சற்று முன்

50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |    விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்   |    ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்   |    கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...   |    நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்   |    திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்   |    மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை   |    நயன்தாராவின் உயர்ந்த கொள்கை   |    பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்   |    அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி   |    நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன்   |    மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம்   |    சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’   |    பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள்   |    விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா   |    சந்தானத்தின் டிக்கிலோனா   |    பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும்   |    சீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா & அனுபமா
Updated on : 03 July 2019

இயக்குனர் கண்ணனின் இயக்குநர் பயணம் பன்முகப்படுத்தப்பட்ட வகை படங்களை உள்ளடக்கியது மற்றும் ஒரு போதும் சிறந்தவற்றை கொடுக்க அவர் தவறியதில்லை. குறிப்பாக, குடும்ப உறவுகளுடன் அழகான காதல் கதைகளை இணைப்பதில் அவரது திறமை ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது சமீபத்திய திரைப்படங்கள் முற்றிலும் தீவிரமான மற்றும் சிக்கலான கருப்பொருள் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து சற்று விடுபட்டு குடும்ப கூறுகளுடன் கூடிய அழகான, புத்துணர்ச்சியூட்டும் காதல் கதைகளுக்கு திரும்புகிறார். இது குறித்து இயக்குனர் கண்ணன் கூறும்போது, “ஆம், பார்வையாளர்களுக்கு இடைவிடாமல் தீவிரமான மற்றும் சிக்கலான கதைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன, அதில் எனது படங்களும் அடங்கும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த மண்டலத்திலிருந்து விலகி ஒரு காதல் கதையை கொடுக்க விரும்பினேன். இதே எண்ணம் அதர்வா முரளிக்கும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அழகான நடிகராக பாராட்டப்பட்ட அவரின்  கதாபாத்திரங்கள், பெரும்பாலும் தனித்துவமான மற்றும் சவாலானவையாகவே இருந்துள்ளன, எங்களின் கடைசி படமான 'பூமராங்' உட்பட. இருப்பினும், இந்த படம் அவரை ஒரு இளமையான கதாபாத்திரத்தில் சித்தரிக்கும். அவர் பிஎச்டி மாணவராக நடிக்கிறார்.நாயகியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் குறித்து இயக்குனர் கண்ணன் கூறும்போது, “அவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக நடிக்கிறார். நாங்கள் உண்மையில் கண்களால் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு நடிகையை விரும்பினோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அதர்வா மற்றும் அனுபமா இருவரையும் ஒன்றாக ஒரு ஃபிரேமில் கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. இந்த படம் குடும்ப உணர்வுகளை கொண்ட ஒரு ஜாலியான படமாக இருக்கும்" என்றார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் சென்னையில் தொடங்கப்பட உள்ளது. மேலும் வெளிநாட்டில் மிகவும் அழகான இடங்களில் ஒரு பகுதியை படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘96’ படத்தில் காட்சி மொழி மூலம் நம் மனதை ஈர்த்த சண்முக சுந்தரம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். மேலும் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இது குறித்த முறையான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விரைவில் வெளியாகும். ஆர்.கண்ணன் எழுதி, இயக்குவதோடு எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா