சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்
Updated on : 19 August 2019

நடிகர் போஸ் வெங்கட்  தன் திரைவாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராக துவங்கி உள்ளார். இயக்குநர் அவதாரத்தால்  மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும்  உள்ள போஸ் வெங்கட் தன்  “கன்னிமாடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். 







கன்னிமாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி அவர் கூறியதாவது....



 



 









இப்படத்தின் டிசைன்ஸ் பார்பதற்கு தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர்  சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு  நாங்கள் சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததினால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கன்னி மாடம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்துள்ளது. அதனை கொண்டு சேர்த்த பத்திரிகை ஊடகத்தினருக்கும், சமூக வலைத்தள ஊடகத்தினருக்கும் மேலும் இதற்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 







நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த “கன்னி மாடம்”. 



 





மேலும் இப்படத்தின் தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் பொருத்தத்தைப் பற்றி விளக்கினார் போஸ் வெங்கட். அதாவது, “நான் இதற்கு முன் சொன்னதுபோல், பெண்களுக்கு அசாத்தியமான கோட்டையாக இருப்பது பற்றிய சாண்டில்யனின் கன்னி மாடம் என்ற சரித்திர நாவல் தான் இதற்கு தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த கன்னி மாடம் என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப் படுகிறது. மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றிவைத்தனர். சில இடங்களில், பெண்கள் பருவ வயதை அடையும்  அவர்களை  நேரத்தில் கட்டாயப் வீட்டுக்குளே இருக்க வைக்கின்றனர். அந்த நேரத்தில் கன்னி மாடத்தின் விளக்கு ஏற்றப்படும். என்று படத்தலைப்பு விளக்கம் கூறினார். 









ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை என ஒவ்வொருவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.







மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர் போஸ் வெங்கட்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா