சற்று முன்

விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |    நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல்   |    பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |   

சினிமா செய்திகள்

தெலுங்கு படத்தை தமிழில் இயக்கும் எஸ்.எஸ் ராஜ மௌலி
Updated on : 25 November 2019

2007 ஆண்டு தெலுங்கில் வெளியான " யமதொங்கா " எனும் பிரமாண்ட திரைப்படத்தை எஸ்.எஸ் ராஜ மௌலி இயக்கியிருந்தார் . ஜுனியர் என்.டி.ஆர் கதாநாயகனக நடித்திருந்த இப்படத்தில் இவருடன்  குஷ்பு , ப்ரியாமணி , மம்தா மோகன்தாஸ் ,ரம்பா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.  கதை விஜயேந்திர பிரசாத் , மரகதமணி இசையமைத்திருந்தார் . கே.கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார் . இவர்கள் அனைவரும் நான் ஈ , பாகுபலி , பாகுபலி2 ஆகிய படங்களில் பணியாற்றிய வெற்றிக்கூட்டணி.

 



 





பூலோகம் மற்றும் எமலோகத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான 'யமதொங்கா' திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மொழியில் தற்போது  டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது . ARK ராஜராஜா தமிழில் வசனங்களை எழுதியுள்ளார் .



 





இயக்குனர் எஸ்.எஸ் ராஜ மௌலி இதுவரைக்கும் 11 படங்கள் இயக்கியுள்ளார் .5 படங்கள் ரீமேக்காகவும் , 2 படங்கள் மொழி மாற்றம் செய்தும் , 3 படங்கள் எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்திலும் வெளியானது . தமிழில் வெளிவராத ஒரே படம் யமதொங்கா. தற்பொழுது மொழிமாற்றம் செய்து தமிழில் ஓம் ஸ்ரீ சப்த கன்னியம்மன் கிரியேஷன் தயாரித்து , ஓம் ஸ்ரீ முனீஸ்வரர் மூவிஸ் வெளியிட உள்ளது . M .ஜெய கீர்த்தி மற்றும் ரேவதி மேகவண்ணன் தயாரித்துள்ளனர் . நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது . 



 



 





 



 





 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா