சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

விவசாயிகளை கெளரவப்படுத்திய நடிகர் கார்த்தி
Updated on : 22 January 2020

தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில்  சிறந்து விளங்கும்  விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதுகளும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் நடிகர் சிவகுமார் வழங்கினார். அதோடு சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமார் அவர்களுக்கு 75 ஆயிரமும் இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமி அவர்களுக்கு 25 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோகுல் மற்றும் நண்பர்களுக்கு 25 ஆயிரமும் சிறப்பு பரிசாக புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி மாணவர் சுபாஷ் சந்திர போஸ்க்கிற்கு 25 ஆயிரமும் பரிசுத் தொகை, விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கார்த்தி பேசியதாவது,



 



 



விவசாயிகளை கெளரவப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும், விவசாயிகள் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, ஒரு விவசாயி தற்கொலை என்பது அந்த குடும்பத்திற்கு மட்டும் அல்ல அது சமுதாயத்திற்கே பெரும் இழப்பு "என்பதோடு விவசாயிகள் தற்சார்பு வேளாண்மையை நோக்கி நகர வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்க  பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார்.



 







தற்சார்பு வேளாண்மையின் அவசியத்தை எடுத்துரைக்க,  சிறு குறு விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் கருவிகள்  கண்டுபிடிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் உழவன் ஃபவுண்டேஷனாது இளைஞர்களுக்கு என்றும் பக்கபலமாக இருந்து செயல்படும் என்றார்.



 







நிகழ்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி, பார்வை திறன் சாவல் உள்ள விவசாயி, உற்பத்தி விலை இல்லாமல் நலிவடையும் விவசாயி, மாற்றத்திற்கான பள்ளியில் தற்சார்பு வேளாண்மையை கற்கும் மாணவர்களுக்கு  போன்றவர்களுக்கு தலா 50000  ஊக்கத் தொகையும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.



 





 





 





 



 



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா