சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

டாப் ஹீரோக்கள் வரிசையில் யோகிபாபு - ‘கூர்கா’ 300 திரையரங்களில் இன்று
Updated on : 12 July 2019

’டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’.



 



 



இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.



 



 



தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம், முன்னணி ஹீரோக்கள் 

படங்களுக்கு நிகராகவும் வெளியாகியிருப்பது ஒட்டு மொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.



 



 



இன்று காலை சிறப்பு காட்சியே ஹவுஸ்புல் காட்சிகளோடு சிறப்பான ஓபனிங் 

அமைந்திருப்பதால், யோகி பாபு டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம்பிடிப்பது உறுதி என்கின்றனர்.



 



 



படத்தின் டிரைலர், டீசர் போன்றவை ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் செய்த விளம்பரமும் மக்களிடம் எளிதில் சென்றடைய செய்துள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூர்கா’ தற்போது வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என்று தமிழ் 

திரையுலகில் பேசப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா