சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணின் அடுத்த படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில்
Updated on : 22 February 2020

சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு பிறகு சமந்தா  தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கில் மஜிலி, ஓ பேபி, மன்மதுடு 2, ஜானு உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருந்தார். எனினும் தமிழ் ரசிகர்கள் அவரை பார்க்கமுடியவில்லையே என ஏக்கத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தான், சமந்தா நடிக்கப்போகும் தமிழ் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 







கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணின் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் தரும் கதை இது. இதே படத்தில் நடிகர் பிரசன்னாவும் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது. 







முன்னதாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவும் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. அந்த படத்தில் சமந்தாவுடன் நயன்தாராவும் சேர்ந்து நடிக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். முழு நீள காதல் நகைச்சுவை படமாக வெளிவரப்போகிறது இந்த படம். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா