சற்று முன்

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |    பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'வித் லவ்'!   |    நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் 'மாயபிம்பம்'!   |    ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகும் தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை நிகழ்வு!   |    இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார்!   |    ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |   

சினிமா செய்திகள்

ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்
Updated on : 14 August 2019

இன்றைய இளைய தலைமுறையின் மிக பெரிய பலமே அவர்களின் பரந்து விரிந்த கற்பனை  திறன் தான்.  அந்த தரமான வரிசையில் அடுத்ததாக இணைய போகிறவர் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். வருகின்ற 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பெரும் எதிர்பார்ப்போடு வெளி வர இருக்கும் "கோமாளி" படத்தின் மூலம் அறிமுகமாகும் பிரதீப் ரங்கநாதன் தமிழ்  திரை உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என திரை உலகம் கணிக்கின்றது.



 





" இந்த புகழ் மற்றும் பாராட்டு அனைத்துமே எனக்கு உரியவை அல்ல. எங்கள் குழுவினர் அனைவருக்குமே உரியதானது.ஜெயம் ரவி முதல் காஜல் அகர்வால், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட அனைவருக்கும் உரியது. இக்கட்டான , சவாலான நேரங்களில் இவர்கள் மூத்தவர்களாக எனக்கு கொடுத்த தைரியம் மற்றும் ஊக்கம் மறக்க முடியாதது.என்னை போன்ற அறிமுக இயக்குனரை துணிந்து அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் என் நன்றி உரியது. குறிப்பாக என் கலை இயக்குனர், மற்றும் அவரது குழுவினருக்கு உளமார்ந்த நன்றி. குறிப்பாக அந்த சென்னை வெள்ள காட்சிகளில் அவர்களது உழைப்பும், திட்டமிடுதலும் சொல்லில் அடங்காதவை. படத்தின்  வெள்ளோட்டம் (ட்ரைலர் )  ரசிகர்களுக்கு படம் எதை பற்றியது என்பதை தெளிவாக கூறி விட்டது.



 





 படத்தின் மைய கருத்து  90ஸ் கிட்ஸ் எனப்படும் 90 இல் பிறந்த இளைஞர்களின் சாதனையையும் , அவர்களின் தற்போதைய அனுசரிப்பை பற்றியும் பேசும்.  இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும் "  என்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவர உள்ள "கோமாளி" படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளி இடுகிறது. ஜெயம் ரவி , காஜல் அகர்வால் இணையாக நடிக்க சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்க , ஹிப் ஹாப் ஆதி இசை அமைப்பில் , வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா