சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா
Updated on : 04 February 2020

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ  சோழனால் கட்டப்பட்ட 

இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம்  24 ஆண்டுகளுக்குப் பிறகு  பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. 



 



 



தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள்.



 





அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள்.



 





இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை கொடுத்தது. இவர்களை தொடர்ந்து நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, ஹேமாமாலினி என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் வெற்றிக் 

கொடி நாட்டிய இவர்களும் தஞ்சையை சேர்ந்தவர்கள் தான்.



 





பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நடிகர் ராஜேஷ், நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஷங்கர் என்று அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக திகழ்பவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.



 





தஞ்சை மண்ணில் பிறந்தவர்களுக்கு கலை என்பது ரத்தத்தில் கலந்த ஒன்றாகும். அதனால் தான் பிற துறையில் ஈடுபட்டாலும், கலைத்துறையில் கால் வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில் கூட, தஞ்சையை சேர்ந்த தொழிலதிபரும், சமூக 

ஆர்வலருமான துரை சுதாகார், என்பவர் ‘களவாணி 2’ மூலம் நடிகராக வில்லனாக அறிமுகமாகி பாராட்டு பெற்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா