சற்று முன்

விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |    நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல்   |    பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |   

சினிமா செய்திகள்

ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம்?
Updated on : 01 December 2019

இயக்குனர் சிவா நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியின் அடையாளமாக சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். அந்த வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து வேதாளம், விவேகம், விசுவாசம், வீரம் ஆகிய வெற்றி படங்களை வரிசையாக தந்தவர்.  தற்போது ரஜினிகாந்தை வைத்து தலைவர் 168 என்ற படத்தை இயக்க இருக்கிறார் சிறுத்தை சிவா. இந்த படத்திற்காக ஜோதிகா மற்றும் கீர்த்தி   சுரேஷ் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த படத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை குஷ்பூ அல்லது மீனா இருவரில் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு D இமான் இசையமைக்கிறார்.  எந்திரன், பேட்டை, ஆகிய படத்தை தயாரித்த சன் பிக்ச்சர்ஸ் தலைவர் 168 படத்தையும் தயாரிக்கின்றனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 14ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது. படத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பூனே அல்லது காசியில் 20 நாட்கள்  நடைபெறவுள்ளது. மேலும் இந்த படத்தின் அப்டேட்ஸை தெரிந்துகொள்ள தொடர்ந்து தமிழ்சகாவை பாருங்கள். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா