சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

“ஓ மை கடவுளே” டிரெய்லர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து சாதனை
Updated on : 04 February 2020

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன்  நடிகர் சூர்யா வெளியிட்டார். ஏற்கனவே வெளியான டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது வெளியான டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில்  2.5 மில்லியன் பார்வைகளை Youtube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. 









டிரெய்லரின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் படத்தின் கதையோட்டத்திற்கு ரசிகர்களை மிகச்சரியாக தயார்படுத்தும்படி அமைந்துள்ளதே ஆகும். முதலில் டிரெய்லர் படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. முடிவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி பாத்திரம் அசோக் செல்வனிடம் “கோல்டன் டிக்கெட்” ஒன்றை  தருவதாக அமைந்துள்ளது. 



 





பரபரப்பு கிளப்பியிருக்கும் இந்த டிரெய்லர் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறியதாவது...  “கோல்டன் டிக்கெட்”பற்றி இப்போது எதுவும் கூற முடியாது அது திரையில் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அந்த டிவிஸ்ட் படத்தை வெகுவாக சுவாரஸ்யபடுத்தும். இப்படம் காதல், ரொமான்ஸ், காமெடி கடந்து படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் அவர்களுக்கான அழுத்தமான பின்னணியுடன் உணர்வுபூர்வமாக இருப்பதாக இருக்கும். இந்த காதலர் தினத்திற்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப்படம் இருக்கும் என்றார். 

 





2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. 



 





அசோக் செல்வன், ரித்திகா சிங் நாயகன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் செதுபது மிக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா