சற்று முன்

'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
Updated on : 12 June 2019

'கே ப்ரொடக்ஷன்ஸ்’ ராஜராஜன் மற்றும் ‘வான்சன் மூவீஸ்’ ஷான் சுதர்ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ‘சிந்துபாத்’ எதிர்வரும் ஜூன் 21 வெளியீடு



 





‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி திரைப்படம் ‘சிந்துபாத்’



 







முதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையும் மகனுமாக நடிக்கவில்லை என்றாலும், இருவரின்  கதாபாத்திரமும் அவர்களிடையே நிலவும் ஒரு உன்னதமான தனித்துவ உறவுநிலையை பிரதிபலிக்கிறது.



 







விஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காதுகேளாத சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். 



 







ஒரு பெண்ணை மையப்படுத்தியே இப்படத்தின் கதை சுழலுதால், அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. 



 





லிங்கா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தேவையறிந்து தனது எடையை 20 கிலோ அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், ‘தாய்’ மொழியையும் கற்றுக்கொண்டு, வசனம் பேசி அசத்தியிருக்கிறார்.  



 







இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, மற்றும் தென்காசியில் படமாக்கப்பட்டு, 52 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. ‘தாய்’ மொழியில் டப்பிங் இருந்ததால், தாய்லாந்திலேயே அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.



 







முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்த படமென்பதால், ஹாலிவுட் சண்டைகாட்சியமைப்பு வல்லுனர் ‘பிரதித் சீலம்’ என்ற ‘நுங்’ இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 



 







இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சுமார் ஒன்பதரை நிமிடங்கள் ‘சிங்கிள் ஷாட் சீக்வன்ஸ்’ மூலம் படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி அமைப்புக்கென பிரத்யேகமாக 100 க்கும் மேற்பட்ட தாய்லாந்து இளநிலை கலைஞர்களும், இந்திய கலைஞர்களும் ஒன்றிணைந்து, பல ஒத்திகைகளுக்கு பின்னர் காட்சிப் படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 





இப்படத்தின் டீசர் வெளியானது முதல், எடிட்டிர் ரூபனின் புதிய அணுகுமுறை மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் மனதிற்கினிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. 



 





ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் வித்தியாசமான கோணங்களில் சண்டை காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. 



 







எதிர்வரும் ஜூன் 21ம் தேதி, ‘கே ப்ரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘வான்சன் மூவீஸ்’ தயாரிப்பில், இயக்குனர் எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ‘சிந்துபாத்’ உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா