சற்று முன்

பார்வதி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு   |    ரிஸ்க் எடுக்க துணிந்த காஜல் அகர்வால்   |    வைரமுத்துவின் பேச்சுக்கு சீறிப்பாய்ந்த சின்மயி   |    அஜித் காலண்டரை வெளியிட்ட ஜாங்கிரி நடிகை   |    சித் ஸ்ரீராமின் ஒரு தென்னிந்திய இசைப் பயணம் 2020   |    ஒரே மேடையில் 100 கலைஞர்களுக்கு விருது   |    விவசாயிகளை கெளரவப்படுத்திய நடிகர் கார்த்தி   |    தேவி அறக்கட்டளை மூலம் படிக்கும் மாணவர்களிடம் விஷால் வேண்டுகோள்   |    பொங்கலன்று கார்த்தியும் அவர் மகளும் செய்த செயல்   |    விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |   

சினிமா செய்திகள்

நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்
Updated on : 23 December 2019

’எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நமீதா, தனது அபரிவிதமான கவர்ச்சியால் தமிழக ரசிகர்களை கிரங்கடித்தவர் அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தவர், 2010 ஆம் ஆண்டு வரை பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.  சினிமா வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவிய நமீதா, சில டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருண்டார். இதற்கிடையே, தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்த நமீதா, 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் வீரா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.  தற்போது கணவருடன் சென்னையில் வசித்து வரும் நமீதா, தனக்கு வாய்ப்பு தேடுவதோடு, கணவருக்கும் வாய்ப்பு தேடி வந்தாராம். அவரது தேடலுக்கு சரியான வாய்ப்பு ஒன்று தற்போது கிடைத்திருக்கிறது.  ஆம், நமீதாவின் கணவர் வீரா பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.  விரைவில் ஒளிபரப்பாக உள்ள அந்த சீரியலை, சம்மந்தப்பட்ட டிவி சேனல் விளம்பரம் செய்வதை இட அதிகமாக நமீதா விளம்பரம் செய்து வருகிறார். அவ்வபோது அந்த சீரியலின் புரோமோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை நமீதா வெளிப்படுத்தி வருகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா