சற்று முன்

கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |    மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது!   |    இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |   

சினிமா செய்திகள்

ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம்
Updated on : 12 June 2019

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் எஸ் எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’



 



 





தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது நம்ம ஆளும் காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்’I உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்.



 





முதல் படமாக ‘சொல்லாமலே’ துவங்கி, ‘பிச்சைகாரன்’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி வி பிரகாஷ் குமார் நடிக்க ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.



 





இதை தொடர்ந்து அபிஷேக் பிலிம்ஸ், தற்போது ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் ஒரு திகில் படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது.



 





‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் எழில், இந்த முறை ஒரு வித்தியாசமான திகில் கதையை, அவருக்கே உரிய பாணியில் வித்தியாசமான முறையில் படைத்திருக்கிறார்.



 





கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, வெளி நாட்டில் பேய் பிடித்த நபரிடம் இருந்து, பேயை விரட்ட வேண்டும் என்ற சவாலான வேலை வருகிறது. அந்த சவாலான வேலையை ஏற்றுக்கொண்ட ஹீரோ, பேயை விரட்டி அந்த நபரை காப்பாற்றினாரா, இல்லையா என்பதே இப்படத்தின்  கதை.



 





இந்த திகில் படத்தை, மிகவும் ஜனரஞ்சகமாக தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்து, மிகவும் சுவராஸ்யமாக படைத்திருக்கிறார் இயக்குனர் எழில்.



 





யூ கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோபி கிருஷ்ணா கவனித்திருக்கிறார்.



 





சத்யா இசையமைக்க, யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.



 





கதை, வசனம் எ முருகன் எழுத, இயக்குனர் எழில் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தை, அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரித்து இருக்கிறார். 



 





ஜி வி பிரகாஷ், ஈஷா ரெப்பா, சதீஷ், ஆனந்தராஜ், சம்ஸ், நிகிஷா படேல்,  சாக்ஷி,  அகர்வால், கோவை சரளா, மதுமிதா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், வையாபுரி, வெண்பா, மனோபாலா, சித்ரா லக்ஷ்மணன்

தயாரிப்பு அபிஷேக் பிலிம்ஸ்’ ரமேஷ் பி பிள்ளை, ஒளிப்பதிவு யூ கே செந்தில் குமார்,

படத்தொகுப்பு கோபி கிருஷ்ணா, இசை: சத்யா, பாடல்கள்: யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ், சண்டைபயிற்சி ‘கனல்’ கண்ணன், கலை எம். யூ. ஜெயராமன்,

காஸ்ட்யூம் சண்முக பிரியா, நடனம் தினேஷ், தினா, கதை & வசனம் எ. முருகன்

திரைக்கதை, இயக்கம் எஸ். எழில்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா