சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்
Updated on : 18 September 2019

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் 'சங்கத்தமிழன்' படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.







விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம்  கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

 



இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைத்திருக்கும் இந்த படத்திலிருந்து சமீபத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு. கார்த்திக் வரிகளில் வெளியான "கமலா " மற்றும் பிரான்சிஸ் எழுதி ராக்ஸ்டார் அனிரூத் பாடிய " சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் " என இரண்டு பாடல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.





 



இதை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17 ஆம் தேதி சன் ஸ்டுடியோஸில் நடைபெற்றது . இந்த விழாவில் சங்கத்தமிழன் படக்குழுவினர்களான கதாநாயகன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி  , இயக்குனர் விஜய்சந்தர் , ராஷி கண்ணா , நிவேதா பெத்துராஜ் , இசையமைப்பாளர்கள் விவேக் சிவா , மெர்வின், ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , சூரி , ஸ்ரீமன் ,ஜான் விஜய் , அகல்யா வெங்கடேசன் , பாடலாசிரியர்  விவேகா , நிர்வாக தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன் ,குமரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா