சற்று முன்

தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |    மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' பட டீசர் வெளியானது!   |    'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |   

சினிமா செய்திகள்

இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய்
Updated on : 24 February 2020

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘மாஃபியா’ பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கும் இப்படத்தின் வெற்றியை அருண் விஜய் ரசிகளுடன் கொண்டாடும் விதமாக, திரையரங்களுக்கு விசிட் செய்து வருகிறார்.



 



அந்த வகையில், சென்னையில் பல திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்த அருண் விஜய், சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்தார்.



 



 



இது குறித்து அருண் விஜயிடம் கேட்டதற்கு, “கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய  நட்சத்திரங்களை கண்மூடித்தனமாக கொண்டாடுவதில்லை. அவர்கள் தரமான படங்களையே கொண்டாடுவார்கள். நல்ல படங்களுக்கு பெரும் வரவேற்பு தருவார்கள். நான் அவர்களை சந்தித்தபோது அவர்கள் காட்டிய அன்பில்,  உணர்வுகளின் குவியலில் சிக்கி மனம் நெகிழ்ந்து போனேன். அவர்கள் தந்த வரவேற்பும், அன்பும் மறக்க முடியாதது. பலர் தனித்தனியாக வந்து படத்தின் தொழில்நுட்ப அம்சங்களை தனித்தனியே குறிப்பிட்டு பேசியது பெரும் ஆச்சர்யமாக இருந்தது. தயாரிப்பு தரப்பான Lyca Productions மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு பெரும் நன்றிகள். என் தந்தை என்னிடம் அடிக்கடி “உண்மையான வெற்றி என்பது தியேட்டர் உரிமையாளர்களின் முகத்தில் வழியும் புன்னகையில் இருக்கிறது” என்பார். அதை நேரில் கண்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது. முன் திரையிடல் காட்சிகள், விமர்சனங்கள், ரசிகர்களின் கொண்டாடங்களுக்கு பிறகு கோயம்புத்தூர் முதலாக அனைத்து இடங்களிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்திய செய்திகள் மேலும் மகிழ்ச்சியை கூட்டியுள்ளது.” என்றார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா