சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

மைனா நந்தினியின் போலி ஃபேஸ்புக் ஐடியால் தூக்கத்தை தொலைத்த மாவட்ட செயலாளர்
Updated on : 28 February 2020

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் குருநாதன். இவர் சரத்குமாரின் ச.ம.க ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினியின் பேக் ஃபேஸ்புக் ஐடியால் ராத்திரி நேரத்தில் தனது தூக்கத்தை தொலைத்ததோடு, மனரீதியாக பல அவஸ்தைகள் பட்டதாக குமுறியுள்ளார். 



 



நடிகர், நடிகைகள் பெயரில் போலி சமூக வலைதள பக்கங்கள் மற்றும் முகநூல் பக்கங்கள் அதிக அளவில் உலா வருகிறது அந்த வகையில் வம்சம் படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை மைனா நந்தினி.   



 





நடிகை மைனா நந்தினி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கிய மர்ம நபர்கள், அந்த பக்கத்தில் குருநாதனின் போன் நம்பரைப் அப்டேட் பண்ணியுள்ளனர். இது மைனா நந்தினியின் மொபைல் நம்பர் என நினைத்துப் பலரும் இரவு பகல் பாராமல் குருநாதனுக்கு போன் செய்திருக்கின்றனர்.



 



குருநாதனை மைனா நந்தினி என நினைத்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என்று கூறுவதோடு மட்டுமின்றி ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர். 



 



போன் கால் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்திருக்கிறது. சுமார் 4 மாதங்களாக இந்த போன் கால் கொடுமையை அனுபவித்த குருநாதன் பொறுமையிழந்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.



 



இந்த புகாரின் மீது தற்போது காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா