சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்
Updated on : 18 September 2019

50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முருகன் மந்திரம், ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம் நடிப்பில், முன்னாள் கப்பல்படை வீரர் ப்ராஷ் இயக்கும் “ஆபரேஷன்அரபைமா” படத்தின் மூலம் வசன கர்த்தாவாகி இருக்கிறார்.



 



வசனம் எழுதுவது குறித்து முருகன் மந்திரம் கூறும்போது, "பாடல் எழுதுவதை விட, வசனம் எழுதுவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு பாடல் எழுதும்போது அதன்சூழலை, இயக்குநரின் எதிர்பார்ப்பை, கதாபாத்திரங்களின் உணர்வை, நமது வார்த்தைகளின் மூலம் மெட்டுகளுக்கு பொருத்தினால் போதும்.

ஆனால், வசனம் எழுதும்போது, கதை, கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்விட பின்னணி, பேச்சு மொழி பின்னணி, கதாபாத்திரத்தின் அப்போதைய மனநிலை,இயக்குநர் பேச விரும்பும் கருத்து, இப்படி நிறைய விசயங்களை தெரிந்து வசனம் எழுதினால் தான், படம் பார்க்கிறவர்கள் அந்த படத்தோடு, கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியும். 







ஆபரேஷன் அரபைமா, ஒங்கள போடணும் சார் என இரண்டு படங்களுக்கு வசனம் எழுதியது வேறு வேறு மாதிரியான அனுபவம். கதையின் தன்மை இரண்டு படங்களுக்கும்மொத்தமாக வேறுபட்டது. அந்தந்த படத்திற்கான தேவையைப் பொருத்து வசனங்களை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து டைம் அண்ட் டைட் ஃப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “பிரளயம்”, “மிலிடெரி” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதுகிறேன், என கூறுகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா