சற்று முன்

அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை   |    அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ   |    அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்   |    FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்   |    அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது   |    மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம்   |    திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்   |    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்   |    அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்   |    இலண்டனில் இருந்து வீடு திரும்பிய மணிரத்னம் மகன் தனி அறையில் தனிமை - காரணம் கொரோனா தாங்க   |    தனுஷ் சொல்வதை கேளுங்கள்   |    விஜய்யின் 66வது படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா! தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க   |    விஜய் பயந்துவிட்டார்! - பிரபல தயாரிப்பாளர் தகவல்   |    25 நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்   |    டிக் டாக் பெண்களை எச்சரிக்கும் படம்   |    'அநியாயமா கொன்னுட்டாங்கம்மா' சேரனின் கதறல்   |    சிவகார்த்திகேயன் பட காட்சியுடன் ஒத்துபோகும் மோடியின் உரை   |    ஆபாச இணையதளத்தில் ஆபாசமாக மீராமீதுன் - சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்குமா!   |    அதர்வா முரளிக்கு வில்லனாகும் நந்தா   |    பட வாய்ப்புக்காக பலருடன் படுக்கையை பகிர்ந்துகொண்டேன் - நடிகை வெளியிட்ட பகீர் தகவல்   |   

சினிமா செய்திகள்

அருண் விஜய் படத்துக்காக 45 லட்ச ரூபாயில் பிரமாண்டமான அரங்கம்
Updated on : 26 February 2020

“மாஃபியா” ஓடிய தியேட்டர்களில் கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் ரசிகர்களை நேரடியா சந்திக்க, அவர்கள் காட்டிய அளவிலா அன்பு, உற்சாக வரவேற்பில் மனதெங்கும்  புத்துணர்வு பரவி, பெரு மகிழ்ச்சியில் மிதந்து வருகிறார் அருண் விஜய். தற்போது வெற்றியை கொண்டாடும் நேரமே இல்லாமல் அடுத்த அதிரடிக்கு “சினம்” படத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சிக்கு தயாரகிவிட்டார் அருண் விஜய். இதில் குறிப்பிடதக்கது என்னவென்றால் இந்த ஆக்‌ஷன் காட்சிக்காக 45 லட்சம் செலவில் மிகப்பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.  

இயக்குநர் GNR குமரவெலன் இது குறித்து கூறியதாவது...  

இந்த ஆக்‌ஷன் காட்சி படத்தில் மிக முக்கியமான  கட்டத்தில் நடைபெறக்கூடிய  கதையில் முக்கிய  பங்கு வகிக்கக்கூடியது. இந்த காட்சி பற்றி விவாதித்த போது இதனை நேரடியாக பொது இடத்தில் எடுப்பது இயலாத காரியம் என்பது தெரிந்தது. ஆதலால் இதனை அரங்கு அமைத்து எடுக்கலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் விஜயகுமார் இதற்கு ஒத்துக்கொள்வரா ?  மிகப்பெரிய செலவு செய்ய வேண்டி வருமே !எனத் தோன்றியது. ஆனால் நானே எதிர்பாரா விதமாக “செலவு முக்கியமில்லை படத்தின் தரமே முக்கியம், காட்சி சரியாக திரையில் வரவேண்டும்” என அவர் சொன்னார். கலை இயக்குநர் மைக்கேல் மற்றும் அவரது குழு பிரமிப்பான உழைப்பில் தத்ரூபமாக , உண்மையான இடம் போலவே அரங்கை உருவாக்கினார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சியை சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா வெகு அற்புதமாக வடிவமைத்துள்ளார். அருண் விஜய்யின் ஸ்டைலீஷ் தோற்றமும் பெரும்  அர்ப்பணிப்பும் இக்காட்சியை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.  

இந்த ஆக்‌ஷன் காட்சியில் அருண் விஜய்யுடன் காளிவெங்கட்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படப்பிடிப்புடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது. 

Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார்.  அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய  பாத்திரத்தில் நடிக்கிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா