சற்று முன்

50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |    விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்   |    ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்   |    கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...   |    நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்   |    திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்   |    மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை   |    நயன்தாராவின் உயர்ந்த கொள்கை   |    பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்   |    அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி   |    நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன்   |    மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம்   |    சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’   |    பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள்   |    விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா   |    சந்தானத்தின் டிக்கிலோனா   |    பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும்   |    சீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்   |   

சினிமா செய்திகள்

வனிதாவால் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை
Updated on : 03 July 2019

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார்..! இவருக்கு தற்போது வரை 3 கணவன்கள்...! இவரது முதல் கணவர் நடிகர் ஆகாஷுக்கு ஒரு மகன் உள்ளார். வனிதாவின் இரண்டாவது கணவர் தொழில் அதிபர் ஆனந்தராஜூக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரை பிரிந்து 3வதாக நடன இயக்குனர் ராபர்ட் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.  தற்போது அவரையும் பிரிந்து போதிய படவாய்ப்பு இல்லாமல் தவித்த வனிதா, நடிகர் நடிகைகளுக்கான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போல நடத்தப்படும் தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில்,  

இரண்டாவது கணவரின் மகளை கடத்தி வந்ததாக நடிகை வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ள தெலுங்கானா மாநில காவல் துறையினர், அவரை கைதுசெய்ய பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டுக்கு வெளியே காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இரண்டாவது கணவரை வனிதா பிரிந்த சூழ்நிலையில் அவர்களது மகள் தந்தையுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது மகளைப் பார்க்க ஐதராபாத் சென்ற வனிதா, கணவர் ஆனந்தராஜுக்குத் தெரியாமல் மகளை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டதாக கூறப்படுகிறது.  இது குறித்து தொழில் அதிபர் ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், தெலுங்கானா காவல்துறையினர் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வனிதாவை தேடி சென்னைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். வனிதா தலைமறைவாக இருப்பதாகக் கூறி வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.  இந்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, உள்ளேயும் சக போட்டியாளர்களுடன் தகராறு செய்து வருவதை அறிந்த 2வது கணவர் ஆனந்தராஜ், மீண்டும் தெலங்கானா காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய வனிதா விஜயகுமாரை கைது செய்வதற்காக தெலுங்கானா காவல்துறையினர் சென்னை வந்தனர். பூந்தமல்லியில் பிக்பாஸ் அரங்கம் அமைக்கப்பட்டுள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர்.  வனிதாவை கைது செய்ய ஒத்துழைக்குமாறு, சம்பந்தப்பட்ட டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாததால், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தமிழக காவல்துறையினரிடம் உதவி கோரினர்.  போலீசார் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளரை அழைத்து வனிதாவையும், கடத்தப்பட்ட சிறுமியையும் போலீசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளனர். கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை வனிதாவை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில், பிக் பாஸ் அரங்கத்திற்குள் புகுந்து வனிதாவை கைது செய்து அழைத்துச் சென்று குழந்தையை மீட்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் பதுங்கும் இடமாகவும் அவர்களை பாதுகாக்கும் இடமாகவும் பிக் பாஸ் வீடு மாறி உள்ளதாக தெலுங்கானா காவல்துறையினர் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா