சற்று முன்

அரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்'   |    பயத்தை மையமாக கொண்ட கதை   |    மீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி   |    பா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா   |    பிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி   |    இளைஞர்களை விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தும் படம்   |    டாப் ஹீரோக்கள் வரிசையில் யோகிபாபு - ‘கூர்கா’ 300 திரையரங்களில் இன்று   |    விஜய் பட நடிகையின் நிர்வாண போஸ் - அதிர்ச்சியுடன் ரசிகர்கள்   |    ராமர், யோகி பாபுவுடன் காமேடியில் கலக்கப்போகும் பிரபல நடிகை   |    சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த 'கண்ணே கலைமானே'   |    ஏமாற்றத்தால் மன வேதனையில் தவிக்கும் யுவன் ஷங்கர் ராஜா   |    தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள்   |    எனக்கான அங்கீகாரத்தை கொடுத்த படம்   |    யுவன் சங்கர் ராஜாவின் இசையோடு கலந்த இனியாவின் குரல்   |    மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி   |    'பௌவ் பௌவ்' இசை வெளியீட்டு விழாவில் விழா குழுவினரின் அனுபவங்கள்   |    300 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ள பிரபல நடிகர்   |    ரோபோ ஷங்கர் மன குமுறல் - காரணம் இதுதான்   |    வனிதாவால் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை   |    இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா & அனுபமா   |   

சினிமா செய்திகள்

பிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி
Updated on : 12 July 2019

பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இப்போட்டியின் முதல் எலிமினேஷனில் நடிகை பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களுக்கு நிகழ்ச்சி குழுவினர் பல விதிமுறைகளை எழுத்துப் பூர்வமாக போட்டு, அவர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி போடப்படும் விதிமுறைகளில் போட்டியாளர்கள் சம்பளம் குறித்து எந்த இடத்திலும் பேசக் கூடாது, என்பது முக்கியமானதாகும். ஆனால், இந்த விதிமுறையை பிக் பாஸின் ஹீரோவாக திகழும் வனிதா, தற்போது மீறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய் டிவியை கோபமடைய செய்திருக்கிறது. அதாவது, பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை சம்பளம் என்று பேசப்படுதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது நிஜம் என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்த குழப்பத்தை போக்கும் விதமாக, வனிதா பிக் பாஸின் சம்பள ரகசியத்தை கூறியிருக்கிறார். தற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிப்பது போன்ற டாஸ்க்குகளை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள். அதன்படி, கொலையாளி வனிதா தான் என பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும், வனிதா, முகேனை தவிர வேறு எந்த போட்டியாளர்களுக்கும் தெரியாததால் போலீஸ் குழு திணறுகிறது. இதனால் டென்ஷனான சேரன் ஆவியாகவுள்ள சாக்‌ஷி, ஷெரின், மோகன் வெயிலில் மிகவும் கஷ்டப்படுவதால் இந்த டாஸ்க்கை இப்படியே விட்டுவிட வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகிறார். இதற்கிடையில் குறுக்கிடும் வனிதா, ”நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கோம். அதை மறக்காதீர்கள்” என தெரியாமல் உளறியுள்ளார். வனிதாவின் இந்த ஓவர் வாயால் பிக் பாஸ் விதி மீறப்பட்டதோடு, ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத சம்பள ரகசியமும் தெரிந்துவிட்டது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா