சற்று முன்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |   

சினிமா செய்திகள்

அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு
Updated on : 03 August 2019

அருண் விஜய்க்கு விளையாட்டுகளின் மீதிருக்கும் தணியாத பேரார்வம் அனைவரும் அறிந்ததே. இது வெறும் வாய்வழிச் செய்தி மட்டும் அல்ல. தொடர்ந்து கட்டுக்கோப்பாகத் தமது உடலை அவர் வைத்திருப்பதும், அன்றாடம் திவிரமாக அவர் உடற்பயிற்சி செய்வதும் காரணங்களாகும். அருமையான ஆஜானுபாகுவான தோற்றமும் உடல் வலுவும் கொண்ட இவர், தனக்குள் பெருக்கெடுக்கும் விளையாட்டு ஆர்வத்தைத் தன் மட்டோடு அடக்கிக்கொள்ளவில்லை. தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20  குத்துச்சண்டை வீர்களுக்கும் (தங்கம் வென்ற ஆண்கள் 8, பெண்கள் 3, மற்றும் வெள்ளி பெற்றவர்கள் 9) பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாகத் தமது ஆதரவுக் கரத்தையும் நீட்டியிருக்கிறார். 

ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டிகளில் ரன்னர் சேம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு பயிற்சியாளர் செந்தில்நாதனுக்கும் பாராட்டுக்களை அருண் விஜய் தெரிவித்தார். மேற்படி விளையாட்டு வீரர்கள் பெற்ற வெற்றியைப் பாராட்டும் விதமாக நேரில் அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். 

புன்னகையோடு அருண் விஜய், “இந்த வெற்றிக் களிப்பு 20 சாதனையாளர்களுடன் நின்றுவிடாது. நம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்குமான வெற்றி இது. என்னைப் பொருத்த வரை இந்த 20 பேரும் உண்மையிலேயே சாகசம் நிகழ்த்தியவர்கள்” என்றார். மேலும் அவர் தன் பேச்சை நியாயப் படுத்தும் வகையில், “ஒரு விளையாட்டு வீரராகவோ, தடகள வீரராகவோ இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குறிப்பாகக் குத்துச் சண்டை வீரரின் சாகசம் நிச்சயம் எளிதானதல்ல. அவர்கள் பெருமளவில் உடல் மற்றும் மன ரீதியாகத் தயாராகவேண்டியிருக்கும். ஒரு ஜென் துறவியின் மனப் பக்குவம் அவர்களிடம் இருக்க வேண்டும். தங்கள் செயல்பாட்டை திடீரென நிகழ்த்தும் ஆற்றல் அவர்களுக்கு அவசியமாகும். அதே சமயம் ஒவ்வொரு வினாடியையும் துல்லியமாக் கணித்துச் செயலாற்றவும் வேண்டும். தனிப்பட்ட முறையில் வெளியாகவிருக்கும் என்னுடைய, ‘பாக்ஸர்’ திரைப்படத்துக்காக நான் சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது.  அந்தப் பாத்திரத்தில் நடிக்க நான் மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். ஆனால் இந்த வீரர்கள் தளராத முயற்சியோடு   இரவு பகலாக, ஆன்மசுத்தியோடு வியர்வை சிந்துவதைப் பார்க்கும்போது உண்மையிலேயே திகைப்பாக இருக்கிறது. அதுவும் சில சமயங்களில் அவர்களுக்கான ஆதரவு என்பது மிகக் குறைவாக இருக்கும்போதும் அவர்களின் கடுமையான பயிற்சி வியப்பை ஏற்படுத்துகிறது.  அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுக்களையும் ஊக்குவிப்பையும் அளிக்க விரும்பினேன்.  ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர்கள் தங்களது அனுபவங்களையும், பயணத்தையும் என்னுடன் பகிர்ந்துகொண்டபோது நான் அவற்றால் ஆழமாக ஈர்க்கப்பட்டு உத்வேகம் பெற்றேன்.  அவர்கள் சந்தித்த சவால்களும், அவறை எதிர்த்து அவர்கள் போரிட்டதும் எனக்கு அதிகளவிலான ஊக்கத்தை அளித்தன. அவற்றை நான் என் வாழ்நாள் முழுவதும் சுவாசிக்க விரும்புகிறேன். மேலும் அவர்களின் தொடர்பு என் ஆன்மாவை ஊக்குவிப்பாலும், நேர்மறை எண்ணங்களாலும் மேன்மைப்படுத்தி நிரப்பியது. அவர்களுடன் நிரந்தரமான நட்பைத் தொடர விரும்புகிறேன்”   எனவும் சொன்னார். 

அவர்களுடையை வருங்கால தொழில்முறைச் சாதனைகள் அனைத்துக்கும் தான் உறுதுணையாக இருப்பேன்  எனவும் அருண் விஜய் உறுதியளித்தார். 

நடிப்பைப் பொருத்த வரையில் அருண் விஜய் தற்போது  ‘அக்கினிச் சிறகுகள்’, ‘பாக்ஸர்’, மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அவை ஒவ்வொன்றும் தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதைக் களங்களும், வெவ்வேறு வகையான பாத்திரங்களும் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் அவை உச்சகட்ட எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கின்றன. இந்தப் படங்களைப் பற்றிய ஏராளமான செய்திகளும் புதுப் பட அறிவிப்புக்களும்  விரைவில் அணிவகுக்க உள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா