சற்று முன்

தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |   

சினிமா செய்திகள்

தனுஷ் சொல்வதை கேளுங்கள்
Updated on : 21 March 2020

ஒரு மூன்று மாதத்துக்கு முன்னால் கொரோனா வைரஸ் நாம் எல்லோரையும் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நம் கையில்தான் உள்ளது. பிரதமர் கேட்டுக்கொண்டபடி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாம் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது. அப்படி நாம் இருப்பதால் நமது மருத்துவர்களுக்கு இந்த வைரஸை எதிர்த்து போராடுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.



 



டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள், அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் உயிரையும் பணயம் வைத்து போராடி வருகின்றார்கள். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வீட்டிலேயே இருப்பது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டும்.



 



நாளை ஒரு நாள் மட்டுமின்றி இன்னும் சில நாட்களுக்கு மிக அவசியம் என்றால் மட்டும் தேவையான பாதுகாப்புடன் வெளியே செல்ல வேண்டும். அவசிய தேவை இல்லையெனில் யாரும் வெளியேசெல்லாமல் வீட்டிலேயே இருக்கவும். ஒரு சில இளைஞர்கள் அசட்டு தைரியத்தால் வெளியே செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும் ஆபத்தை தேடி கொள்கின்றனர். மற்றபடி அரசு மற்றும் டாக்டர்கள் கூறியவற்றை பின்பற்றி பாதுகாப்பாக இருப்போம். நாளை மாலை ஐந்து மணிக்கு நமக்காக போராடி வரும் டாக்டர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்வோம். இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா