சற்று முன்
சினிமா செய்திகள்
அதர்வா முரளி நடிக்கும் புதிய படம்
Updated on : 29 July 2019
அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. சென்னையில் 15 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளது.
"அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள், இந்த ஜோடி திரையில் நிறைய புத்துணர்ச்சியை தரும். அவர்கள் இருவரும் நிச்சயமாக பார்வையாளர்களை அவர்களின் உணர்வு வெளிப்பாடு மற்றும் அழகான செய்கைகளால் ரசிக்க வைப்பார்கள். ரொமான்டிக் படங்களுக்கு என்றே எப்போதும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டின் கடைசி கட்டத்தில் வெளியிடப்படவுள்ள இந்த பெயரிடப்படாத படம் அனைவராலும் ரசிக்கப்படும், குறிப்பாக குடும்பங்கள் இந்த படத்தை ரசிப்பார்கள்" என நம்பிக்கையுடன் முடித்தார் இயக்குனர் கண்ணன்.
இந்த படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.கண்ணன் எழுதி இயக்கும் இந்த காதல் திரைப்படத்துக்கு கூடுதலாக வலு சேர்க்கிறார் வசனகர்த்தா கபிலன் வைரமுத்து. எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மசாலா பிக்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
.jpg)
சமீபத்திய செய்திகள்
சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “மை லார்ட்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார் மற்றும் வசுமித்ரா போன்ற பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவை நீரவ் ஷா, இசையமைப்பை ஷான் ரோல்டன், பாடல்களை யுகபாரதி, கலை இயக்கத்தை முனி பால்ராஜ், படத்தொகுப்பை சத்யராஜ் நடராஜன், ஆடை வடிவமைப்பை டி. ஆர். பூர்ணிமா, நடனத்தை எம். ஷெரீப், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட் மேற்பார்வை எடுத்து உள்ளனர்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து வழங்கும் இந்த படத்தில், அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய காட்சிகள் டிரெய்லரில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. சிறுநீரக திருட்டு சம்பவம், ஜனநாயக உரிமைகள், சசிகுமார் வசனங்கள் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகன் மற்றும் தொடர்ச்சியான வெற்றிபெற்ற படங்களை வழங்கிய சசிகுமார் ஆகியோர் முதன்முறையாக இணைந்த இந்த படம், டிரெய்லர் மட்டுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் குரலில் அரங்கேற்றப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல்!
தமிழ் ஆன்மிக இசையின் பெருமையை மீண்டும் கொண்டு வரும் திருவாசகம் புதிய இசை வடிவில் ரசிகர்களை கவர்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் பாடல், வரும் ஜனவரி 22 அன்று அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட பாடல், நேரடியாக நிகழ்ச்சியினை ரசிக்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பாரம்பரிய ஆன்மிகத்தையும் நவீன இசை மொழியிலும் இணைத்த ஜி.வி. பிரகாஷ், திருவாசகத்தின் ஆழமான பக்தி உணர்வை இன்றைய தலைமுறைக்கும் எளிதில் உணரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. இந்த முதல் பாடல் அந்த கனவின் ஆரம்பப் படியாகும். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டையும் பெற்ற பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

நகரின் சுழற்சியும் குடும்ப உறவுகளும் கலந்த “கான் சிட்டி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களும் குடும்ப உணர்வுகளும் கலந்த படைப்புகள் தொடர்ந்து வெளிவருவதில், புதிய “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களை கவர உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார், இது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, வடிவுக்கரசி, மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
போஸ்டர் நகர பின்னணியில் நிகழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் உணர்வுகளை நெருக்கமாகக் காட்டுகிறது. அர்ஜூன் தாஸ் ஹேண்ட் பேக்குடன், அன்னா பென் அவரைச் சுற்றி, யோகிபாபு பயணப்பெட்டி உடன், மற்றும் குழந்தை அகிலன் வெற்றிக் கோப்பையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் படத்தின் காமர்ஷியல் மற்றும் குடும்ப மனதை வெளிப்படுத்துகிறது.
Power House Pictures தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்து, மங்களூர், சென்னை, மும்பை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் திட்டத்தில் உள்ளது. புதிய தலைப்பு மற்றும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களுக்கும் திரை ஆர்வலர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“VVVSI.com” கட்டணமில்லா வேலைவாய்ப்பு இணையதளம் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களிலும், இளைஞர்களுக்கு நம்பிக்கை மற்றும் எதிர்கால நிச்சயம் வழங்கி வரும் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம், இன்று ஒரு புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் கட்டணமின்றி ஒரே தளத்தில் நேரடியாக இணைக்கும் VVVSI.com என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளம் மதுரையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்த இணையதளத்தை சமூக அக்கறை மற்றும் மனிதநேயப் பொறுப்புடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். அவர் நிகழ்வில் கூறியதாவது:
“ஒரு இளைஞனுக்கு வேலை கிடைப்பது அவன் குடும்பத்தின் எதிர்காலத்தை மாற்றும். அந்த மாற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் கட்டணமின்றி உறுதியான பாலமாக இருந்து வருகிறது.”
கடந்த 10 ஆண்டுகளில், இந்த இயக்கம் 34,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, 2.17 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை வழங்கி, பல குடும்பங்களில் பொருளாதார நிலைத்தன்மையும், சமூக முன்னேற்றமும் உருவாக்கியுள்ளது.
இணையதள தொடக்க நிகழ்வில், இயக்கத்தின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஒருங்கிணைப்புகளை இயக்கத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வீரராஹவன் முன்னிட்டு நடத்தினார்.
இந்த புதிய இணையதளம், வள்ளலார் வழியிலான மனிதநேயம், கருணை, சமத்துவம் மற்றும் சேவை மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் புதிய வாசலாக திகழும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக்
விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோலா, பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா முயற்சி #PuriSethupathi, திரைப்படம், ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா (JB Narayan Rao Kondrolla) இணைந்து தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளது. “ஸ்லம் டாக்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு “33 டெம்பிள் ரோடு” என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கலைந்த முடி மற்றும் தாடியுடன், பிச்சைக்காரன் உடையில், நீளமான ஸ்கார்ஃப் மற்றும் பூட்ஸ் அணிந்து, மங்கலான வெளிச்சம் மற்றும் பனிமூட்டம் சூழ்ந்த குடிசைப் பகுதியில், கையில் பெரிய கதையை பிடித்தபடி, சுற்றிலும் பணக்கட்டுகள் பறக்கும் நிலையில் விஜய் சேதுபதி ஒரு வெறித்தனமான அவதாரத்தில் தோன்றுகிறார். இந்த டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் இப்படத்தின் ஆக்சன் எண்டர்டெய்னர் தன்மைக்கு, பெரும் ஹைப்பை உருவாக்குகின்றன.
தன் நாயகர்களை தனித்துவமான மேக்கோவர்களுடன் மாஸாக உருவாக்குவதில் பெயர் பெற்ற பூரி ஜெகன்னாத், இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார். விஜய் சேதுபதி, இதுவரை தனது திரை வாழ்க்கையில் முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மேலும், பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களில் கலக்கியுள்ளனர்.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படம், தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
“காந்தி டாக்ஸ்” வார்த்தைகளின்றி உணர்ச்சிகளை உருமாற்றும் புதிய திரைப்பட டீசர் வெளியாகியது
திரைப்பட உலகில் வார்த்தைகள் மட்டுமல்ல, காட்சி, இசை மற்றும் மௌனமும் கதையை உருமாற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் புதிய முயற்சி – “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஒரு வசனம் கூட இல்லாமல், தீவிரமான காட்சிகள் மற்றும் மௌன இடைவெளிகள் மூலம் பார்வையாளர்களின் உள்ளத்தை தொடும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த டீசர், “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற கேள்வியை தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்கள் மௌனத்தின் மூலம் சக்திவாய்ந்ததாக உணரப்படுகின்றன.
விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் வார்த்தைகள் இல்லாமல், காட்சிகளின் மூலமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமையை டீசரில் நிரூபித்துள்ளனர்.
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையினால் மௌனத்திற்கும், கதையின் பதற்றத்திற்கும் புதிய உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
Zee Studios வழங்கும் “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தை Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ளனர். 2026 ஜனவரி 30 அன்று உலகமெங்கும் வெளியாகும் இப்படம், மௌனத்தை ஒரு சக்திவாய்ந்த கதையாக்கமாக மாற்றி, பார்வையாளர்களுக்கு புதிய திரையரங்கு அனுபவத்தை தரவுள்ளது.
'ஒளடதம்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு
தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் ‘ஒளடதம்’ படத்தின் மூலம் தனித்த கவனத்தை ஈர்த்தவர் நேதாஜி பிரபு. மருத்துவ மாஃபியாக்களை மையமாகக் கொண்டு சமூக அக்கறையுடன் பேசப்பட்ட அந்தப் படம், அவரது சினிமா பார்வையின் நேர்மையையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியது.
‘ஒளடதம்’ படத்திற்குப் பிறகு சிறு இடைவெளி எடுத்திருந்த நேதாஜி பிரபு, தற்போது தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை தொடங்கும் வகையில் ஒரு அழகிய, பிரமாண்ட போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார். இது வெறும் தோற்ற மாற்றம் அல்ல; அவரது உள்ளார்ந்த தயாரிப்பின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி, உடலை முறுக்கேற்றி, சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து முழுமையான மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். இந்த போட்டோ ஷூட்டில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி, 8 விதமான ஸ்டைல்களில் 8 மாறுபட்ட தோற்றங்களில் கேமராவை எதிர்கொண்டுள்ளார்.
500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, இதுவரை யாரும் செய்யத் துணியாத அளவிலான அர்ப்பணிப்பின் சின்னமாக அமைந்துள்ளது. இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கை தொடங்கும் நம்பிக்கையுடன் நேதாஜி பிரபு களம் இறங்கியுள்ளார்.
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று வாழத் தயாராக, உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு, அர்ப்பணிப்பு என அனைத்துக் கோணங்களிலும் தன்னை முழுமையாகத் தகுதிப்படுத்திக் கொண்டு வந்துள்ளார்.
சினிமா என்பது அதை காதலுடனும் மரியாதையுடனும் அணுகுபவர்களை ஒருபோதும் கைவிடாது என்பதற்கான அமைதியான சாட்சி இந்த முயற்சி. அலட்சியமாக அல்ல; தகுதியுடன் வந்தவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதை நினைவூட்டும் வகையிலேயே இந்த போட்டோ ஷூட் அமைந்துள்ளது.
இதுவரை கனவுகளைச் சேகரித்தவர், இப்போது அதை வாழ்வாக்கத் தயாராக உள்ளார் என்ற உணர்வை இந்த புகைப்படங்கள் ஏற்படுத்துகின்றன. நேதாஜி பிரபுவின் அயராத உழைப்பும், நம்பிக்கையும், கனவுகளும் ஒன்றிணைந்து உருவான இந்த போட்டோக்கள் தற்போது காட்சி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கவனம் ஈர்த்து வருகின்றன.
நெட்ஃபிலிக்ஸ் 2026 தமிழ் திரைப்பட வரிசை வெளியீடு
மும்பை, ஜனவரி 15, 2026: தமிழ் சினிமாவின் கதை சொல்லல் தரத்தை உலகளவில் எடுத்துச்செல்லும் நோக்கில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் 2026-ஆம் ஆண்டில் வெளியிடவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் முன்னணி நட்சத்திரங்கள், திறமையான இயக்குநர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் கதைகள் இடம்பெற்றுள்ளன.
2025 ஆம் ஆண்டில், ‘இட்லி கடை’, ‘டிராகன்’, ‘டியூட்’, ‘குட் பேட் அக்லி’ போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களும், ‘பைசன்’, ‘காந்தா’ போன்ற தரமான படைப்புகளும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வியத்தகு வரவேற்பைப் பெற்றன. இதனை தொடர்ந்து 2026-ஆம் ஆண்டு, திரையரங்கில் வெளியான பின்னர் உலகம் முழுவதும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் தமிழ் திரைப்படங்கள் பார்வையாளர்களை சென்றடையும் வகையில் வெளியாகும்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முக்கியப்படங்கள்:
-
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘காரா’
-
வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா 46’ மற்றும் ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’
-
கார்த்தி, கல்யாணி இணைந்து நடித்த அதிரடி ஆக்ஷன்-டிராமா ‘மார்ஷல்’
-
யோகி பாபு நடிப்பில் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘அன் ஆர்டினரி மேன்’
-
எஸ்.ஜே. சூர்யா நடித்தும் தயாரித்தும் வரும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’
ஆக்ஷன், டிராமா, கிரைம், நகைச்சுவை உள்ளிட்ட அனைத்து வகை திரைப்படங்களும், திரையரங்கில் வெளியீட்டுக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை நெட்ஃபிலிக்ஸ் தளம் மூலம் சென்றடையும்.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியா உள்ளடக்கத் துறை துணைத் தலைவர் மோனிகா ஷெர்க் கூறியதாவது:
“வலுவான, உணர்வுப்பூர்வமான, அசல் கதைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் இந்தியாவிலும் உலகளவிலும் பார்வையிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு, கொண்டாடப்படுகின்றன. பொங்கலை முன்னிட்டு நான்காவது ஆண்டாக எங்களின் தமிழ் உரிமம் பெற்ற திரைப்பட பட்டியலை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். ‘இட்லி கடை’, ‘டியூட்’, ‘டிராகன்’, ‘பைசன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற சிறந்த கதைகளை திறமையான இயக்குநர்களுடன் இணைத்து பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உற்சாகமாக காத்திருக்கிறோம்”
2026 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல்:
• பெயரிடப்படாத சூர்யா, வெங்கி அட்லூரி படம் (சூர்யா 46): சூர்யா, மமிதா பைஜு (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• AGS 28: அர்ஜுன் சர்ஜா, ப்ரீதி முகுந்தன்
(தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்),
• புரொடக்ஷன் நம்பர் 1: ரவி மோகன், எஸ். ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• டயங்கரம்: வி.ஜே. சித்து (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• கட்டா குஸ்தி 2: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• இதயம் முரளி: அதர்வா முரளி, காயடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• மார்ஷல்: கார்த்தி, கல்யாணி பிரியதர்ஷன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• அன் ஆர்டினரி மேன்: யோகி பாபு (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• பெயரிடப்படாத தனுஷ் மற்றும் ராஜ்குமார் படம்: தனுஷ்
(தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• வித் லவ்: அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• பெயரிடப்படாத சூர்யா மற்றும் ஜித்து மாதவன் படம் (சூர்யா 47): சூர்யா, நஸ்ரியா நஸீம், நஸ்லென் கே. கஃபூர் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)
• காரா: தனுஷ், மமிதா பைஜு (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)
சாய் துர்கா தேஜ் கிராமத்து அவதாரத்தில் ‘SYG (சம்பரால எட்டிகட்டு)’ சங்கராந்தி போஸ்டர் வெளியீடு
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் பான்-இந்தியா பிரம்மாண்ட ப்ரீயட் ஆக்ஷன் திரைப்படம் SYG (சம்பரால எட்டிகட்டு) புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சங்கராந்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியான இந்த போஸ்டர், நடிகரை இதுவரை காணாத கிராமத்து அவதாரத்தில் வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கிறது.
ரோஹித் KP இயக்கத்தில், K. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிப்பில் உருவாகும் இந்த படம், ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வருகிறது. கிராமத்து வாழ்வியல் மற்றும் தீவிரமான ப்ரீயட் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டுள்ள SYG, சாய் துர்கா தேஜின் முழு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
போஸ்டரில், சாம்பல் நிற சட்டை மற்றும் பாரம்பரிய பஞ்ச கட்டுடன், காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்லும் நடிகர், அருகில் மகத்தான காளை மாட்டை இழுத்து செல்கிறார். அவரது தீவிர பார்வை, அடர்த்தியான தாடி மற்றும் நுண்ணிய புன்னகை—all ஒன்றிணைந்து கதாபாத்திரத்தின் கடுமையும் உள்ளார்ந்த வெப்பமும் வெளிப்படுத்துகின்றன.
இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் தனது உடல் அமைப்பையும், உடல் மொழியையும் முழுமையாக மாற்றியுள்ளார். பல கடுமையான ஆக்ஷன் காட்சிகளில் அர்ப்பணிப்புடன் நடித்த அவர், மண்ணோடு பிணைந்த மனிதனாக கதையின் உணர்ச்சி மற்றும் மோதல்களை உணர்த்துகிறார்.
முன்னதாக, பிறந்த நாளில் வெளியான அசுர ஆகமனம் க்ளிம்ப்ஸ் இருண்ட மனநிலை, உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் மற்றும் பீரியட் கால சாயலுக்காக பாராட்டுகளைப் பெற்றது. புதிய சங்கராந்தி போஸ்டர், கதையின் வன்முறை புயலை முன்காணும் அமைதியான காட்சியாக அமைந்துள்ளது.
வெற்றிவேல் பழனிசாமியின் ஒளிப்பதிவு, B. அஜனீஷ் லோக்நாத் இசை மற்றும் ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்-உடைய உயர் தர தயாரிப்பு SYG-ஐ மண்ணின் உணர்ச்சி மற்றும் பிரம்மாண்டமாக அமையும் சக்திவாய்ந்த ஆக்ஷன் திரையனுபவமாக மாற்றியுள்ளது.
பிரமாண்ட புராண ஆக்ஷன் ‘நாகபந்தம்’ – நபா நடேஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவு முயற்சியாக உருவாகி வரும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம் ‘நாகபந்தம்’ படக்குழுவின் இறுதிக் கட்டத்திற்கு அருகில் உள்ளது. நாயகன் விராட் கர்ணா மற்றும் நாயகி நபா நடேஷ் நடிப்பில் உருவாகும் இந்த படம், தற்போது ‘பார்வதி’ கதாபாத்திரத்தில் தோன்றும் நபா நடேஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
மகர சங்கராந்தி முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரில், நபா நடேஷ் பாரம்பரிய உடையில் அழகும் ஆன்மிக ஒளியும் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சேலை, நுட்பமான ஆபரணங்கள் மற்றும் அமைதியான முகபாவனை—all இவை அவரது கதாபாத்திரத்தின் பக்தி, தூய்மை மற்றும் புராண அம்சத்தை வெளிப்படுத்துகின்றன.
போஸ்டரில் நாயகி அருகில் நீல நிறப் பறவை, பிரம்மாண்ட மயில் மற்றும் கோவில் பின்னணி இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் ‘பார்வதி’ கதாபாத்திரத்தின் ஆன்மிக அடையாளமும், படத்தின் கருப்பொருளும் ஒரே போஸ்டரில் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படத்தில் நபா நடேஷுடன் ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி ஷர்மா, B. S. அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் பழமையான விஷ்ணு கோவில்கள் பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம், புராணம், சஸ்பென்ஸ் மற்றும் தெய்வீக பாரம்பரியத்தை இன்றைய காலகட்ட கதையுடன் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன் S, எடிட்டிங்: RC பிரணவ், கலை இயக்கம்: அசோக் குமார் ஆகிய முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளதால், படம் மிகச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிஷோர் அன்னபூரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிப்பில் உருவாகும் ‘நாகபந்தம்’, இந்த கோடைக்காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













