சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

ராமர், யோகி பாபுவுடன் காமேடியில் கலக்கப்போகும் பிரபல நடிகை
Updated on : 11 July 2019

நடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள்.



 







இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம். நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன்" என்றார்.

 



 



 



அஞ்சலியை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.சினிஷ் விரிவாகக் கூறுகையில், “நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன்  வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்" என்றார்.

 



 



இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்" என்றார். 

 



 



இந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.

 



 



அர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா - ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா