சற்று முன்

விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |    நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல்   |    பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |   

சினிமா செய்திகள்

குட்டி ராதிகாவின் மிரட்டலான நடிப்பில் தமயந்தி
Updated on : 25 November 2019

"இயற்கை"  " மீசை மாதவன்" உட்பட நிறைய தமிழ் படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா கன்னட பட உலகில் முன்னணியில் இருக்கும் இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு தமிழில்  "தமயந்தி " என்ற படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். 

குட்டி ராதிகாவுடன் லோகி, சாது கோகிலா, ராஜ்பால வாடி, சூப்பர் ஸ்டார் ரஜினியோட நண்பரான ராஜ்பகதுார், அஞ்சனா, கார்த்திக், வீணா சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

பி.கே.ஹெச்.தாஸ் ஒளிப்பதிவையும், தர்மபுரி சோமு வசனம், பாடல்களையும் , கணேஷ் நாராயண் இசையையும், வினோத்குமார் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

 முன்னனி இயக்குனர்கள் பலரிடம் இயக்குனர் பயிற்சி பெற்ற நவரசன் கதை, திரைக்கதை எழுதி மிகுந்த பொருட்செலவில் தயாரித்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தை பற்றி இயக்குனர் நவரசன், " 1980 ஆம் ஆண்டு கதாநாயகியை அழித்து அவரது குடும்பத்தை  இருந்த இடம் தெரியாமல் செய்து விடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு அரண்மனையிலிருந்து எதிர்பாராத விதமாக கதாநாயகியின் ஆவி வெளியே வருகிறது. தன்னையும் குடும்பத்தையும் அழித்தவர்களை தேடி வருகிறது.

அதன் பிறகு நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் விறுவிறுப்பு.  நிறைய பொருட் செலவு செய்து படமாக்கி இருக்கிறேன். ஒரு காட்சியில் கண் சிமிட்டாமல் லென்ஸ் பொருத்தி நடிக்க வேண்டும் என்று குட்டி ராதிகாவிடம் கூறினேன். அவரும் சரி என்று கூறி நடித்தார். 3 நிமிடம் 16 வினாடிகள் கண் சிமிட்டாமல் ஒரே டேக்கில் நடித்தார். அதைப் பார்த்து குழுவினர் அனைவரும் கை தட்டி பாராட்டினார்கள். ஆனால் லைட் வெளிச்சத்தின் உஷ்ணத்தில் அவருடைய கண்களில் இருந்த லென்ஸ்சுகள் உருகி விட்டது. உடனடியாக டாக்டரை வரவழைத்து அவரது கண்களுக்கு சிகிச்சை அளித்தோம்.டாக்டர் ஓய்வெடுக்க சொல்லியும் தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்த குட்டி ராதிகா வலியையும் பொருட்படுத்தாமல் உடனே நடிக்க வந்து விட்டார். இதனால் குட்டி ராதிகாவின் நடிப்பு மீது வைத்து இருந்த அளவில்லாத பற்று அனைவருக்கும் தெரிந்தது. இந்த படத்துல கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலா இருக்கும். பிரம்மாண்டமான அரண்மனை செட்கள் போட்டு படமாக்கி இருக்கோம். ரீ ரிக்கார்டிங் அசத்தலா பண்ணி இருக்கார் மியூசிக் டைரக்டர் கணேஷ் நாராயண் " என்று கூறினார்.

  தமது லட்சுமி விருஷாத்ரி புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நவரசன் தயாரித்து இயக்கி உள்ள " தமயந்தி " விரைவில் வருகிறது. 

   

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா