சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் ஓர் அலசல் “கல்தா”
Updated on : 27 February 2020

புதுமுகங்கள் நடிப்பில் இவ்வாரம் வெளியாகவுள்ள  “கல்தா” திரைப்படம் அழுத்தமான கருத்துகளை, சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் பின்புலத்தை அலசியதில் திரை ஆர்வலர்களை, விமர்சகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இத்திரைப்படம் தென் தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில்,அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், மக்கள் படும் துயரத்தை, அவலத்தை அழுத்தமாக  பேசுகிறது. சமூகத்திற்கு அவசியமான கருத்தை எடுத்து கையாண்டதில் இயக்குநர் ஹரி உத்ரா திரை ஆர்வலர்களால் பாராட்டு பெற்று வருகிறார். 



 



 

இயக்குநர் ஹரி உத்ரா கூறுகையில் 



 





படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்றாலும் சிறப்பான நடிப்பை தந்து கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர். குறிப்பாக அறிமுக நாயகன் சிவா நிஷாந்த் இப்படத்திற்காக பாக்ஸிங், சிலம்பம், சைக்கிளிங், நடனம், நடிப்பு என அனைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டு ஒரு புதுமுகம் என்கிற உணர்வே வராமல் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். “கல்தா” ரிலீஸாகும் முன்னரே அவர் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது எனக்கு பெரு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. நாயகி ஐரா படத்திற்கு மற்றுமொரு பலமாக இருந்தார். வேலையில் அவரது அர்ப்பணிப்பு அனைவரையும் ஈர்த்தது. அவரது நடனத்திறமை குறிப்பாக குச்சிப்புடி, பரதநாட்டியம் போன்றவற்றில் அவர் சிறந்து விளங்கியதால்,  அவரால் எளிதாக முகபாவங்களை, நடிப்பை கையாள முடிந்தது. இருவருமே பெரிய உயரங்களுக்கு செல்லக்கூடியவர்கள். இவர்கள் இருவரை போலவே படத்தில் நடித்திருக்கும் மற்ற கலைஞர்களும் கண்டிப்பாக மக்களால் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்படுவார்கள். 

 



 





“கல்தா” இயக்குநர் ஹரி உத்ராவின் மூன்றாவது படைப்பாகும். விம்ரசகர்களால் கொண்டாடப்பட்ட “தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும்” படங்களை இயக்குநர் ஹரி உத்ரா இதற்குமுன் இயக்கியிருந்தது குறிப்பிடதக்கது. 

 



 





மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில்  மலர்க்கொடி, ரகுபதி மற்றும்  செ.ஹரி உத்ரா,  இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன்  கமர்ஷியல்  படமாக இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகன் சிவா நிஷாந்த், மேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆண்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், SMT கருணாநிதி, காக்கா முட்டை சசி, சுரேஷ், முத்து வீரா, பழைய ஜோக் தங்க துரை, ராஜ சிம்மன் ஆகியோர் நடித்துள்ளனர். 



 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா