சற்று முன்

விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |    நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல்   |    பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |   

சினிமா செய்திகள்

அரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்'
Updated on : 20 July 2019

"நாம அரசியல்ல இருக்கலாம் நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள் படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அதற்கான வழி கிடைக்கிறது. அப்பொழுதுதான் நண்பனால் சதி நடக்கிறது. இருவருக்கும் நடைபெறும் போட்டியில் யார் அரசியலில் அதிகாரத்தை கைபற்றினார்கள் என்பதை ஆக்சனுடன் கிளுகிளுப்பு மற்றும் நகைச்சுவை கலந்து அதற்கு "பூதமங்கலம் போஸ்ட் " என்று பெயரிட்டு படமாக்கி இருக்கிறோம்." என்கிறார் " இயக்குனரான ராஜன் மலைச்சாமி.  படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட  இதில் , ராஜன் மலைச்சாமி, விஜய் கோவிந்தசாமி, மெளனிகா ரெட்டி, அஸ்மிதா, மு.தட்சிணாமூர்த்தி, பந்தா பாண்டி, சாய் பாலாஜி, ஆனந்தராஜ், மதுரை  சூர்யா, ஆகியோருடன் மாஸ்டர் தக்ஷித் தேவேந்திரா நடித்துள்ளனர்.  மதுரை, அழகர்கோவில் , மேலுார், சிவகங்கை, சென்னையில் எண்ணூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது. நடன பயிற்சியை ஜாய் மதியும், சண்டை பயிற்சியை நாக் அவுட் நந்தாவும், கலையை சாய்மணியும், தயாரிப்பு நிர்வாகத்தை ஜெகனும், ஒளிப்பதிவை பிரேம்குமாரும், படத்தொகுப்பை ஏ.எல்.ரமேஷ் கவனித்துள்ளனர்.   சிவயன், அர்ஜுன் எழுதிய பாடல்களுக்கு அர்ஜுன் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து ராஜன் மலைச்சாமி டைரக்ட் செய்துள்ளார்.  சிசிவி குரூப்ஸ் சினிமாஸ் மற்றும் வீரகாளியம்மன் பிலிம்ஸ் சார்பில்  "பூத மங்கலம் போஸ்ட்" படத்தை பொன்கோ சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன்கோ விஜயன் மூவரும் கூட்டாக தயாரித்துள்ளார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா