சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர்
Updated on : 03 August 2019

தயாரிப்பாளர்  லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.  அதிதிராவ் ஹெய்தாரி  நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி  நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும் கவர்ந்த கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு மாஸான கூட்டணியை இணைத்து கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். 



 





மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ஒருவர், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். மற்றொருவர்  96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த கேமராக்காதலன் பிரேம்குமார். இவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் எனர்ஜி. இந்தக் கவிநய கூட்டணியில் இளைஞர்களின் ஆதர்ச இசைஞர் கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன். எடிட்டராக கோவிந்த் ராஜ் பணியாற்ற சண்டைப்பயிற்சியை திலீப் சுப்புராயன் கவனிக்கிறார். 



 





திரைத்துறையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக துவங்கியது.



 



 



பூஜையில்,  விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹெய்தாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள்  வயகாம் அனுப் விஜய்சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா  சதிஷ் மற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆந்திரமாநிலம் சித்தூர் டிஸ்டிக் கலெக்டர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.



 





 



 இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சீயான் விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படத்தையும் மேலும் பல பெரிய படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா