சற்று முன்
சினிமா செய்திகள்
அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி
Updated on : 13 September 2019

தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 3', இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக் குழு திட்டமிட்டிருக்கிறது.
சமீபத்திய செய்திகள்
சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'
இயற்கைக்கு அப்பாற்பட்ட பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப்படுகின்றது. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்கமான திகில் படங்களாகவே இருக்கிறது. உண்மையில், ‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சிறந்த எடுத்துக்காட்டு படமாக 'பஞ்சராக்ஷ்ரம்' சூப்பர்நேச்சுரல் - சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்', 'சந்திரமௌலி' மற்றும் 'பொது நலம் கருதி' போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக தனக்கு ஒரு நல்ல வரவேற்பை உருவாக்கிய நடிகர் சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் நாயகனாக நடிக்க, கோகுல் (சென்னை டூ சிங்கப்பூர், ஜாக் அண்டு ஜில் புகழ்), அஸ்வின் ஜெரோம் (யானும் தீயவன், நட்பே துணை புகழ்), மது ஷாலினி (அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி), சனா அல்தாஃப் (சென்னை 28 - 2, ஆர்.கே.நகர்) முக்கிய வேடங்களில் நடித்தவர். சீமான், ராஜா மற்றும் ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘பஞ்சராக்ஷரம்’ தலைப்பு குறிப்பிடுவது போல, படம் சுமார் 5 நபர்கள், அதன் கதாபாத்திரங்கள் இயற்கையின் 5 வெவ்வேறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஐதன் (தீ) ஒரு ஆர்வமுள்ள இசைக்கலைஞர், சமீரா (காற்று) ஒரு அறிவுசார் எழுத்தாளர், ஜீவிகா (நீர்) ஒரு உன்னத மனிதாபிமானி, தர்ணா (பூமி) ஒரு ஆர்வமுள்ள பந்தய வீரர் மற்றும் திஷ்யந்த் (வானம்) ஒரு உற்சாகமான ஆராய்ச்சியாளர். இந்த கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானதும் அவர்களுக்குள் நல்ல பிணைப்பு ஏற்படுகின்றது. அவர்கள் ஒன்றாக ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது, ஒரு புத்தகத்திலிருந்து ஒரு விளையாட்டை சமீரா பரிந்துரைக்கும் வரை விஷயங்கள் நன்றாகவே இருக்கிறது. நடைமுறைக்கு மாறாக மற்றும் தற்செயலாக எனத் தொடங்கும் விஷயம் விரைவில் அனைவரையும் நம்பமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு பயங்கரமான கொந்தளிப்பாக மாறுகிறது.
படத்தின் கதைக்களம் மிகவும் விதிவிலக்காகவும் தனித்துவமாகவும் காணப்பட்டாலும், இது இந்திய திரைப்படத் துறையில் முதல் முறையாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட பல வகைகளின் தொகுப்பாகும். இது ஒரு உளவியல் சூப்பர்நேச்சுரல் சாகச த்ரில்லர் திரைப்படமாக இருக்கும். கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 2 ரெட் டிராகன்கள், 2 ஏ.ஆர்.ஆர்.ஐ அலெக்சாஸ், 7 கோ ப்ரோஸ் மற்றும் 2 டி.ஜே.ஐ ட்ரோன்கள் போன்ற பல சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். 'பஞ்சராக்ஷ்ரம்' நேரடி கார் ஃபிளிப் ஸ்டண்ட் இடம்பெறும் முதல் இந்திய திரைப்படமாக இருக்கும். இசைக்கலைஞருடன், சிறப்பாக அமைத்த மேடை விளக்குகளில் குழு லைவ்-இன் கச்சேரியாக ஒரு பாடலை படமாக்கியுள்ளது. 75 வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஒரு பைக் மற்றும் பல கார்களின் துரத்தல்கள் என்று மூச்சடைக்கக்கூடிய அதிரடி காட்சிகளை பெரிய பட்ஜெட்டில் படமாக்கியுள்ளது.
இப்படத்தின் இசை டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் உலகளவில் டிசம்பர் 27, 2019 அன்று வெளியிடப்படும்.
எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'
சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் "பேப்பர் பாய்" படத்தின் படப்பிடிப்பு இன்று
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கேரளா ஹவுசில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி
வைத்தார்.
சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன் தயாரிக்கும் படம் "பேப்பர்
பாய்". இணை தயாரிப்பு G.C.ராதா
இப்படத்தை, இயக்குனர் விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற
படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய "ஸ்ரீதர் கோவிந்தராஜ்"
இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு
இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் V விஸ்வா ,
படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர்
இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்....
இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "பேப்பர் பாய்" படத்தின்
ரீமேக் ஆகும். தமிழுக்கு தகுந்தார்போல் அதில் சிறு சிறு மாற்றங்களை
உருவாக்கி உள்ளோம்.
அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர
நாயகிக்கும் உருவாகும் காதல், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும்
மாற்றங்கள் தான் இப்படத்தின் கதை.
இது முழுவதுமாக எதார்த்தங்கள் நிறைந்த கதையாக இருக்கும். காதல் காட்சிகள்
நிறைந்த படம் என்பதால் இதில் இசைக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்துள்ளோம். தமிழில் காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை இவ்வரிசையில்
ஒரு எதார்த்த காதல் கதையை நீங்கள் 2020 இல் காணலாம்.
இதில் நாயகனாக சுவாதிஷ் ராஜா, நாயகியாக யாமினி பாஸ்கர், முக்கிய
கதாபத்திரத்தில் வடிவுக்கரசி, தலைவாசல் விஜய், சுஜாதா, கடலோரக் கவிதைகள்
ரேகா, ராட்சசன் பட வில்லன் சரவணன், எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன்,
தாரை தப்பட்டை அக்ஷயா, பாலா, அமுதவாணன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும்
பல முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. சென்னை கேரளா மற்றும்
கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் 'தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். எல்லோரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் தமிழில் ஒரு படம் இயக்குகிறேன் கார்த்தியின் ஜோடியாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறாயா? என்றார். அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன். மேலும், தொழில்நுட்பம் மற்றும் பெரிய நடிகர்கள் இருப்பதால், ஒரு நல்ல படத்தில் நாமும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நான் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைக்க, ஜீது ஜோசப் இயக்குகிறார். அதைப்பற்றி கதாபாத்திரமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு ஏற்ப முக்கியத்துவமும், தொடர்பும் கொடுக்கப்பட்டிருக்கும். என்னுடைய கதாபாத்திரமும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து செல்வது என்றில்லாமல், ஒரு புள்ளியில் கதையோடு தொடர்பு இருக்கும். நடிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தான் எனக்கும் விருப்பம். ஐந்து வருடங்கள் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. காத்திருந்தாலும் நல்ல படம், நல்ல குழுவுடன் இணைந்து நடிப்பதே விருப்பம். என் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதில் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே நடிப்பேன். அது வரை காத்திருப்பேன்.
'கிடாரி'க்குப் பிறகு மலையாளத்தில் வாய்ப்பு வந்தது அதில் நான் நடித்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து அதிக படங்கள் அங்கேயே நடிக்கும் படியான சந்தர்ப்பம் அமைந்தது. மேலும், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. 'தம்பி' படம் மூலம் தமிழில் இது மறு பிரவேசம் என்று கூட சொல்லலாம்.
எனக்கு தமிழ் தெரிந்ததால் இப்படத்தில் நடித்தது எளிதாக இருந்தது. சிறந்த இயக்குனரிடம் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தில் நடித்தேன்.
சில நடிகர்களுக்கு ஒரே பணியான படங்கள் மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி அடையாளம் வந்து விடும். ஆனால், கார்த்தி எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சரியாக நடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர். தனக்கு என்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ளாமல் கமர்சியல் படமாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தாலும், இல்லை இரண்டும் கலந்து இருந்தாலும் அவர் திறமையான நடித்து வெளிப்படுத்துவார். இதுபோன்ற நடிகருடன் நினைப்பதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். அதேபோல் தன்னுடைய பகுதி மட்டும் முடிந்தால் போதும் என்று நினைக்கக்கூடிய கலைஞர் கிடையாது. தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதர் தான் கார்த்தி. அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் வரும்போது, படப்பிடிப்பு தளத்தில் அலங்காரம் செய்துக் கொண்டிருப்பார். அப்போது நான் உங்களைப் பார்த்துக் கொண்டு வசனம் பேசி ஒத்திகைப் பார்த்துக் கொள்ளட்டுமா? என்று கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். இது போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை.
எல்லோரையும் போல் சூர்யா ஜோதிகா நானும் திரையில் கண்டிருக்கிறேன். இப்படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்குறது.
ஊட்டி, பாலக்காடு, கோயம்பத்தூர், கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. கோவாவில் கார்த்தியின் பகுதி மட்டும் நடந்தது. சரியான திட்டமிடுதல் இருந்ததால், அட்டவணைப்படி 65 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். தமிழ் படத்தில் நடித்த அனுபவத்தில் இப்படம் விரைவாகவே முடிவடைந்திருக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் நன்றாக அரட்டை அடிப்போம். ஒருத்தருக்கொருத்தர் கலாய்த்துக் கொள்வோம். இதற்கிடையில், சத்யராஜ் குடும்பத்தார்கள் வந்தார்கள், கோயம்பத்தூரில் இருந்து சிவகுமாரின் உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தாருடனும் பேசுவோம். சூர்யாவும் ஒரு நாள் வந்தார். அவரிடமும் பேசினேன்.
என்னுடைய தோழி அபர்ணா 'சூரரைப் போற்று' படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.
பொதுவாக படப்பிடிப்பின் துவக்கத்தில் சில நாட்களுக்கு சிறு சிறு காட்சிகள் தான் கொடுப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் அனைவரிடமும் நமக்கு இயல்பான நிலை வரும். ஆனால், இந்த படத்தில் எனக்கு முதல் நாள் படப்பிடிப்பே டூயட் பாடல் தான். அதுவும் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி என்றதும் சிறிது பதட்டமாக இருந்தது. கார்த்தியைப் பார்த்ததும் இவரைப் பார்த்து நடிக்க வேண்டுமே என்ற பயம் வேறு. ஆனால், கார்த்தி என்னை சமாதானப்படுத்தி இலகுவாக இருக்கும்படி கூறினார். முதலில், பாடலைக் கேட்கும் போது பதட்டமாக இருக்கும். இப்போது நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இதுதவிர, விருந்து பாடலும், கோவாவில் கார்த்திக்கு ஒரு பாடலும் இருக்கிறது.
நான் கோவிந்த் வசந்தாவின் பேண்ட் வாத்தியத்தின் விசிறி. சமீபத்தில், கேரளாவில் அவருடைய இசை ஆல்பம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். '96' மற்றும் 'அசுரவதம்' படத்தில் அவருடைய பின்னணி இசை பிடிக்கும்.
இப்படம் இரண்டு குடும்ப உறவுகள் கலந்த திரில்லர் படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்பு இருப்பதால் இப்படத்தின் கதையை பற்றி விளக்க முடியாது. படம் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க டிசம்பர் 20-ம் தேதி வரை நாங்களும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறோம். மேலும், 'கிடாரி' படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று இன்னமும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், இந்த படத்திற்கும் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இந்த படத்திற்குப் பிறகு தொடர் தமிழ் படங்கள் இல்லாததால், மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.
இவ்வாறு நடிகை நிகிலா விமல் 'தம்பி' படத்தில் நடித்த அனுபங்களைப் பற்றி கூறினார்.
ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்
“நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தாயரித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் கடந்த 6-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியிருந்தார்.பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இப்படத்தை பெரிதாக கொண்டாடினார்கள். படத்தை வெற்றி பெறச்செய்த ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி சொல்லும் விழா இன்று படக்குழு சார்பாக நடைபெற்றது.
விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், ஸ்ரீகணேஷ், கவிஞர் அறிவுமதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர், இந்நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது,
"படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை, காலேஜ் படிக்கிற வரைக்கும். நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். “சில்ட்ரென் ஆப் ஹெவன்” போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள் தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளை படமாக பதிவுசெய்யத் தூண்டியது. நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன்.
புத்தகங்கள் வாசிக்கிறது பிரச்சனையாக இருந்த காலத்தில் தான் நான் வந்தேன். நான் தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும் போது ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேர்களுக்கு பிரச்சனை இருந்தது. அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாத் தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன். மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
ரஜினி சாரை படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாத்துக்கும் பின்னாடி அரசியல் இருக்கு” என்று பேசியது நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன். “பரியேறும் பெருமாள்” படம் எடுக்கும் போது பெரிய பயம் இருந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் மீது பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். பிரஸுக்கு காட்ட வேண்டும் என்று முடிவானதும் இன்னும் பயமாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்தார்கள். எனக்கு கைகால்கள் உதறத் துவங்கியது. அந்தப்படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப்படம் கமர்சியலாகவும் பெரிய வெற்றிபெற்றது. அந்தப்படம் தான் “குண்டு” படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது. அதியன் உழைப்பு எனக்குத் தெரியும். இந்த டீம் திறமைமிக்க மனிதர்கள். தகுதி திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில் தான் பிரச்சனை இருக்கிறது. இந்தப்படமும் பிரஸுக்கு போட்டுக்காட்டுவதில் பயம் இருந்தது. ஆனால் இந்தப்படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள். ரொம்ப சூப்பரான வெற்றியை பிரஸும் மக்களும் தந்தார்கள். வெறும் எதிர்ப்பை மட்டும் காட்டாமல் நல்ல விசயத்தை கொண்டு சேர்ப்பதிலும் பிரஸ் முன்னணியில் இருக்கிறது.
சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு விசயத்தை ஈசியாக கடத்த முடியும் என்றால் அது சினிமாவில் தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும்" என்றார்.
பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்
மிகத் தகுதியான பிரம்மச்சாரி என்றஅடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முக்கிய பங்கு வகிக்கும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் வைபவத்தை கதைக் களமாகக் கொண்ட படமொன்றில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகு நாயகன் ஹரீஷ் கல்யாண்.
விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்லு' தெலுங்குப் படத்தின் அதிகாரபூர்வ தமிழ்ப் பதிப்பில் ஜோடியாக நடிக்கின்றனர் ஹரீஷ் கல்யாண் பிரியா-பவானி சங்கர். ஏ.எல்.விஜயிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சம்பிரதாயமான பூஜையுடன் சென்னையில் இன்று (டிசம்பர் 11) இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. துவக்க விழா பூஜையில் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக் கலைஞர்கள் கலந்து கொணடனர். ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி மற்றும் ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான இப்படத்தை திரு.கொன்ரு சத்தியநாராயணா தயாரிக்கிறார். எஸ்.பி.சினிமாஸ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கிறது.
"வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்து போன்ற பரவசத்தையும், பரபரப்பையும் ஒரு சேரப் பெற்றது போலிருக்கிறது எனக்கு" என்று புன்னகையுடன் விவரிக்கும் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
" 'பெல்லி சூப்லு' படத்தை முதன் முதலாக பார்த்தபோது, எவ்வளவு எளிமையான மற்றும ஆழமான படம் இது என்று நான் பிரமித்துப் போனேன். குழந்தைப் பருவம் முதலே எனக்கு மிக நெருக்கமான நண்பனான ஹரீஸ் கல்யாணுக்கு உடனே பாேன் செய்து 'பெல்லி சூப்லு' படத்தை தமிழில் எடுத்தால் அதற்கு மிகவும் மிகப் பொருத்தமான நடிகன் நீதான் என்று தெரிவித்தேன். இப்படி நான் சொன்னது உலகத்தின் காதுகளில் கேட்டுவிட்டதோ அல்லது வேறு என்ன வேடிக்கையோ தெரியவில்லை, இப்போது நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம்.
பிரியா பவானி சங்கரின் நடிப்பை பல படங்களில் பார்த்து ரசித்த எனக்கு, அவர் எந்த அளவுக்கு பரிபூரண நடிகை என்பது தெரியும். இப்படத்தில் கதாநாயகியாகியாக நடிக்கும் அவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். முழுக்க முழுக்க இது உள்ளடக்கம் மற்றும் கதாபாத்திரங்களால் இயக்கப்படும் படம் என்பதால் இயற்கை சாராம்சம் மிக்க படமாக இது இருக்கும். இயற்கை சாராம்சம் மிக்க படம் என்று குறிப்பிடுவதால், நம் மண்ணின் மரபுக்கேற்ப திரைக்கதையில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறோம். இயக்குநராக என் பயணத்தைத் தொடரக் காரணமாக இருந்த ஹரீஸ் கல்யாண் மற்றும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் திரு.கொன்ரு சத்தியநாராயணாவுக்கும் தயாரிப்பில் உறுதுணையாக நிற்கும் எஸ்.பி.சினிமாஸ் நிறுவனத்துக்கும் என்றென்றும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார் இயக்குநர் கார்த்திக் சுந்தர் .
விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, தயாரி்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கிறார் கோடலி முரளி கிருஷ்ணா. படத்தொகுப்பை கிருபா செய்ய, வசனங்களை தீபக் சுந்தர்ராஜன் எழுதுகிறார். கலை இயக்குநர் பொறுப்பை கே.சதீஷ் ஏற்க, ஆடை அலங்கார வடிவமைப்புகளை அனுஷா மீனாட்சி செய்ய, புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார் சூர்யா. நடிகர் நாசர் கிளாப் அடித்து வைத்து படப்பிடிப்பை துவங்கி வைக்க , நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகி ப்ரியா பவானி ஷங்கர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்தப் படம் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக திரைக்கு வருகிறது.
Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு
இந்த அறிமுக விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுஜிதா ஜலன், பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். சாம் பால் உட்பட பிராண்ட் அசோசியேட்களும், நலம்விரும்பிகளும் கலந்துகொண்டனர். Tony & Guy கிளை உயர்தரத்திலான சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கான பிரதான இடமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய கிளையை அறிமுகப்படுத்தியது குறித்துப் பேசிய பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். சாம் பால், சென்னையின் ஒவ்வொரு மூலையிலும் ஒப்பிடமுடியாத வாழ்க்கை முறை அனுபவத்தை வழங்குவதற்கான யோசனை எப்போதும் எங்களுக்கு இருந்து வருவதாக தெரிவித்தார். இந்த கிளையுடன் எங்களது விரிவாக்கமானது முகப்பேர் மக்களுக்கு பெரும் பயனைக் கொடுக்கும். மேலும், அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் பெருமை சேர்க்கிறோம் என்றார்.
நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல்
சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK) மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.
திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தை பெறுவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி தனது சினிமா வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறி வந்திருக்கிறார்..
பெட்ரோமாக்ஸைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘தனுசு ராசி நேயர்களே’ என்கிற படத்தில் முழுநீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்... சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ள இப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இரண்டு படங்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் டிஎஸ்கே இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“நான் ஆதித்யா டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.. இருந்தாலும் எனது நடிப்பு பசிக்கு அதில் சரியான தீனி கிடைக்கவில்லையே என்கிற எண்ணம் இருந்தது..
அதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்து என் நண்பன் நடிகர் அசாருடன் சேர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தேன்.. அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு சீசன்-7’-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்தது.
இதற்கு முன் தொலைக்காட்சியில் நடித்தது, சில படங்களில் நடித்தது என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு புதிதாக களம் இறங்கியது போல உத்வேகத்துடன் அதில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்று சிம்புவின் கையால் பரிசு பெற்றோம்.
இந்த சமயத்தில்தான் பெட்ரோமாக்ஸ் படத்தில் சினிமா ஆர்வமிக்க ஒரு இளைஞன் கேரக்டரில் நடிக்க சரியான ஆளைத் தேடிக்கொண்டிருந்தார்கள் அப்போது அந்த வாய்ப்பு எனது நண்பன் அசாருக்கு தேடி வந்தது..
ஆனால் அந்த சமயத்தில் அவர், “ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தார். அதனால் நான்கு காமெடி நடிகர்களில் ஒருவராக நடிக்க முடியாத சூழலில் அவர் இருந்தார்.
அதனால் இயக்குநர் ரோஹின் வெங்கடேசனிடம் அந்த கேரக்டரில் நடிப்பதற்காக என்னை சிபாரிசு செய்தார்.. ஆனாலும் சில பல ஆடிசன்களுக்குப் பிறகே அந்த கேரக்டரில் என்னைத் தேர்வு செய்தார் ரோஹின் வெங்கடேசன்.
பல நகைச்சுவை நடிகர்கள் தங்களது மிமிக்கிரி திறமையால் பெரிய இடத்தை அடைந்துள்ளார்கள்.. எனக்கும் மிமிக்ரி திறமை இருந்தது என்பதால் அந்தவகையில் பெட்ரோமாக்ஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு என்னை அவர் ஒப்பந்தம் செய்தார்..
காரைக்குடியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது முதலில் நாங்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஒருவர் கூட பெண்கள் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், தேவதையாக தமன்னா வந்து இறங்கினார்..
பெரிய நடிகை என்கிற பந்தா எதுவும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாக பழகினார்.. படப்பிடிப்பில் சூர்யா, விக்ரம், பாகுபலி காளகேயன் போல நான் மிமிக்ரி செய்து நடிக்கும் காமெடி காட்சிகள் மிமிக்கிரி வசனங்களை பார்த்துவிட்டு இயக்குநரிடம் யார் இந்த பையன் என்று விசாரித்துள்ளார் தமன்னா..
குறைந்த நாட்கள் தான் அவர் படப்பிடிப்பில் எங்களுடன் கலந்துகொண்டாலும் எந்த ஈகோவும் இல்லாமல் பழக ஆரம்பித்தவர் எனது வேண்டுகோளை ஏற்று, அவரது தீவிர ரசிகரான என் நண்பன் அசாரின் பிறந்தநாளுக்கு மொபைல் போனிலேயே வாழ்த்துச் சொல்லி கால் மணி நேரம் பேசினார். என் நண்பனுக்கு நான் கொடுத்ததிலேயே மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இதுவாகத்தான் இருக்கும்.
அதுமட்டுமல்ல பெட்ரோமாக்ஸ் பட ரிலீஸ் நேரத்தில் தமன்னா கலந்து கொண்ட ஒவ்வொரு பேட்டியிலும் படம் குறித்து கூறும்போது, தவறாமல் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு பாராட்டியபோதுதான் என்னுடைய நடிப்பால் அவர் மனதில் நானும் ஒரு இடம் பிடித்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியவந்தது.. இதைவிட பெரிய பாராட்டும் மகிழ்ச்சியும் ஒரு கலைஞனுக்கு என்ன இருக்க முடியும்?
படம் ரிலீசான சமயத்தில் என் தந்தைக்கு உடல் சரியில்லாமல் இருந்ததால், தியேட்டர்களில் ரசிகர்களிடம் எனக்கு கிடைத்த வரவேற்பை நேரில் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் நண்பர்கள் அனைவருக்கும் எனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி கூறி என்னை உற்சாகப்படுத்தினார்கள்.
இந்த படத்தை பார்த்துவிட்டு சில தயாரிப்பாளர்களும் என்னை பாராட்டினார்கள். குறிப்பாக ஈகிள் ஐ நிறுவன தயாரிப்பாளர் சுதன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டியதோடு தனது அடுத்தடுத்த படங்களில் கட்டாயம் எனக்கு ஒரு கதாபாத்திரம் உண்டு என வாக்குறுதியும் தந்துள்ளார்.
என்னுடைய மிமிக்கிரி காட்சிகளை விட எனக்குள் இருந்த நடிகன் எதார்த்தமாக வெளிப்பட்ட காட்சிகளை நிறைய பேர் பாராட்டியது சந்தோசத்தை கொடுத்தது. மேலும் ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் என் நடிப்பைப் பாராட்டியதுடன், இதுபோன்ற நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, நடிப்பில் உங்களுக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
ஆனால் இந்தப் படத்தை பார்ப்பதற்கு, ஒரு நடிகனாக எனக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு எனது தந்தை தற்போது உயிருடன் இல்லை என்கிற வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது..
பெட்ரோமாக்ஸ் படம் பார்த்துவிட்டு இன்னும் சில பெரிய படங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. அவை குறித்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்களால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.. இதுதவிர ஹரிஷ் கல்யாணுடன் இன்னொரு படத்திலும் இணைந்து நடிக்கிறேன்.
பெட்ரோமாக்ஸ் படத்தில் என்னுடைய கேரக்டருக்காக கிட்டத்தட்ட எட்டு கிலோ எடையை ஏற்றினேன்.. அதேசமயம் ஹீரோவாகவும் கதையின் நாயகனாகவும் நடிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.. நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்பதுதான் தற்போது என்னுடைய எண்ணம்” என்கிற தெளிவான திட்டமிடுதலுடன் தான் இருக்கிறார் டிஎஸ்கே..
பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்
ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.
இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.
பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கவர நினைப்பவர்கள் பலர் இருப்பினும், பார்வையாலயே மிரட்ட தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மையை பெற்று இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஓவியம் மட்டுமல்ல நடிப்பிலும் நான் கில்லாடி என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார் ஸ்ரீதர்.
இப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியால் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.
ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை
தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வந்த மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் மாரி 2. இப்படத்தில் டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், காளி வெங்கட், மாஸ்டர் ராகவன், வித்யா பிரதீப், கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த ரௌடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்த பாடல் யூடியூப் தளத்தில் 715 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது .
தற்போது பில்போர்ட் யூடியூப் பட்டியலில் உலக அளவில் 2019 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் பட்டியலில் ரௌடி பேபி 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது .
மேலும் யூடியூப் நிறுவனம் இந்திய அளவில் அதிகம் 2019 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் ரௌடி பேபி முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .இதுவரை வெளியான தென்னிந்திய மொழி பாடல்களில் அதிக பார்வையாளர்களை கடந்து ரௌடி பேபி பாடல் தொடர்ந்து சாதனை படைத்தது வருகிறது .
'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்
ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்க ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் கழுகு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தை சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக இயக்குகிறார். வெற்றி நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் இன்று (06.12.2019) துவங்கியது.
படத்தைப் பற்றிய மற்ற விபரங்களை தயாரிப்பு நிறுவனம் பின்னர் அறிவிக்கும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா