சற்று முன்

ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |    மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது!   |    இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |   

சினிமா செய்திகள்

வில்லன் நடிகருக்கு இரண்டாவது திருமணம்!
Updated on : 25 February 2020

சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்கள் காலதாமதமாக முதல் திருமணம் செய்துக் கொண்டாலும், இரண்டாவது திருமணத்தை பொருத்தவரை காலதாமதம் செய்வதில்லை. அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த சில நாட்களிலேயே தனது இரண்டாவது திருமணம் குறித்து அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.



 



மலையாள சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் செம்பன் வினோத். 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நாயக்கன்’ என்ற மலையாலப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான செம்பன் வினோத், வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என்று பல வேடங்களில் நடித்து வருகிறார். ’கோலிசோடா 2’ மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான இவர், அதன் பிறகு வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. இதற்கிடையே அஜித்தின் ‘வலிமை’ படத்தில் செம்பன் வினோத் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அது வெறும் வதந்தி என்று படக்குழு கூறியதோடு, செம்பன் வினோத்தும் அதில் உண்மை இல்லை, ஆனால் வதந்தி உண்மையானால் சந்தோஷம், என்று கூறியிருந்தார்.



 





 



சுனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட செம்பன் வினோத், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.



 



இந்த நிலையில், மரியம் தாமஸ் என்ற சைக்காலிஜிஸ்ட்டை தனது சொந்த ஊரான கோட்டயத்தில் செம்பன் வினோத், இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.



 



தற்போது ஃபாஹத் பாசில் நடிக்கும் ’ட்ரான்ஸ்’ என்ற படத்தில் நடித்து வரும் செம்பன் வினோத், சிறந்த நடிகருக்கான விருதை அவர் IFFK 2018 ல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா