தை இயக்கி விட்டால், நடிகை பானுமதி சாதனையைச் சமம் செய்துவிடுவார். பாடுகிறார், நடிக்கிறார் இப்போது தயாரித்துள்ளார் அவர் வெல்ல வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் மிக நல்ல மனிதர், மிகப்பெரிய தயாரிப்பாளராக வாழ்த்துக்கள். ஒரு கவிதைக்கு ஆண் பால் இருந்தால் அது தான் கவின். டாடாவுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாஸ்க் அமைய வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எங்களுடனே இருப்பவர். குழந்தை தொழிலாளராக சினிமாவுக்குள் வந்தவர். சின்ன வயதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு பாடல் பாடியவர், இப்போது அவர் இரண்டு தேசிய விருதுகள் வாங்கிவிட்டார். ஆர் டி ராஜசேகர் என் குருநாதர் அவர் மாதிரி கேமரா யாராலும் பண்ண முடியாது. கேமரா மாஸ்டர்களில் ஒருத்தர் அவர். மனதால் மிக உற்சாகமான மனிதர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாஸ்க் மிகப்பெரிய வெற்றி பெறட்டும் நன்றி.
ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்து, நாம் செய்யும் உழைப்பிற்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். டிரெய்லர் வந்த பிறகு எல்லோரும் பாராட்டினார்கள். படத்தின் வெற்றி இயக்குநரின் கையில் உள்ளது. கவின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா இதுவரை செய்யாத ரோல் செய்துள்ளார். ருஹானி சர்மா மிக அழகாக இருக்கிறார். வெற்றி சார் ஷுட்டிங்க் ஸ்பாட்டுக்கு அதிகம் வரமாட்டார். ஆனால் அவர் வழிகாட்டுதல் இருந்தது. ஜீவி சார் ரசிகன் நான், அவர் இசை அருமையாக வந்துள்ளது. சொக்கு சாருடன் நிறையப் பழகியுள்ளேன் அவர் தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் நன்றி
கலை இயக்குநர் விஜய் ஐயப்பன் பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பு தந்த சொக்கலிங்கம் சாருக்கு நன்றி. எனக்கு மிக உறுதுணையாக இருந்த இயக்குநருக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி .
எடிட்டர் R ராமர் பேசியதாவது..,
மிக்க மகிழ்ச்சி. வெற்றி சார் என்னை நிறைய ஏமாற்றிவிட்டார் அவர் டிரையாக செய்து செய்து, கலராக எதாவது தாருங்கள் என்று ஏங்கிய நேரத்தில் மாஸ்க் தந்து ஆச்சரியம் தந்தார். ஜீவி சார் இசையைக் கேட்டு நிறைய முறை மிரண்டிருக்கிறேன். அசுரன் பிஜிஎம் இப்போது பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும். மாஸ்க் படத்தையும் தாங்கியுள்ளார். அவர் இசை ஆட வைக்கிறது. சொக்கலிங்கம் ஐயாவிற்கு நன்றி. கவின் சார் உங்களுக்காக இந்தப்படம் பேசும். ஒரு ஹீரோவை ஃப்ரேமில் பார்க்கும்போது யாரவது ரிசம்பிள் எடுத்து செய்வார்கள் ஆனால் கவின் இப்படியும் செய்ய முடியுமா என ஆச்சரியப்படுத்திவிட்டார். ஆண்ட்ரியா மேடம் ஒரு அவதாரம் எடுத்துள்ளார் இது அவருக்குத் திருப்புமுனையாக இருக்கும். தயாரிப்பாளராக ஜெயிக்க வாழ்த்துக்கள். ருஹானி சர்மா பார்க்கும் போது டாப்ஸி ஞாபகம் வந்தது, திரையில் அந்த ஃபீல் தந்துள்ளார். அவர் மிகப்பெரிய இடத்திற்கு வர வாழ்த்துக்கள். பவன் சார் நடிப்பைப் படம் பார்க்கும் போது என்ஜாய் செய்வீர்கள். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள். சொக்கு சார் அடுத்தடுத்து படம் செய்ய வாழ்த்துக்கள். விகர்னன் கதை சொன்ன போதே ஆச்சரியமாக இருந்தது. படமாக இன்னும் சிறப்பாக வந்துள்ளது. அவ்வளவு உழைப்பை அனைவரும் தந்துள்ளார்கள். இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் வெற்றிமாறன் சாருக்கு நன்றி. நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் நன்றி.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது..,
இப்பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சொக்கலிங்கம், இயக்குநர் விகர்ணன், ஆண்ட்ரியா மேடம் மற்றும் கவின் அனைவருக்கும் நன்றி. விகர்னன் ஒவ்வொரு சீனையும் செதுக்கி செதுக்கி எடுத்துள்ளார். ஆர் டி ராஜசேகர் சாருடன் மூன்றாவது படம் செய்துள்ளேன் நன்றி சார். பவனும் நானும் டான்ஸர்ஸ், பல வருட பழக்கம். அவரை வில்லனாகவே மாற்றிவிட்டார்கள் அவர் ஒரு நல்ல டான்ஸர்.இந்தப்படத்தில் பார்ப்பீர்கள். ஜீவி ஏற்கனவே இரண்டு தேசியவிருது வாங்கிவிட்டார், இனிமேல் சாதிக்க ஏதுமில்லை. விஜய் சேதுபதியுடன் ஒரு படம் நடித்துள்ளேன் மிகவும் இயல்பானவர். ஆண்ட்ரியா மேடம் அவருக்கு இந்தப்படம் மூலம் பணம் கொட்டட்டும். வெற்றிமாறன் சார் தமிழ் சினிமாவின் பெருமை. அவர் மேற்பார்வையில் நானும் நடிப்பது பெருமை. கவின் கூட இருப்பவர்களை அணைத்துக் கொள்வார், அவருக்கு இந்தப்படம் நல்ல படமாக அமையும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் நெல்சன் பேசியதாவது..,
நான் அதிகம் விழாக்களுக்குச் செல்வதில்லை, இந்த விழாவிற்கு வரவேண்டுமென 6 மாதம் முன்பே வெற்றிமாறன் சார் சொல்லி விட்டார். இந்த கதை கேட்ட போது, இதற்கும் வெற்றிமாறனுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைத்தேன். படுபயங்கர குதர்க்கமான கதையாக இருந்தது. இயக்குநரைப் பார்த்தே ஆக வேண்டும் என நினைத்தேன், விகர்ணன் எல்லா க்ரைமுக்கும் செட்டாவது போல் தான் இருந்தார். அவர் சொன்னதையெல்லாம் எடுக்கவே முடியாது. இந்தக்கதை ஐடியா எல்லாம் மிகவும் புதுசாக இருந்தது.விகர்ணன் கதை, கவின் ஹேட்டர் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ஆனால் வெற்றிமாறன் சார் அதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு புது எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஜீவி சார் மியூசிக் சூப்பாராக வந்துள்ளது. கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே, கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான். ஆண்ட்ரியா மேடமுக்கு சவாலான கேரக்டர் வாழ்த்துக்கள். ரெடினை கண்ட்ரோலாக நடிக்க வைத்திருந்தார்கள் வாழ்த்துக்கள். ஒரு குழுவாக அனைவரும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்.
ஜீவி பிரகாஷ் குமார் பேசியதாவது..
மாஸ்க் டீமில் எல்லோருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள், நான் கடைசியாக தான் வந்தேன். ஆண்ட்ரியா மேடமுக்கு வாழ்த்துக்கள். அந்நியன் படத்தில் அவர் முதன் முதலில் பாடும் போது நான் அவர் அருகிலிருந்தேன், அப்போதிலிருந்து அவரைத் தெரியும். அவர் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார், அவருக்கும் சொக்கலிங்கம் சாருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி சார் பவன் சொன்ன மாதிரி திரும்ப கடையை திறக்க வாழ்த்துக்கள்.விகர்ணன் வெற்றிமாறன் சார் சாயலே இல்லாமல் கதை சொன்னார், ஆச்சரியமாக இருந்தது. இந்தப்படம் பரபரவென இருக்கும். ஆர் டி ராஜசேகர் நாங்கள் சினிமாவுக்கு வரும்போதே பெரிய கேமராமேன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கவின் சூப்பராக நடித்துள்ளார். ருஹானி பெரிய ஹீரோயினாக வாழ்த்துக்கள். மாஸ்க் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகை, தயாரிப்பாளர் ஆண்ட்ரியா ஜெரேமியா பேசியதாவது..,
நான் ஒரு விழாவில் பங்கு கொண்டு நீண்ட வருடம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு படம் விரைவில் வருகிறது மகிழ்ச்சி. கவினுக்கு இது மிகவும் முக்கியமான படம். ருஹானிக்கு முதல் படம். சொக்கு சாருக்கு தயாரிப்பாளராக முக்கியமான படம். எங்கள் அனைவருக்கும் மெண்டார் வெற்றிமாறன் சார், அவர் தான் எங்களின் பப்பெட் மாஸ்டர். ஆர் டி ராஜசேகர் அவர் கேமரா செய்தால் எல்லோரும் அழகாக இருப்பார்கள். என்னோடு உழைத்த அனைத்து நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றிகள். படம் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் விகர்ணன் பேசியதாவது..,
என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் படத்தில் உதவிய வெற்றிமாறன் சார் உதவியாளர்களுக்கும் நன்றிகள். நான் இங்கு நிற்க காரணமான ஆண்ட் ரியா மேடமுக்கு நன்றி. அவர் தான் வெற்றிமாறன் சாரிடம் என் கதையைப் படிக்கத் தந்தார். சொக்கலிங்கம் அண்ணா நிறையப்பேரை வளர்த்துவிட்டுள்ளார், என்னையும் வளர்த்துவிட்டதற்கு நன்றி. ஆர் டி ராஜசேகர் அவர் ஒரு ட்ரீட். ஷீட்டிங்கில் அவர் இருந்தாலே ஜாலியாக இருக்கும். நெல்சன் அண்ணாவே ஒரு ஜானர் தான் அவர் இந்தப்படத்தில் இருக்கிறார் ஆனால் யாருக்கும் தெரியமாட்டார். அவருக்கு நான் நிறையக் கடமைப்பட்டுள்ளேன். விஜய் சேதுபதி அண்ணா.. அசோக் செல்வன் என் நண்பன், உங்களைப் பற்றி நிறையப் பேசுவான். நீங்கள் நல்ல இதயம் கொண்ட மனிதர். வாழ்த்த வந்ததற்கு நன்றி. ருஹானி சர்மா திறமையானவர் சிறப்பாக நடித்துள்ளார். நண்பர் ஜீவி, நீங்கள் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்தீர்கள். நீங்கள் தந்த இசைக்கு நன்றி. ரெடின் ஒரு அழகான ரோல் செய்துள்ளார். ராமரை எடிட்டிங்கிற்கு கூட்டி வந்ததற்கு வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ஸ்டைலீஷாக எடிட் செய்துள்ளார். ஐயப்பன் அண்ணாவுடன் நிறையப்படம் சேர்ந்து செய்வேன் என் கூடவே இருந்தார் அவருக்கு நன்றி. கவின் ப்ரோ படத்தில் அவர் பெயர் வேலு. இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய் என்பார்களே, அந்த மாதிரி ஒரு ரோல். அவருக்குள் ஒரு கெட்டவனும் இருப்பான், நல்லவனும் ஓரத்தில் இருப்பான். அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. அவர் மாதிரி ஒரு லெஜண்ட் நம் திரைத்துறையில் இருப்பது நமக்குப் பெருமை. வெற்றிமாறன் சார் அட்வைஸ் கேட்டால் நீங்கள் வாழ்க்கையில் வளர்வீர்கள். அவர் தந்த வழிகாட்டுதலுக்கு நன்றி. நான் உங்களுடன் படம் செய்வதை என் வீட்டிலேயே யாரும் நம்பவில்லை எனக்கு நீங்கள் தந்த வாய்ப்புக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது..,
விகர்னன் மிக அருமையாகப் பேசினார். வெற்றிமாறன் மெண்டார் என்றார்கள். பேச்சுக்கும் அவர் தான் மெண்டார் தான் போல. இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன் மிக மிகப் பிடித்திருந்தது. விடுதலை ஷீட்டிங்கில் இந்தப்படம் ஆரம்பிப்பதாகச் சொன்னார். மாஸ்க் கதை, எம் ஆர் ராதா, என ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்த விழாவில் எல்லோரும் அட்டகாசமாகப் பேசினார்கள். ராமரில் ஆரம்பித்து எல்லோரும் அசத்தலாகப் பேசினார்கள். வெற்றி மாறன் மாஸ்கே இல்லாத எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு மனிதர். விடுதலை ஷீட்டிங்கில் வெற்றிமாறன் சாரிடம் ராமர் மாட்டியிருப்பதாக நினைத்தேன், ஆனால் அவர் பேசியதைக் கேட்ட பிறகு தான் ராமரிடம் தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் எனத் தோன்றியது. கவினுக்கு வாழ்த்துக்கள் திரையில் அவர் வசீகரமாக இருக்கிறார். அவரை திரையில் பார்க்க பிடித்திருக்கிறது. இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம், ஆனால் இது தான் பயிற்சி. இது நீண்ட காலம் தாங்கும் வாழ்த்துக்கள். சின்ன வயதில் பீச்சில் சிலை பார்த்தேன் அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன் இன்னும் அப்படியே இருக்கிறார். அதே அழகு. ருஹானி அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஜீவி சார் நான் எந்தப்படம் கேட்டாலும் ஒத்துக்கொண்டதே இல்லை அவர் இசை ரொம்ப பிடிக்கும் அவருடன் படம் செய்ய ஆசை வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் சாருக்கு வாழ்த்துக்கள். அர்ச்சனா நிறையப் படம் நடிக்க வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விநியோகஸ்தர் அனீஷ் பேசியதாவது..,
இந்தப்படம் நான் பார்த்து விட்டேன். ஆண்ட் ரியா மேடம் சொன்னது போல் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. படம் முழுக்க நெல்சன் சார் ஸ்டைல் இருக்கிறது. ரெடின் வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்போம். ஜீவி சார் அசத்திவிட்டார். வெற்றிமாறன் சார் உங்கள் பங்களிப்புக்கு நன்றி. கவின் சார் இந்தப்படத்திற்குப் பின் பெரிய இடத்திற்குச் செல்வீர்கள். நவம்பர் 21 படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிபபாளர் தாணு பேசியதாவது..,
என் அகம் ஆளும் வெற்றிமாறன் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துக்கள். மாஸ்க் பட பாடல்களும் முன்னோட்டமும் எங்கெங்கும் வெற்றியைப் பெறட்டும். வெற்றிமாறன் சிறப்பான படைப்பாளி, நண்பரைத் தயாரிப்பாளராக மாற்றியிருக்கும் மனதிற்காகவே வாழ்த்துக்கள். ஜீவி இசை எட்டுத்திக்கும் புகழ் பெறுகிறது. கவின் சிறப்பான நடிகராக மிளிர்கிறார். அனைவரும் வெற்றி பெற வாழ்த்த&
'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!
இளம் நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், சமீபத்தில் வெளியான சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிப்பில், “புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான சிவம் பஜே ( Shivam Bhaje ) விமர்சகர்களிடம் பெரும் பாராட்ட்டுக்களைப் பெற்றது. தற்போது கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இயக்குநர் பரத் தர்ஷன் எழுதியுள்ள மற்றொரு சுவாரஸ்யமான, பொழுதுபோக்கு கதையை தயாரிக்கவுள்ளது.
இந்த திரைப்படத்தின் பிரம்மாண்டமான துவக்க விழா இன்று ஹைதராபாத்தில், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் திரு வீர் , மசூடா ( Masooda ) மற்றும் ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show ) போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து புகழ் பெற்றவர். இப்போது அவர் நடிக்கும் இந்த புதிய படம் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக, பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்காக திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ரசாகர் மற்றும் பொலிமேரா போன்ற படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு இப்படத்திற்கு இசையமைக்கிறார். பலகம் புகழ் திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். கா படத்தின் ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஸ்வயம்பு படத்தில் பணியாற்றி வரும் அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார். பிரபல பாடலாசிரியர் பூர்ணசாரி இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார்.
இந்தப் படத்தின் புது படப்பிடிப்பு வரும் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.
'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’
மரபும் மாயையும் கலந்த அற்புதமான ஆன்மீக பயணத்துக்கு தயாராகுங்கள்! இளம் நடிகர் விராட் கர்ணா தன் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான பான் இந்திய அனுபவத்தை, நாகபந்தம் மூலம் வழங்கவுள்ளார். தொலைநோக்கு இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களின் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி அவர்களின் பெருமித தயாரிப்பாக உருவாகி வருகிறது நாகபந்தம்.
இது சாதாரண படம் அல்ல — ஆன்மீகத்தையும் ஆக்ஷனையும் இணைக்கும் மாபெரும் புராண திரில்லர்! விராட் கர்ணா தனது கதாபாத்திரத்திற்காக, முற்றிலும் தன் உடலை மாற்றும் வகையில், பெரும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து வருகிறார். அவரது அர்ப்பணிப்பும் தீவிர உழைப்பும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.
இயக்குநர் அபிஷேக் நாமா தலைமையில் உருவாகும் இந்தப் படம், பக்தியும் அதிரடி அம்சங்களும் இணைந்த ஒரு அற்புதமான திரை அனுபவமாக இருக்கும். ஆழமான ஆன்மீக கருப்பொருளுடன் கூடிய வணிக ரீதியான கூறுகளையும் கொண்ட இந்தக் கதை, ஆன்மீக சினிமாவுக்கே புதிய வரையறையை தரவுள்ளது.
படத்தின் முக்கிய சிறப்பம்சமாக உருவாகும் “ஓம் வீர நாகா” எனும் பக்திப் பாடல் தற்போது பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
இப்பாடல் ராமானாயுடு ஸ்டூடியோவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட சிவன் கோவில் செட்டில் படமாக்கப்படுகிறது. ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் தலைமையிலான குழு, அந்தக் கோவிலின் தெய்வீகத் தோற்றத்தை, உயிரோட்டமூட்டும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
இப்பாடலுக்கான இசையை அபே மற்றும் ஜுனைத் குமார் ஆகியோர் அமைத்துள்ளனர், வரிகளை ஸ்ரீ ஹர்ஷா எழுதியுள்ளார்.
மேலும், பாலிவுட்டின் பிரபல நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யா இந்தப் பாடலுக்கான நடன வடிவமைப்பை மேற்கொள்கிறார்.
மேலும் இந்தப் பாடல் கார்த்திகை மாதத்தில் படமாக்கப்படுவது அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை இன்னும் உயர்த்துகிறது.
இந்தப் படம் இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோவில்களின் பின்னணியில் உருவாகி, நூற்றாண்டுகள் பழமையான நாகபந்தம் எனப்படும் மறைக்கப்பட்ட ஆன்மீக மரபை வெளிக்கொணர்கிறது.
பத்மநாபசுவாமி, புரி ஜகந்நாதர் போன்ற கோவில்களில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷக் கதைகளில் இருந்து ஊக்கம் பெற்று, புராணமும் மர்மமும் கலந்த ஒரு தெய்வீகத் திரில்லராக இது உருவாகி வருகிறது.
படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சௌந்தர்ராஜன் S மேற்கொள்ள, எடிட்டிங் பணிகளை R.C. பிரணவ் மேற்கொள்கிறார்.
நாகபந்தம் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
விரைவில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் துவங்கவுள்ளன.
- உலக செய்திகள்
- |
- சினிமா













