சற்று முன்

தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |   

சினிமா செய்திகள்

அஜித் நிராகரித்ததை ஒத்துக்கொண்ட ரஜினி
Updated on : 26 February 2020

அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் என நான்கு படங்களை தந்த சிறுத்தை சிவா அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் படம் 'தலைவர் 168'. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் வழங்கும் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசை  D. இமான். இதில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு  சுந்தர், நயந்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஸ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.



 



கிராமத்து பின்னணியில் கதை உருவாகி வரும் அண்ணாத்த படம் பற்றி ஒரு சுவராஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன வென்றால், அண்ணாத்த படத்தின் கதை அஜித்துக்காக எழுதிய கதை. சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்திடம் கதை சொல்ல அவரோ இது வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். அந்த கதையை பத்திரமாக வைத்திருந்த வைத்திருந்த சிவா தற்போது அதை ரஜினியிடம் கூற அவரோ, இந்த கதை நன்றாய் இருக்கிறது அதனால் இதை நாம பண்ணலாம் என்று கூறி நடித்துக் கொண்டிருக்கிறாராம்.



 





கிராமத்து பின்னணி என்பதால் அந்த கிராம வாசனையோடு கூடிய தோற்றத்தில் ரஜினி காட்சி தருவார் என்பதில் ஐயமில்லை. மேலும் அண்ணாத்த படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் சிவாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால்  சற்று அதை பற்றி யோசிக்கவேண்டியுள்ளது என்று அவரை பற்றி தெரிந்தவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.





 



படம் பற்றிய அப்டேட்ஸ் கொடுக்கும் விஷயத்தில் சிவா எப்படி என்பது அஜித் ரசிகர்களை கேட்டால் கதை, கதையாக சொல்லி கதறுவார்கள் ஆகையால் இன்று அண்ணாத்த படத்தை பற்றிய அப்டேட்ஸ்களை  ரஜினி ரசிகர்கள் சிவாவிடம் கேட்பதை பார்க்கும் அஜித் ரசிகர்கள் மனதிற்குள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நகைக்கின்றனர் 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா