சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

சினிமா செய்திகள்

சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த 'கண்ணே கலைமானே'
Updated on : 11 July 2019

ரெட் ஜியண்ட் மூவீஸ் சார்பில் சீனு இராமசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு  இசை யுவன் சங்கர் ராஜா.



 





இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கப்பட்டு 45 நாட்களில் படம்பிடிக்கப்பட்டது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையான கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் இவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது. 



 



 



உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த சீனு இராமசாமியின் சமீபத்திய படைப்பான கண்ணே கலைமானே 2020ஆம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது.



 





இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, 



 





“இது நம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சகோதரத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் தொட்டு விடும் ‘மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள்’ என்ற புதிய வகை சினிமாவை இதன் மூலம் நான் கண்டு கொண்டிருக்கிறேன். இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விருதுகளை வென்ற படங்கள் 'கலைப்படங்கள்' என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொதுமக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால் 'கண்ணே கலைமானே' இரண்டையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்று கூறினார் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா