சற்று முன்

காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ'
Updated on : 03 August 2019

இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வெங்கட் ரெட்டி & சந்தீப் சாய் COGNIZANTல் சந்தித்தபோது, இருவருக்கும் சினிமா மீது ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது, ஆனால் வெங்கட் ரெட்டிக்கு நடிப்பிலும், சந்தீப் சாய்க்கு இயக்குனராவதிலும் ஆர்வம். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி, குறிப்பாக உலக சினிமாவைப் பற்றி அதிகம் பேசுவது வழக்கம். அந்த நேரத்தில் தான் சந்தீப் சாய் ஒரு தனித்துவமான உள்ளடக்கத்தை கொண்ட ஒரு யோசனையுடன் வந்தார். பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அவர்கள் இறுதியாக “யாரோ”வுக்குள் வந்தார்கள்.



 







எனவே சந்தீப் சாயின் திட்டம் COGNIZANT வேலையிலிருந்து முழுமையாக விலகி ஸ்கிரிப்ட்டில் முழு நேரமும் வேலை செய்வதாக இருந்தது. அதே நேரத்தில் வெங்கட் ரெட்டியிடம் திரைப்பட நடிப்புப் படிப்புகளைத் தொடரவும், அதற்கு இணையாக வெவ்வேறு எம்.என்.சி.களில் (சி.டி.எஸ், ஐ.பி.எம் மற்றும் அக்சென்ச்சர்) பணிபுரியும் எண்ணம் இருந்தது.



 







கதையை பற்றி வெங்கட் ரெட்டி கூறும்போது, “கதை சொல்லல் என்பது திரைப்படத் தயாரிப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்பதை நான் உணர்கிறேன். நிச்சயமாக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு ஆரோக்கியமான தயாரிப்பை அதிகப்படுத்தி வழங்குகிறார்கள். ஆனால் முடிவில் கதை எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை பற்றி தான் பேசப்படும். சந்தீப் சாய் இந்த கதையை விவரிக்கும் போது, நான் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறேன் என்ற எனது அடையாளத்தை உண்மையில் மறந்து, ஒரு ரசிகனாக அதை ரசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டத்தில் நான் இதை பெரிதுபடுத்தி சொல்வது போல தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிறைய முக்கியத்துவத்துடன் எழுதிய அவரது திறமை தான், கதையை மிகவும் சுவாரஸ்யப்படுத்தியது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளராக நான் உற்சாகமாகவும், ஒரு நடிகராக பதட்டமாகவும் இருக்கிறேன். ஏனெனில் சந்தீப் சாய் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நான் கருதுவதால் பதட்டமாக இருக்கிறது" என்றார்.



 





இயக்குனர் சந்தீப் சாய் கூறும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், கொலை மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை. ஒரு தனித்துவமான கதையுடன் சொல்லலுடன் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.



 





சந்தீப் சாய் படத்தை பற்றி மேலும் கூறும்போது, “'யாரோ' ஒரு தனிமையான நாயகனை பற்றியது. தொடர்ச்சியான நடக்கும் கொலைகளில் அவரை சிக்க வைக்க முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார். கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்கும் திறனை பற்றிய மிகப்பெரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.



 





“யாரோ 2019ன் சிறந்த தமிழ் திரைப்படமாக இருக்கும் - நாங்கள் சவால் விடுகிறோம்” என இருவரும் புன்னகையுடன் முடிக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா