சற்று முன்
சினிமா செய்திகள்
தேர்தலில் வெற்றிபெற்ற பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்
Updated on : 25 July 2019

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற
இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிடம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம்.
உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி 2’வில் துரை சுதாகர் வில்லன் வேடத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு கட்டத்தில் களவாணி தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும்
விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், துரை சுதாகர் கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் பேசும் வசனத்திற்கு ஆரவாரமாக கைதட்டுகிறார்கள்.
இப்படி, வில்லனாக நடித்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்திருக்கும் துரை சுதாகர், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்குகளுக்கு சென்ற போது அவரை சூழ்ந்துக் கொண்ட மக்கள், “எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் தலைவரே...” என்றும் கோஷமிடுகிறார்களாம்.
தற்போது, வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கும் ‘டேனி’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், படப்பிடிப்பில் இருந்தாலே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடிவிட, ஒரே தேர்தல் கோஷங்களாகவே எழுகின்றதாம்.
முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும், என்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரை, பொது மக்கள் அரசியல்வாதியாக ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு ‘களவாணி 2’ வில் அவர் நடித்த ஊராட்சி தலைவர் கதாபாத்திரமும், அவரது நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மக்களிடம் ரீச் ஆகியிருக்கிறது.
சமீபத்திய செய்திகள்
சத்யராஜ் செய்த சாதனை
சத்யராஜ் நடிக்கும் "தீர்ப்புகள் விற்கப்படும்' படம் துவங்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்ப்படவுலகில் முதல் முறையாக சத்யராஜ் நடித்த அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் விசேட கேமராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதிலும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சத்யராஜ் தான் நடித்த காட்சிகள் அனைத்திற்கும் சேர்ந்தாற்போல் பனிரெண்டு மணி நேரம் பேசி டப்பிங் பணிகளை முடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் தீரன் கூறியதாவது...
"சத்யராஜூடன் இணைந்து பணியாற்றியது எனக்கு சினிமா மீது தீர்க்க முடியாத வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்ததுமே அதற்கு சத்யராஜ்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஆனால் அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன். இதற்குக் காரணம் சினிமா மீது அவர் கொண்ட பேரார்வமும், தொழில் பக்தியும் மட்டுமல்ல, கலையையும் நடிப்பையும் அவர் உணர்வுபூர்வமாக பின்பற்றும் முறையும்தான். நட்சத்திரம் என்பதையும் தொழில் நெறிமுறைகளையும் தாண்டி, அவர் மிகச் சிறந்த மனிதராக படப்பிப்பு அரங்கில் இருக்கும் ஒவ்வொருவரையம் கவர்ந்திழுக்கிறார். அவரது அர்பணிப்பு மிக்க நடிப்பு 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் மிகப் பெரிய பலமாக, படத்தைத் தாங்கி நிற்கும் தூணாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. படத்தின் டப்பிங் பணிகளையும் முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் சார் தனது டப்பிங் பணிகளை பனிரெண்டு மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். படம் முழு வடிவம் பெற்றிருக்கும் விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழச்சியோடு இருக்கிறோம். வெகு விரைவில் டீஸர் வெளியிடும் தேதியை அறிவிக்க இருக்கிறோம் என்றார்.
மயிர் கூச்செரியச் செய்யும் சத்யராஜின் சண்டைக் காட்சிகள் நிரம்பிய, ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வரச் செய்யும் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் வகைப் படம் தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஹனி பீ கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக சஞ்சீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் தீரன் இயக்கியிருக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு 'கருடவேகா' அஞ்சி ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். நெளஃபல் அப்துல்லா படத்தொகுப்பை செய்திருக்கிறார்.
விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு சம்பவம் என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது, நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்' என்றார்.
உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க
பனி படரத்தொடங்கியிருக்கும் இந்த இதமான தட்ப வெட்ப நிலையில் நெஞ்சுக்கு நெருக்கமாக அமையக்கூடிய நகைச்சுவை கலந்த காதல் படத்தைப் பார்ப்பதைத் தவிர வேறு எது அழகாகவும் அற்புதமான அனுபவமாகவும் இருக்க முடியும்? ஆம்... எதிர்வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் 'தனுசு ராசி நேயர்களே' முழு நீள பொழுதுபோக்குச் சித்திரமாக அனைத்து தரப்பையும் மகிழ்விக்கவிருக்கிறது. இது குறித்து படக்குழு முழுவதும் அதிகபட்ச உற்சாகத்தில் திளைக்க, நாயகன் ஹரீஷ் கல்யாண் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா என்ன? மற்றவர்களைக் காட்டிலும் இன்னும் அதிக உற்சாகத்தில் இருக்கும் அவர், 'தனுசு ராசி நேயர்களே' குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
"திரும்பத் திரும்ப நான் ஒரே விஷயத்தை சொல்வதுபோல் தோன்றினாலும் உண்மை அதுதானே... 'தனுசு ராசி நேயர்களே' எனக்கு முழுமையான முதல் தரமான தனித்துவம் மிக்க அனுபவத்தைத் தந்தது. நகைச்சுவை பலமாக அமைந்த வித்தியாசமான கதைக்களம் இது. ஒரு நல்ல காதல் கதை என்பது ரம்யமான காதல் காட்சிகள் மட்டுமின்றி, குடும்ப ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் நிரம்பியதாக இருக்க வேண்டும். தனுசு ராசி நேயர்களே இவ்வாறு அமைந்ததற்கு இயக்குநர் சஞ்சய் பாரதிதான் காரணம். காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமெண்ட்ஸ் என்று அனைத்து கூறுகளும் நிரம்பிய கதையாக இதை அவர் வடிவமைத்திருந்தார். நகைச்சுவை மிக்க காதல் படங்களுக்கு சில விசேட தகுதிகள் தேவைப்படும். அதாவது நகைச்சுவை, காதல் மற்றும் சென்டிமெண்ட் சரியான விகித்த்தில் கலக்கப்பட்டிருந்தால்தான் ரசிகர்களை முறையாக ஈர்க்கும். அந்த வகையில் இயக்குநர் சஞ்சய் பாரதி மிகச் சிறப்பாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.
என்னுடன் இணைந்து நடித்த டிகன்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான் இருவரும் தாங்கள் ஏற்ற வேடங்களை அதிக பட்ச அர்பணிப்பு உணர்வுடன் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். கே.பாலசந்தர் சாரின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் ரேணுகா மேடம் இப்படத்தில் எங்களுடன் இணைந்து நடித்திருப்பது எங்கள் குழுவுக்கே பேரானந்தமாக இருந்தது. இவை அனைத்துக்கும் மேலாக பல ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வரும் பண்பட்ட நடிகர்களான பாண்டியராஜன் சார், மயில்சாமி சார், சார்லி சார் ஆகியோருடன் இந்தப் படத்தில் பணியாற்றியிருப்பது என்னால் என்றென்றும் மறக்க முடியாது. எல்லாப் படங்களையும்போல் ஜிப்ரான் இந்தப் படத்திலும் மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார் என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த முடியாது. ஜிப்ரான் தனது இசை மூலம் இந்தப் படத்துக்கு அழகூட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் ஸ்க்ரிப்ட்டின் மீது நம்பிக்கை வைத்து, அதற்கு செயல் வடிவம் கொடுத்த தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாருக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொத்தத்தில் தனுசு ராசி நேயர்களே ரசிகர்களை முழு திருப்தியடையச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட முழுமையான பொழுதுபோக்குப் படமாகும். படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொணடு வாங்கி சிறப்பான முறையில் வெளியிடும் ஃபைவ் ஸ்டார் செந்தில் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் யோகிபாபு, முனீஷ்காந்த், சங்கிலி முருகன், டேனி ஆனியல் போப், டி.எஸ்.கே.அஸ்வின், ஹரிதா மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, குபேந்திரன் படத்தொகுப்பை கவனித்தருக்கிறார். உமேஷ் ஜே.குமார் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே'
நகைச்சுவை கலந்த காதல் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு, வரும் வெள்ளிக் கிழமையன்று ஏராளமான விருந்து காத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்து, டிசம்பர் 6 முதல் உலகெங்கும் வெளியாகும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் நகைச்சுவை கலந்த முன்னோட்ட காட்சிகளுக்காகவும், ஜிப்ரானின் இனிமையான பாடல்களுக்காகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து பேசிய இயக்குநர் சஞ்சய் பாரதி, "இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்தது குறித்து எங்கள் குழுவே மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. 'தனுசு ராசி நேயர்களே' படம் முழு நீள நகைச்சுவை மட்டுமின்றி, மெலிதான காதல் மற்றும் அனைவருக்குமான பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டதாகும்.
இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை எழுத ஆரம்பித்ததுமே என் மனதில் தோன்றிய முதல் விஷயம், இது முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்கள் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதுதான். இப்போது படம் முழுவதும் பூர்த்தியடைந்த பிறகு பார்த்த படக்குழுவினரும் நெருங்கிய நண்பர்களும் தங்கள் முழு திருப்தியை தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக படத்தைப் பார்த்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் படம் வெகுவாக திருப்தியளித்ததாகத் தெரிவித்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றாலும், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையிலான படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எனது குறிக்கோளை 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன் என்று திடமாக நம்புகிறேன்" என்றார்.
.ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகன்கனா சூர்யவன்ஷி ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர். ரேணுகா, முனீஷ்காந்த், யோகி பாபு, டேனியல் ஆன் போப், சார்லி, பாண்டியராஜன், மயில்சாமி, டி.எஸ்.கே.அஸ்வின், ஹரிதா மற்றும் சம்யுக்தா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பி.கே.தர்மா ஏற்க, படத்தொகுப்பை குபேந்திரனும், கலை இயக்குநர் பொறுப்பை உமேஷ் ஜே.குமாரும் ஏற்றிருக்கின்றனர்.
ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'
காதல் படங்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமாவதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது அதன் நேர்த்தியான இசை. 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசை மூலம் மீண்டும் இதை வெற்றிகரமாக மெய்ப்பித்திருக்கிறரா். ஹரீஷ் கல்யாண் நடித்து, எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இது குறித்து ஜிப்ரானை வெகுவாகப் புகழ்ந்த இயக்குநர் சஞ்சய் பாரதி, "நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு கனவு நனவானதைப்போல் இருக்கிறது. ஜிப்ரானின் இசை காதல் கதைகளுக்கு நேர்த்தியாக செறிவூட்டி, அவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். தனுசு ராசி நேயர்களே கதைக்கரு என் மனதில் தோன்றியதும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் கைவண்ணம் இதற்கு கண்டிப்பாகத் தேவைப்படும் என்பதை நான் உணர்ந்தேன்.
இப்போது படத்தின் ஒவ்வொரு பாடலுக்குக்கும் கிடைக்கும் மகத்தான வரவேற்பைப் பார்க்கும்போது எங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. ஜிப்ரானைப் பொறுத்தவரை, அவர் மிகச் சிறந்த இசையை தருவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் உரிய தனித்துவம் மிக்க மிகச் சரியான குரலைத் தேர்வு செய்து பாட வைத்து பாடலை முழுமையுறச் செய்கிறார். இந்த வகையில் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் அனிரூத், சரத் சந்தோஷ், ராஜன் செல்லய்யா, செளமியா மகாதேவன், லிஜிஷா பிரவீண், கோல்ட் தேவராஜ் மற்றும் பம்பாய் ஜெயஸ்ரீ மேடம் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கு.கார்த்திக், விக்னேஷ் சிவன், மதன் கார்க்கி, விவேகா மற்றும் சந்துரு ஆகியோரின் பாடல்களும் ஆல்பத்தின் வெற்றிக்கு வெகுவாக உதவியிருக்கின்றன. பிரதான வேடங்களில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகியின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருப்பதால் பாடல்கள் மற்றும் ட்ரைலரின் வெற்றியைத் தொடர்ந்து படம் குறித்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது" என்றார்.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கிறார். ஹரீஸ் கல்யாண், ரெபோ மோனிகா ஜான் மற்றும் டிகான்கனா சூர்யவன்ஷி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்த நகைச்சுவை கலந்த காதல் சித்திரத்தில் ரேணுகா, முனீஷ்காந்த் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் இந்த மாதம் 6ஆம் தேதி உலகெங்கும் திரை இடப்பட உள்ளது.
கம்போடியா அரசின் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின்
2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'நான்' படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான பாடலை இயற்றும் போட்டியில் கலந்துகொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல் எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..
கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கில் இவர் பாடிய மரபுக்கவிதையை பாராட்டிய கவிஞர் வைரமுத்து இவரது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் அதன்பிறகு இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து சுமார் 10 ஆண்டுகாலம் பணியாற்றி வருகின்றார். அங்கே இவர் இயக்கிய தூவானம் என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதை பெற்றுள்ளது..
மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா இறந்தபோது ‘வானே இடிந்ததம்மா’ என்கிற இரங்கல் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.
சமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு "சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை" வழங்கியுள்ளது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதி வரும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்திலுள்ள அத்தனை வட்டார வழக்கிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.
“இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள்தான் அதனால் தான் இலங்கையில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களின் ரசனையை உள்வாங்கி என்னால் பாடல் எழுத முடிகிறது” என்கிறார் அஸ்மின்.
ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம்?
இயக்குனர் சிவா நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியின் அடையாளமாக சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். அந்த வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து வேதாளம், விவேகம், விசுவாசம், வீரம் ஆகிய வெற்றி படங்களை வரிசையாக தந்தவர்.
தற்போது ரஜினிகாந்தை வைத்து தலைவர் 168 என்ற படத்தை இயக்க இருக்கிறார் சிறுத்தை சிவா. இந்த படத்திற்காக ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை குஷ்பூ அல்லது மீனா இருவரில் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு D இமான் இசையமைக்கிறார்.
எந்திரன், பேட்டை, ஆகிய படத்தை தயாரித்த சன் பிக்ச்சர்ஸ் தலைவர் 168 படத்தையும் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 14ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது. படத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற இருக்கிறது.
அதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பூனே அல்லது காசியில் 20 நாட்கள் நடைபெறவுள்ளது.
மேலும் இந்த படத்தின் அப்டேட்ஸை தெரிந்துகொள்ள தொடர்ந்து தமிழ்சகாவை பாருங்கள்.
பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை
பன்னீர்செல்வம் ரேணிகுண்டா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுக இயக்குனர் என்பதையும் மீறி சிறந்த இயக்குனர் என்ற முத்திரையை பதித்தவர். அந்த அளவுக்கு ரேணிகுண்டா அமோக வெற்றியை பெற்றது.
அதனை தொடர்ந்து 18 வயசு, விஜயசேதுபதி கதாநாயகனாக நடித்த கருப்பன் ஆகிய வெற்றி படங்களை தந்தவர்.
தற்போது தன மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள பன்னீர்செல்வம் அதனை செயல்படுத்த தன மகன் அருணை வைத்து "தீக்குள் விரல் வைத்தால்" என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் பரபரப்பாக முழுமூச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஆணவக் கொலையை மையமாக கொண்டு உருவாகிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் விரைவில் தெரிவிக்கப்படும்.
"தீக்குள் விரல் வைத்தால்" மிக விரைவில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் அருணுக்கும் படம் வெற்றி பெற தமிழ்சகாவின் வாழ்த்துக்கள்.
ரஞ்சித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்து, பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படத்தின் படப்பிப்பு இன்று (நவம்பர் 28) துவங்கியது. தற்காலிகமாக தயாரிப்பு எண் 1 என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்க, பிந்து மாதவி, தர்ஷணா பனிக் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.
Third Eye Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் தேவராஜூலு இப்படம் குறித்து கூறியதாவது...
"இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனித்தன்மை வாய்ந்த கதைகளை தேர்வு செய்து, விறுவிறுப்பான படங்களாகக் கொடுப்பதில் வல்லவர். அவரது இயக்கத்தில் நான் படம் தயாரிக்க இதுவே முதல் காரணம். மேலும் தன் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய களத்தில் கட்டமைக்கபட்ட கதை ஒன்றை விவரித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகப் பட்டது. பெண்களை மையப் படுத்திய இந்தப் படம் முழுக்க முழுக்க, திரில்லர் வகையைச் சேர்நதது. ரசிகர்களை இருக்கை நுனிக்கே இழுத்து வந்து விடும் காட்சிகள் நிரம்பவே உண்டு. கதையை அவர் சொன்ன விதம், விஷுவல் காட்சிகளுடன் முழுப் படத்தையும் எப்போது பார்ப்போம் என்ற ஆவலை என்னுள் ஏற்படுத்தியது. பிந்து மாதவி மற்றும் தர்ஷணா பனிக் இருவரும் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தான் உருவாக்கிய பாத்திரங்களுக்குப் பொறுத்தமான நடிக நடிகையரை சரியாகத் தேர்ந்தெடுப்பார் என்று நம்புவதுடன், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் அனுபவத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்" என்றார்.
நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் ஆச்சரியத்தக்க அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் குறித்த உடனடி பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. கன்னியாகுமரியில் உள்ள பகபதி அம்மன் கோவிலில் சம்பிரதாயமான பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 29) துவங்கியது. முதல் கட்டப் பிடிப்பில் நயன்தாரா விரைவில் இணைய இருக்கிறார்.
'அவள்' படத்தின் இசைக்காக வெகுவாக பாராட்டப்பட்ட இசையமைப்பாளரும், தற்போது நயன்தாரா நடித்து வரும் 'நெற்றிக்கண்' படத்தின் இசையமைப்பாளருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் 'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு இசையமைக்கிறார். 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். 'பரியேறும் பெருமாள்' படப்புகழ் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்க, திவ்யா நாகராஜன் மற்றும் அனுவர்த்தன் ஆகியோர் ஆடையலங்காரத்தை கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விஜயகுமார்.
நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, 'மூக்குத்தி அம்மன்' படத்தின் கதை, திரைக்கதை. வசனங்களை எழுதியிருப்பதுடன் என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தையும் இயக்குகிறார். 'எல்.கே.ஜி.', 'கோமாளி', மற்றும் 'பப்பி' ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து டாக்டர் ஐசரி கே.கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா