சற்று முன்

மகிழ்ச்சியின் உச்சத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு   |    என்னை உலுக்கிய சம்பவம் - இயக்குனர் சங்கர்   |    படுக்கை அறை காட்சியால் சம்பளத்தை குறைத்த நடிகை ஆண்ட்ரியா   |    மைனா நந்தினியின் போலி ஃபேஸ்புக் ஐடியால் தூக்கத்தை தொலைத்த மாவட்ட செயலாளர்   |    சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் ஓர் அலசல் “கல்தா”   |    பத்திரிக்கையாளர்களை சந்தித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படக்குழுவினர்   |    ஹரீஷ் கல்யாண் வீட்டில் பிரியாணி விருந்து   |    அருண் விஜய் படத்துக்காக 45 லட்ச ரூபாயில் பிரமாண்டமான அரங்கம்   |    இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை - பா.ரஞ்சித்   |    அஜித் நிராகரித்ததை ஒத்துக்கொண்ட ரஜினி   |    'அக்கா குருவி' படத்திற்காக இணைந்துள்ள இயக்குநர் சாமியும் இளையராஜாவும்   |    வில்லன் நடிகருக்கு இரண்டாவது திருமணம்!   |    பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர்   |    விஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம்   |    சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு   |    விஜய்க்காக இப்படியெல்லாமா செய்வார்கள்!   |    விஜய்யின் அடுத்த படத்திற்கு சம்பளம் இவ்வளவா!   |    அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம்   |    இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய்   |    ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு! - கைதி செய்ய காத்திருக்கும் காவல்துறை   |   

சினிமா செய்திகள்

பொங்கலன்று கார்த்தியும் அவர் மகளும் செய்த செயல்
Updated on : 22 January 2020

  காலிங்கராயன் கால்வாயில் பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஆற்றில் விடும் விழாவிற்கு தன் குடும்பத்துடன் சென்றார் நடிகர் கார்த்தி. அந்த கால்வாயை மீட்டு மீண்டும் அனைவரும் உபயோகிக்கும் வகையில் மீட்டெடுக்க இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்துப் பேசியதாவது :- 738 ஆண்டுகளுக்கு முன்பு காளிங்கராயன் என்பவர் மக்களுக்காக இந்த கால்வாயை கட்டினார். அவர் பெயரே இந்த கால்வாய்க்கு சூட்டப்பட்டுள்ளது. தங்களுடைய சுய நலத்திற்காக தான் இதை கட்டினார்கள் என்று யாரும் கூறிவிட கூடாது என்பதற்காக அந்த கால்வாயிலிருந்து தண்ணீர் கூட அருந்தாமல் குடும்பத்துடன் ஊரை விட்டு சென்றார்கள். அன்று முதல் இன்று வரை நாம் தான் இந்த நீரை அனுபவித்து வருகிறோம்.  இத்தனை ஆண்டு காலமாக நீர் அனைவருக்கும் பயன்படும் விதமாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த 40 ஆண்டு காலமாக இந்த நீரைப் பயன்படுத்த இயலாமல் இருக்கிறது. அதற்கு காரணம் இப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளால் தான். இனி சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த முடியாத நினைக்க வேண்டியிருக்கிறது. இதனை இளைஞர்கள் தான் மாற்ற வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சென்று அவர்களுடைய பொருட்செலவில் கழிவு நீரை சுத்தப்படுத்தி பின்பு கால்வாயில் கலக்க செய்யுமாறு வலியுறுத்தி கடிதம் கொடுக்க வேண்டும். தனிமனிதனாக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற காளிங்கராயனின் சிறந்த செயல் அழியாதவாறு பாதுகாக்க வேண்டும். நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கு நாம் வழி முறை செய்ய வேண்டும். நோய் இல்லாமல் இருப்பதும் நோய் இல்லாமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை .அதை உணர்ந்து இளைஞர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். மேலும், நான் சிறுவயதில் ஊருக்கு செல்லும்போதும் எங்கள் ஊரில் இதுபோன்ற நீரை நான் கண்டதில்லை. திருமணம் முடிந்து முதல் முறையாக இந்த ஊருக்கு வந்தபோது தண்ணீரைப் பார்த்து நான் பொறாமை அடைந்தேன்.என் வாழ்நாளில் இன்று தான் முதல் முறையாக முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறேன். என் மகளும் ஆற்றில் விட்டது அவளுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும். மக்களுக்காக இந்த கால்வாயை நிச்சயம் பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு தங்களுடைய சொந்த செலவில் பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். மேலும், விவசாயிகள் என்றாலே வயதானவர்கள் என்று தான் அனைவரும் எண்ணுகிறார்கள். இளைஞர்கள் விவசாயம் செய்வதற்கு முன்வர வேண்டும். நானும் சென்றுவர வசதியாக இருக்கும் வகையில் சென்னைக்கு அருகில் விவசாயம் செய்வதற்கான நிலத்தை பார்த்து வருகிறேன். இவ்வாறு கார்த்திக் கூறினார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா