சற்று முன்

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |    பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'வித் லவ்'!   |    நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் 'மாயபிம்பம்'!   |    ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகும் தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை நிகழ்வு!   |    இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார்!   |    ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |   

சினிமா செய்திகள்

நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
Updated on : 29 November 2019

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் ஆச்சரியத்தக்க அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் குறித்த உடனடி பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. கன்னியாகுமரியில் உள்ள பகபதி அம்மன் கோவிலில் சம்பிரதாயமான பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு  இன்று (நவம்பர் 29) துவங்கியது. முதல் கட்டப் பிடிப்பில் நயன்தாரா விரைவில் இணைய இருக்கிறார்.



 





'அவள்' படத்தின் இசைக்காக வெகுவாக பாராட்டப்பட்ட இசையமைப்பாளரும், தற்போது நயன்தாரா நடித்து வரும் 'நெற்றிக்கண்' படத்தின் இசையமைப்பாளருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் 'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு இசையமைக்கிறார். 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். 'பரியேறும் பெருமாள்' படப்புகழ் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்க, திவ்யா நாகராஜன் மற்றும் அனுவர்த்தன் ஆகியோர் ஆடையலங்காரத்தை கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விஜயகுமார்.



 





நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, 'மூக்குத்தி அம்மன்' படத்தின் கதை, திரைக்கதை. வசனங்களை எழுதியிருப்பதுடன் என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தையும் இயக்குகிறார். 'எல்.கே.ஜி.', 'கோமாளி', மற்றும் 'பப்பி' ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து டாக்டர் ஐசரி கே.கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா