சற்று முன்

மகிழ்ச்சியின் உச்சத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு   |    என்னை உலுக்கிய சம்பவம் - இயக்குனர் சங்கர்   |    படுக்கை அறை காட்சியால் சம்பளத்தை குறைத்த நடிகை ஆண்ட்ரியா   |    மைனா நந்தினியின் போலி ஃபேஸ்புக் ஐடியால் தூக்கத்தை தொலைத்த மாவட்ட செயலாளர்   |    சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் ஓர் அலசல் “கல்தா”   |    பத்திரிக்கையாளர்களை சந்தித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படக்குழுவினர்   |    ஹரீஷ் கல்யாண் வீட்டில் பிரியாணி விருந்து   |    அருண் விஜய் படத்துக்காக 45 லட்ச ரூபாயில் பிரமாண்டமான அரங்கம்   |    இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை - பா.ரஞ்சித்   |    அஜித் நிராகரித்ததை ஒத்துக்கொண்ட ரஜினி   |    'அக்கா குருவி' படத்திற்காக இணைந்துள்ள இயக்குநர் சாமியும் இளையராஜாவும்   |    வில்லன் நடிகருக்கு இரண்டாவது திருமணம்!   |    பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர்   |    விஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம்   |    சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு   |    விஜய்க்காக இப்படியெல்லாமா செய்வார்கள்!   |    விஜய்யின் அடுத்த படத்திற்கு சம்பளம் இவ்வளவா!   |    அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம்   |    இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய்   |    ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு! - கைதி செய்ய காத்திருக்கும் காவல்துறை   |   

சினிமா செய்திகள்

வைரமுத்துவின் பேச்சுக்கு சீறிப்பாய்ந்த சின்மயி
Updated on : 22 January 2020

பிரபல திரைப்பட பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம், இந்த விஷயத்தில் ஒரு தரப்பினர் சின்மயிக்கு ஆதரவாகவும், ஒரு தரப்பினர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்ததோடு, சின்மயியை பின்பற்றி மேலும் சிலரும் வைரமுத்து மீது புகார் அளித்தார்கள். சுமார் ஒரு வருடமாக நீடித்த இந்த சர்ச்சை, தற்போது அடங்கிவிட்டாலும், பாடகி சின்மயி மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வைரமுத்துவுக்கு எதிராக காட்டமாக கருத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய வைரமுத்து, “பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார். வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சின்மயி, “அப்போ 20-30 வருஷம் முன்னாடி ஒழிச்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல” என்று தெரிவித்துள்ளார். வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்ததால், அவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட, சில வருடங்கள் டப்பிங் பேசாமல் இருந்தார். தற்போது மீண்டும் டப்பிங் பேச தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா