சற்று முன்

பார்வதி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு   |    ரிஸ்க் எடுக்க துணிந்த காஜல் அகர்வால்   |    வைரமுத்துவின் பேச்சுக்கு சீறிப்பாய்ந்த சின்மயி   |    அஜித் காலண்டரை வெளியிட்ட ஜாங்கிரி நடிகை   |    சித் ஸ்ரீராமின் ஒரு தென்னிந்திய இசைப் பயணம் 2020   |    ஒரே மேடையில் 100 கலைஞர்களுக்கு விருது   |    விவசாயிகளை கெளரவப்படுத்திய நடிகர் கார்த்தி   |    தேவி அறக்கட்டளை மூலம் படிக்கும் மாணவர்களிடம் விஷால் வேண்டுகோள்   |    பொங்கலன்று கார்த்தியும் அவர் மகளும் செய்த செயல்   |    விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |   

சினிமா செய்திகள்

சத்யராஜ் செய்த சாதனை
Updated on : 03 December 2019

சத்யராஜ் நடிக்கும் "தீர்ப்புகள் விற்கப்படும்' படம் துவங்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்ப்படவுலகில் முதல் முறையாக சத்யராஜ் நடித்த அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் விசேட கேமராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதிலும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சத்யராஜ் தான் நடித்த காட்சிகள் அனைத்திற்கும்  சேர்ந்தாற்போல் பனிரெண்டு மணி நேரம் பேசி டப்பிங் பணிகளை முடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் தீரன் கூறியதாவது... "சத்யராஜூடன் இணைந்து பணியாற்றியது எனக்கு சினிமா மீது தீர்க்க முடியாத வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்ததுமே அதற்கு சத்யராஜ்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஆனால் அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன். இதற்குக் காரணம் சினிமா மீது அவர் கொண்ட பேரார்வமும், தொழில் பக்தியும் மட்டுமல்ல, கலையையும் நடிப்பையும் அவர் உணர்வுபூர்வமாக பின்பற்றும் முறையும்தான். நட்சத்திரம் என்பதையும் தொழில் நெறிமுறைகளையும் தாண்டி, அவர் மிகச் சிறந்த மனிதராக படப்பிப்பு அரங்கில் இருக்கும் ஒவ்வொருவரையம் கவர்ந்திழுக்கிறார். அவரது அர்பணிப்பு மிக்க நடிப்பு 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் மிகப் பெரிய பலமாக, படத்தைத் தாங்கி நிற்கும் தூணாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. படத்தின் டப்பிங் பணிகளையும் முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் சார் தனது டப்பிங் பணிகளை பனிரெண்டு மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். படம் முழு வடிவம் பெற்றிருக்கும் விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழச்சியோடு இருக்கிறோம். வெகு விரைவில் டீஸர் வெளியிடும் தேதியை அறிவிக்க இருக்கிறோம் என்றார். மயிர் கூச்செரியச் செய்யும் சத்யராஜின் சண்டைக் காட்சிகள் நிரம்பிய, ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வரச் செய்யும் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் வகைப் படம் தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஹனி பீ கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக சஞ்சீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் தீரன் இயக்கியிருக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு 'கருடவேகா' அஞ்சி ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். நெளஃபல் அப்துல்லா படத்தொகுப்பை செய்திருக்கிறார். 

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா