சற்று முன்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |   

சினிமா செய்திகள்

ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'
Updated on : 02 December 2019

காதல் படங்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமாவதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது அதன் நேர்த்தியான இசை. 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசை மூலம் மீண்டும் இதை வெற்றிகரமாக மெய்ப்பித்திருக்கிறரா். ஹரீஷ் கல்யாண் நடித்து, எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.  இது குறித்து ஜிப்ரானை வெகுவாகப் புகழ்ந்த இயக்குநர் சஞ்சய் பாரதி,  "நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு கனவு நனவானதைப்போல் இருக்கிறது. ஜிப்ரானின் இசை காதல் கதைகளுக்கு நேர்த்தியாக செறிவூட்டி, அவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.  தனுசு ராசி நேயர்களே கதைக்கரு என் மனதில் தோன்றியதும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் கைவண்ணம் இதற்கு கண்டிப்பாகத் தேவைப்படும் என்பதை நான் உணர்ந்தேன்.   இப்போது படத்தின் ஒவ்வொரு பாடலுக்குக்கும் கிடைக்கும் மகத்தான வரவேற்பைப் பார்க்கும்போது எங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. ஜிப்ரானைப் பொறுத்தவரை, அவர் மிகச் சிறந்த இசையை தருவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் உரிய தனித்துவம் மிக்க மிகச் சரியான குரலைத் தேர்வு செய்து பாட வைத்து பாடலை முழுமையுறச் செய்கிறார். இந்த வகையில் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் அனிரூத், சரத் சந்தோஷ், ராஜன் செல்லய்யா, செளமியா மகாதேவன், லிஜிஷா பிரவீண், கோல்ட் தேவராஜ் மற்றும் பம்பாய் ஜெயஸ்ரீ மேடம் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கு.கார்த்திக், விக்னேஷ் சிவன், மதன் கார்க்கி, விவேகா மற்றும் சந்துரு ஆகியோரின் பாடல்களும் ஆல்பத்தின்  வெற்றிக்கு வெகுவாக உதவியிருக்கின்றன. பிரதான வேடங்களில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகியின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருப்பதால்  பாடல்கள் மற்றும் ட்ரைலரின் வெற்றியைத் தொடர்ந்து படம் குறித்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது" என்றார்.   ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கிறார். ஹரீஸ் கல்யாண், ரெபோ மோனிகா ஜான் மற்றும் டிகான்கனா சூர்யவன்ஷி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்த நகைச்சுவை கலந்த காதல் சித்திரத்தில் ரேணுகா, முனீஷ்காந்த் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய  வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் இந்த மாதம் 6ஆம் தேதி உலகெங்கும் திரை இடப்பட உள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா