சற்று முன்

மகிழ்ச்சியின் உச்சத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு   |    என்னை உலுக்கிய சம்பவம் - இயக்குனர் சங்கர்   |    படுக்கை அறை காட்சியால் சம்பளத்தை குறைத்த நடிகை ஆண்ட்ரியா   |    மைனா நந்தினியின் போலி ஃபேஸ்புக் ஐடியால் தூக்கத்தை தொலைத்த மாவட்ட செயலாளர்   |    சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் ஓர் அலசல் “கல்தா”   |    பத்திரிக்கையாளர்களை சந்தித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படக்குழுவினர்   |    ஹரீஷ் கல்யாண் வீட்டில் பிரியாணி விருந்து   |    அருண் விஜய் படத்துக்காக 45 லட்ச ரூபாயில் பிரமாண்டமான அரங்கம்   |    இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை - பா.ரஞ்சித்   |    அஜித் நிராகரித்ததை ஒத்துக்கொண்ட ரஜினி   |    'அக்கா குருவி' படத்திற்காக இணைந்துள்ள இயக்குநர் சாமியும் இளையராஜாவும்   |    வில்லன் நடிகருக்கு இரண்டாவது திருமணம்!   |    பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர்   |    விஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம்   |    சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு   |    விஜய்க்காக இப்படியெல்லாமா செய்வார்கள்!   |    விஜய்யின் அடுத்த படத்திற்கு சம்பளம் இவ்வளவா!   |    அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம்   |    இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய்   |    ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு! - கைதி செய்ய காத்திருக்கும் காவல்துறை   |   

சினிமா செய்திகள்

ரிஸ்க் எடுக்க துணிந்த காஜல் அகர்வால்
Updated on : 22 January 2020

கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:- ‘சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். ஒரு படத்திலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று விடுகிறவர்களும் இருக்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் குறிப்பிட்ட படத்தில் நடித்தால் நமக்கு பெயர் கிடைக்குமா அல்லது கெட்டுப்போகுமா என்ற பயமெல்லாம் இருந்தது.



 



 



இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி? எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன்.



 



 



இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்க ஆசைப்படுகிறேன். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்கிறேன். வெப் தொடரிலும் நடிக்க போகிறேன். சினிமாவில் இப்போதுதான் வந்த மாதிரி இருக்கிறது. கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு இன்னும் எனக்கு பிரகாசமான ஆண்டாக இருக்கும்”.



 



 



இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா