சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

சினிமா செய்திகள்

உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் 'சாதக பறவைகள்' சங்கர் இசையமைப்பாளராக அறிமுகம்
Updated on : 21 February 2020

தமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் 'சாதக பறவைகள்' சங்கர் 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.



 





வார்வின் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஐ ராஜா தயாரிக்க, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களில் முன்னணி இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.



 





இத்திரைப்படம் இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும்  புரட்சிகரமான நடவடிக்கைகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது.  தனிமனித வாழ்வின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இது அமையும்.



 





சாஸ்திரீய இசை அனைவருக்கும் புரியவில்லை என்ற போதிலும், ராகத்திலும் தாளத்திலும் மயங்கி, மொழியும் அர்த்தமும் புரியாமல் ரசித்து வந்த நிலையில்,  எளிய தமிழில் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் இசைப்பங்களிப்புப் போற்றுதலுக்குரியது. பெரும்பாலும் பக்தி இலக்கிய படைப்புகளை உருவாக்கிய அவர், திருவாசகம், பன்னிரு திருமுறைகளுக்கு அப்பாற்பட்டு எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் பாடல்களை உருவாக்கினார்.



 





அவரது மகனான ‘சாதக பறவைகள்’ இசைக்குழு அமைப்பாளர் சங்கர், உலகெங்கிலும் சுமார் 8000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர், தொடர்ந்து நடத்தியும் வருகிறார். தீவிர இசை ரசிகர், பல்வேறு இசை வடிவங்களில் முறையான தேர்ச்சி பெற்றவர். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல புதுமைகளை புகுத்தியிருக்கிறார்.



 





சமீபத்தில் இப்படத்தின் தீரத் தீர் எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 



 





தமிழ் சினிமாவில் 'அக்கப்பல்லா' என்றழைக்கப்படும் பாரம்பரிய முறையில், மிகக் குறைவான இசைக்கருவிகளின் துணையுடன், வாய்மொழியாகவே ஒரு முழுப்பாடலையும் வடிவமைத்திருக்கிறார். இப்பாடலை வைரபாரதி எழுதியிருக்கிறார்.



 





இப்படத்தில் விஜய் டிவி புகழ் பிராஜின், அறிமுக நாயகி ரியாமிகா, இயக்குனர் கே பாக்யராஜ், இமான் அண்ணாச்சி மற்றும் ஷகிலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.



 





வார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தயானந்தன் இயக்கத்தில், உருவாகியுள்ள 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா