சற்று முன்

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |    பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் குரலில் அரங்கேற்றப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல்!   |    நகரின் சுழற்சியும் குடும்ப உறவுகளும் கலந்த “கான் சிட்டி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!   |    “VVVSI.com” கட்டணமில்லா வேலைவாய்ப்பு இணையதளம் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்   |    விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக்   |    “காந்தி டாக்ஸ்” வார்த்தைகளின்றி உணர்ச்சிகளை உருமாற்றும் புதிய திரைப்பட டீசர் வெளியாகியது   |    'ஒளடதம்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு   |    நெட்ஃபிலிக்ஸ் 2026 தமிழ் திரைப்பட வரிசை வெளியீடு   |    சாய் துர்கா தேஜ் கிராமத்து அவதாரத்தில் ‘SYG (சம்பரால எட்டிகட்டு)’ சங்கராந்தி போஸ்டர் வெளியீடு   |    பிரமாண்ட புராண ஆக்ஷன் ‘நாகபந்தம்’ – நபா நடேஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு   |    2026 கோடை வெளியீட்டிற்கு தனுஷ் நடிப்பில் தயாராகும் மெகா திரில்லர்!   |    காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’   |    ஜப்பானை கலக்க வரும் ‘புஷ்பா2: தி ரூல்’, டோக்கியோவில் புரமோட் செய்து வரும் அல்லு அர்ஜுன்!   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் கனவு கூட்டணி பிரம்மாண்ட மெகா திரைப்படம்!   |   

சினிமா செய்திகள்

25 நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்
Updated on : 21 March 2020

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் பஷீர்.. அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதுகுறித்து அரசாங்கம் ஒருபக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் தன் பங்கிற்கு கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கியுள்ளார் பஷீர்.



 





“கொரோனா கொரோனா வராதே.. எங்களை நீ என்றும் தொடாதே ” என்கிற இந்தப்பாடலை அறிவுமதி எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருக்கும் சஜித்துல்லா என்பவர் இசையமைத்துள்ள இந்தப்பாடலை பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து விதமான பின்னணிகளும் இடம்பெறுமாறு இரண்டே நாட்களில் அற்புதமாக படமாக்கியுள்ளார் பஷீர். 



இந்தப்பாடலில் பவர்ஸ்டார் உள்ளிட்ட 25 நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்துள்ளனர். இவர்கள் அத்தனை பேருக்குமே கொரோனா சோதனை செய்துவிட்டு அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு அதன்பின்னரே இந்த பாடலை படமாக்கியுள்ளார் பஷீர்.



இன்று மாலை வெளியாகியுள்ள இந்த விழிப்புணர்வு பாடலில் தமிழக அரசுக்கும் தன்னலம் பாராது மக்களுக்காக இரவு பகலாக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பஷீர்..



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா