சற்று முன்
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்
Updated on : 12 June 2019
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி - இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’
இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, கே ஜேஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான கே ஜே ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் இயக்குனர் செல்வா மூலம் துணை இயக்குனராக திரைப்பயணத்தை துவங்கி, ‘அறம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இணை-துணை இயக்குனராக பணியாற்றிய பி விருமாண்டி கதை, திரைகதை, எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இயக்குனர் சமுத்திரகனி, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ‘பூ’ ராம் ஆகிய பன்முகப்பட்ட கலைஞர்கள் உள்ளிட்ட பலர் நடிக்க, நடிகர் -இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாரின் தங்கை பவானி இப்படத்தில் அறிமுகமாகிறார்.
‘அடங்காதே’ பட இயக்குனர் சண்முகம் முத்துசாமி இப்படத்திற்கு வசனம் எழுத, படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் ஏற்றிருக்கிறார்.
ஒளிப்பதிவு பொறுப்புகளை சுதர்ஷன் ஏற்றுக்கொள்ள, கலை லால்குடி என் இளையராஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சண்டை காட்சிகளுக்கு பீட்டர் ஹைன் பொறுப்பேற்று இருக்கிறார்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து படத்தின் பிற முக்கிய காட்சிகள் ஹைதராபாத், சென்னை மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது
சமீபத்திய செய்திகள்
ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!
முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது.
மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ரகசியங்களுடன் மோதும் போது முற்றிலும் தலைகீழாக மாறுகிறது. விசாரணை தீவிரமடையும் போது, வேலு குற்றத்தின் உண்மையை மட்டுமல்ல, தனது செயல்களின் விலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.
படம் குறித்து நடிகர் கவின் கூறுகையில்,
“மாஸ்க் ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 மூலம் இன்னும் பெரிய ரசிகர்கள் வட்டத்தை அடையப் போவதில் மகிழ்ச்சி. வேலு பல அடுக்குகளைக் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகமானோர் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர், தயாரிப்பாளர் வெற்றிமாறன் கூறுகையில்..,
“இந்த படம் பேசும் கருக்கள் காலத்தை கடந்தவை. மாஸ்க் இப்போது ZEE5-ல் வெளியாகும் நிலையில், முதன் முறையாக இதை அனுபவிக்கும் புதிய பார்வையாளர்களிடம் சென்று சேரும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி”.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – ஆர்.டி. ராஜசேகர் படத்தொகுப்பு – ஆர். ராமர்.
ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆழமான கதை சொல்லலுடன், மாஸ்க் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான அனுபவத்தை வழங்கும் படமாக உருவாகியுள்ளது.
‘மாஸ்க்’ – ஜனவரி 9, 2026 முதல் ZEE5 தளத்தில், தமிழில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
“டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ்
ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.
ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இந்த படத்தை இயக்குநர் மாருதி, ஹாரர்–காமெடி வகையில் ஒரு எவர்கிரீன் படமாக உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் மிகப் பெரிய அளவில் இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சங்கராந்தி பண்டிகையை இரட்டிப்பு கொண்டாட்டமாக மாற்றும் வகையில், ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் மகேஷ் அச்சந்தா கூறியதாவது :
“2026 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் படம் ‘தி ராஜா சாப்’. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மாருதி அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
பிரபாஸ் அண்ணா எனக்கு ஒரு டி-ஷர்ட் பரிசாகக் கொடுத்தார். அந்த ஒரு விஷயமே எனக்கு பெரிய சந்தோஷம். அவருக்கும், பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும் நான் என்றும் கடமைப்பட்டவன். இந்த நிகழ்ச்சிக்காக வந்த ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்தால், பிரபாஸின் ரசிகர் கூட்டம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.”
பாடலாசிரியர் கஸர்லா ஷ்யாம் கூறியதாவது :
“பிரபாஸ் சாருக்காக நான் முதல் முறையாக ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். அந்த பாடல் விரைவில் ஒரு சர்ப்ரைஸாக வெளிவரும். மூன்று கதாநாயகிகளுடன் பிரபாஸ் நடனமாடும் பாடலை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து காத்திருக்கிறேன்.”
நடிகை ஜரீனா வாஹப் கூறியதாவது :
“நான் கடந்த 40 ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் இருக்கிறேன். ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு நல்ல படத்தில் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வழங்கிய பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும், மாருதி காருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் முழு குழுவும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். இந்த படத்தில் பிரபாஸ் உடன் எனக்கு பல காட்சிகள் உள்ளன. நான் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் பிரபாஸ் போல நல்ல மனம் கொண்ட மனிதரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இந்த படத்தில் அவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை.”
நடிகர் ரோஹித் கூறியதாவது :
“நான் பாலிவுட்டிலிருந்து வந்தவன். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகே ஒரு யூ-டர்ன் எடுக்கவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இதுவரை இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. ரெபல் ரசிகர்களுக்கு எனது வணக்கம். பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிப்பது என்னைப் போன்ற நடிகர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.”
நடிகர் சப்தகிரி கூறியதாவது :
“நான் பிரபாஸ் அண்ணாவுடன் ‘சாலார்’ படத்தில் நடித்தேன். அந்த படத்தின் இடைவேளை காட்சியைப் பார்த்த உடனே, ‘இந்த படம் 2000 கோடி வசூல் செய்யும்’ என்று சொன்னேன் — அது உண்மையாகவே நடந்தது. இப்போது தயாரிப்பாளரின் போனில் ‘தி ராஜா சாப்’ படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன். அது வேறு லெவலில் இருக்கிறது. இந்த படமும் நிச்சயமாக 2000 கோடி வசூல் செய்யும். மாருதி சார், நாமெல்லாம் பார்க்க ஆசைப்பட்ட அந்த பழைய ஸ்டைல் பிரபாஸ் அண்ணாவை இந்த படத்தில் காட்டியிருக்கிறார். கையில் பூ வைத்துக் கொண்டு, ரொமான்டிக் தோற்றத்தில் அவர் தோன்றுவது — இனிமேல் பல வருடங்கள் இப்படிப் பார்க்க முடியாத ஒன்று. ஏனெனில் அவர் இப்போது ஆக்ஷன் படங்கள் மட்டுமே செய்து வருகிறார். இந்த படத்தில் நம்மெல்லாரையும் விட பிரபாஸ் அண்ணாதான் அதிகமாகச் சிரிக்க வைப்பார்.
உங்களைப் போல நானும் பிரபாஸ் அண்ணாவைப் பார்க்கத்தான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.”
வட இந்திய விநியோகஸ்தர் அனில் தடானி கூறியதாவது:
“‘தி ராஜா சாப்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக மாருதி அவர்களுக்கும், விஷ்வ பிரசாத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரபாஸ் எனக்கு ஒரு சகோதரர் போன்றவர். அவர் உங்கள் அனைவரின் அன்பிற்கும் முழுமையாக தகுதியானவர். இவ்வளவு பெரிய அளவில் பிரபாஸ் ரசிகர்கள் திரண்டிருப்பதைப் பார்க்கும் போது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.”
நடிகர் VTV கணேஷ் கூறியதாவது:
“இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் தான். அவர்கள் எனக்கு அளித்த வாய்ப்பினால், ‘பீஸ்ட்’ படத்தில் நான் பேசிய ‘யாருடா நீ இவ்வளவு டாலண்ட்டா இருக்க?’ என்ற வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமானது. அந்த ஒரே வசனம் எனக்கு மிகப் பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. சப்தகிரி அடிக்கடி என்னிடம் சொல்வார் – ‘நீ பல படங்களில் நடித்திருந்தாலும், அந்த ஒரு டயலாக் தந்த புகழ் வேறு எதுவும் தரவில்லை’ என்று.
‘தி ராஜா சாப்’ படத்தில் நான் 55 நாட்கள் வேலை செய்தேன். பிரபாஸ் காருடன் நடித்த அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.”
கிரியேட்டிவ் புரொட்யூசர் எஸ்.கே.என் கூறியதாவது:
“‘தி ராஜா சாப்’ படத்திற்கான தயாரிப்புப் பணிகள் 2021 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. இந்தப் படத்தை முடிவு செய்த பிறகு, மாருதி இயக்கிய ஒரு படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில் மாருதி, பிரபாஸ் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு அவர் என்னிடம் சொன்ன ஒரே விஷயம் — ‘என் வாழ்க்கையின் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் முழுக்க “ராஜா சாப்” பற்றித்தான் நான் யோசிக்கப் போகிறேன்’ என்றார். அதற்கு நான், ‘என்ன நடந்தது?’ என்று கேட்டேன். அப்போது அவர் சொன்னது — ‘அந்த படம் வெற்றி பெறவில்லை என்றால் அதில் என் தவறு என்ன? நாம் ஒரு படம் உருவாக்கப் போகிறோம்; அதில் கவனம் செலுத்துவோம்’ என்று பிரபாஸ் கூறியதாகச் சொன்னார்.
பிரபாஸ் ஒருபோதும் சொன்னதை மாற்றிப் பேசுபவர் இல்லை. இந்த படத்திற்காக நான் செய்தது எதுவும் பெரிய விஷயம் அல்ல; அது ஒரு அணில் செய்த உதவி மாத்திரம். பிரபாஸ் எப்போதும் எந்தக் கள்ளம் கபடமும் இல்லாத மனிதர். அவருக்கு சினிமா தான் வாழ்க்கை.
யூரோப்பில் படப்பிடிப்பு நடந்தபோது, அவர் முழு குழுவுக்காக ஒரு வில்லாவை எடுத்துக் கொண்டு, தனிப்பட்ட சமையல்காரரை வைத்து, அனைவருக்கும் தெலுங்கு உணவு ஏற்பாடு செய்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதரைப் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியுமா?
இந்த சங்கராந்திக்கு, நாங்கள் ஒரு 3 மணி 10 நிமிடங்கள் கொண்ட மாஸ் எண்டர்டெய்னரை திரையரங்குகளில் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு சங்கராந்திக்கும் நாம் சேவலுக்கு பந்தயம் கட்டுவோம்; இந்த முறை டைனோசருக்கு பந்தயம் கட்டப் போகிறோம். இந்த பண்டிகையை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடப் போகிறோம்.”
நடிகை ரித்தி குமார் கூறியதாவது:
“‘தி ராஜா சாப்’ ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். பிரபாஸ் எங்களுக்கெல்லாம் டார்லிங் தான். இந்தப் படத்தில் அவரை மாருதி சார், அவர் உண்மையிலேயே எப்படியோ அதே மாதிரி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் அவர்களின் அனைத்து நல்ல பண்புகளையும் நீங்கள் பார்க்க முடியும். இந்த படத்தைப் பார்த்த பிறகு அவரை இன்னும் அதிகமாக விரும்புவீர்கள். ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘தி ராஜா சாப்’ படத்தை அனைவரும் ரசித்துப் பாருங்கள்.”
நடிகை மாளவிகா மோகனன் கூறியதாவது:
“தெலுங்கு திரையுலகின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருக்கிறது. பிரபாஸ் போல ஒரு பான்-இந்தியா நட்சத்திரத்துடன், ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு பிரம்மாண்டமான படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு ‘ரெபல் ஸ்டார்’, ‘ரெபல் கடவுள்’. ஆனால் எங்களுக்கெல்லாம் அவர் ‘ராஜா சாப்’. நல்ல மனம் கொண்ட ஒரு உண்மையான நட்சத்திரம் அவர்.
இந்த படத்தில் நான் ‘பைரவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பொதுவாக கதாநாயகிகளுக்குக் காதல் காட்சிகள், பாடல்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் மாருதி சார் எனக்குக் காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் செய்யும் வாய்ப்பை அளித்தார். பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக ‘தி ராஜா சாப்’ இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைக் கண்டிப்பாக ரசிப்பீர்கள்.”
நடிகை நிதி அகர்வால் கூறியதாவது:
“இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரமான பிரபாஸ் உடன் நடிப்பது எனக்கு ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் அவருக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். தெருவில் ஒரு சிக்ஸ் அடிப்பதும், ஸ்டேடியத்தில் ஒரு சிக்ஸ் அடிப்பதும் வெவ்வேறு விஷயங்கள். அந்த அளவுக்கான ரேஞ்ச் கொண்டவர் பிரபாஸ்.
‘தி ராஜா சாப்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த மாருதி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. சப்தகிரி, VTV கணேஷ் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. என் சக நடிகைகளான மாளவிகா மற்றும் ரித்தியுடன் பணியாற்றியது மறக்க முடியாத நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத் காரும், கிரியேட்டிவ் புரொட்யூசர் எஸ்.கே.என் அவர்களும் எங்களுக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். தமன் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன. ‘தி ராஜா சாப்’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடுங்கள்.”
இயக்குநர் மாருதி கூறியதாவது:
“இன்று நான் இந்த மேடையில் நின்றிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய ஆதரவே. ‘தி ராஜா சாப்’ படத்திற்குப் பின்னால் உறுதியாக நின்ற இரண்டு பேர் இருக்கிறார்கள் — பிரபாஸ் அவர்களும், விஷ்வ பிரசாத் அவர்களும் தான். விஷ்வ பிரசாத் காரும், பீப்பிள் மீடியா குழுவினரும் இந்த படத்திற்காக தங்களின் உயிரையே கொடுத்தார்கள்.
‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ் நடித்துக் கொண்டிருந்த போது, நான் ‘தி ராஜா சாப்’ கதையை அவரிடம் சொல்லச் சென்றேன். கதையைக் கேட்டவுடன் அவர் மிகுந்த உற்சாகத்துடன் ரசித்துச் சிரித்தார். உண்மையில் அவர் இந்த படம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ‘பாகுபலி’க்கு பிறகு பிரபாஸுக்கு உலகளாவிய அடையாளம் கிடைத்துவிட்டது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு சிறிய ஊரில் படப்பிடிப்பு நடந்தபோதும் கூட, அங்குள்ள மக்கள் அவரை அடையாளம் கண்டார்கள். அந்த அளவுக்கு ராஜமௌலி சார் உருவாக்கிய பான்–இந்தியா அலை நமக்கு பலன் அளித்து வருகிறது.
இன்று சுகுமார், சந்தீப் வங்கா போன்ற இயக்குநர்கள் அனைவரும் பான்–இந்தியா படங்களை இயக்குகிறார்கள். அதேபோல் நாங்களும் ‘தி ராஜா சாப்’ படத்தை ஒரு பெரிய அளவில் உருவாக்கியுள்ளோம். இந்த படம் எளிதான ஒன்று அல்ல. இதற்காக பலரும் கடுமையாக உழைத்துள்ளனர்.
நான் இதுவரை 11 படங்களை இயக்கியுள்ளேன். ஆனால் பிரபாஸ் காரு என்னை ஒரு பெரிய இயக்குநராக உருவாக்க நினைத்து, ‘ரெபல் யுனிவர்சிட்டி’யில் என்னைச் சேர்த்தார். நான் இந்த படத்தை இயக்கினேன் என்றாலும், இதன் உண்மையான ஆதாரம் பிரபாஸ் தான். அவர் இந்த படத்திற்கு கொடுத்த அர்ப்பணிப்பு, உழைப்பு, நேரம் – இவை எல்லாவற்றையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்தபோது, பின்னணி இசை சேர்க்கப்பட்ட பிறகு நான் கண் கலங்கினேன். பிரபாஸ் நடிப்பைப் பார்த்து உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு காட்சி கூட உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், என் வீட்டின் முகவரியை நான் தரத் தயார் — ரசிகர்கள் வந்து நேரடியாக என்னைச் சந்திக்கலாம்.
இந்த சங்கராந்திக்கு பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் ‘தி ராஜா சாப்’ மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.”
தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் கூறியதாவது:
“பீப்பிள் மீடியா ஃபாக்டரி மிகப் பெரிய நட்சத்திரத்துடன் நாம் உருவாக்கிய மிகப் பெரிய படம் இதுதான். ஆரம்பத்தில் பலர் இது ஒரு சிறிய படம் என்று நினைத்தார்கள். ஆனால் ‘தி ராஜா சாப்’ படத்தை உருவாக்க நாங்கள் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தோம். மாருதி சார் சொன்னது போல, இந்த படம் ஒருவரையும் ஏமாற்றாது. உலகளவில் ஹாரர்–ஃபேண்டஸி வகையில் உருவாகும் மிகப் பெரிய படமாக ‘தி ராஜா சாப்’ இருக்கும். இந்த படத்தை நீங்கள் அனைவரும் மனதார ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.”
ரெபல் ஸ்டார் பிரபாஸ் கூறியதாவது:
“என் அனைத்து ரசிகர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் ஜப்பானில் ரசிகர்களைச் சந்தித்தபோதும் நான் இதே மகிழ்ச்சியை உணர்ந்தேன். இன்று இங்கே உங்களைப் பார்க்கும் போது அதே சந்தோஷம் மீண்டும் வருகிறது. இன்று நான் உங்களுக்காக புதிய ஹேர் ஸ்டைலுடன் வந்திருக்கிறேன். அனில் தடானி எனக்கு ஒரு சகோதரரைப் போல. அவர் வட இந்தியாவில் என் படங்களை முழுமையாக ஆதரித்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் அவர்களும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு காட்சியில் வந்தாலே அந்த முழுக் காட்சியும் அவருடையதாகிவிடும். இந்த படம் ஒரு பாட்டி – பேரன் கதையாகும். இந்த படத்தில் ஜரீனா வாஹப் என் பாட்டியாக நடித்திருக்கிறார். அவர் டப்பிங் பேசும் போது, என் காட்சிகளை மறந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரித்தி, மாளவிகா, நித்தி ஆகிய மூன்று நடிகைகளும் நடித்துள்ளனர். அவர்கள் மூவரும் அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்தவர் தமன். இப்படிப்பட்ட ஹாரர்–காமெடி படத்திற்கு அவர் சரியான தேர்வு. ஒளிப்பதிவாளர் கார்த்திக் படத்தை மிகவும் அழகாகப் படம் பிடித்துள்ளார். சண்டைக் காட்சிகளை ராம் லக்ஷ்மன் மற்றும் கிங் சாலமன் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத். படம் முதலில் திட்டமிட்டதை விட பெரியதாக மாறினாலும், அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இந்த படம் மு
நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’. இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இனிகா புரொடக்ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசியதாவது, “இந்தப் படம் எங்களுக்கு பெருமை. ஏனென்றால் சிங்கிள் பேரண்ட்டாக என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். பிற குழந்தைகளின் கல்விக்காகவும் நிறைய விஷயங்கள் செய்து வருகிறேன். இயக்குநர் நாராயணன் குழந்தைகளுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என 20 வித்தியாசமான கதாபாத்திரங்கள் எழுதியிருந்தார். அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்தான் ஸ்ரீனிகா. எந்தவிதமான சிக்கலும் இல்லாத எளிமையான கதை இது. 2 வயதில் இருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்லும்போது என்னென்ன கற்றுக் கொள்ள போகிறார்கள் என்பதுதான் கதை. நிறைய ஜாலியான விஷயங்கள் இதில் உண்டு. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமான கதை இது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.
இயக்குநர் நாராயணன், “குழந்தை என்பது எல்லோருக்கும் கிடைக்கும் வரம். அந்த வரத்தை நாம் உருவாக்குகிறோம் எனும்போது அதில் பெருமை அடைய வேண்டும். ஸ்பைடர்மேன் பறப்பது, ஹீமேன் அடிப்பது என நிஜத்தில் நடக்காத பல ஃபேண்டசி விஷயங்களைதான் குழந்தைகளுக்கு திரைப்படத்தில் அறிமுகப்படுத்துகிறோம். நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம். யாரையும் அடிக்க போவதில்லை, யாரும் பறக்க போவதில்லை. நாம் சராசரி மனிதனாக இருக்கும்போது யாருக்காவது உதவுகிறோம், சிரிக்கிறோம், நன்றியை நினைத்து பார்க்கிறோம், அன்பாக இருக்கிறோம். இந்த நடைமுறை விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான். எல்லோரையும் அன்பாக வைத்திருங்கள், அன்பு உங்களுக்கு திரும்ப கிடைக்கும்”.
விஎஃப்எக்ஸ் இயக்குநர் கோகுல்ராஜ் பாஸ்கர், “கடந்த ஒரு வருடமாக ‘கிகி & கொகொ’ கதை பற்றி விவாதித்திருக்கிறோம். நிறைய ஹாலிவுட், தமிழ், மலையாளப் படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக கிகி கேரக்டர் டிசைன் செய்ய காட்டன் ஃபிளவரை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் செய்தேன். குழந்தைகளுக்கான படம் என்பதால் எந்தவிதத்திலும் அவர்களை காயப்படுத்தாதபடி எடுக்க வேண்டும் என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார். எங்கள் முயற்சிக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஆதரவும் தேவை”.
விஎஃப்எக்ஸ் ஸ்பெஷலிஸ்ட், கிரியேட்டிவ் புரொடியூசர் ஜி.எம். கார்த்திகேயன், “இருபது வருடங்களுக்கும் மேலாக இந்தத் துறையில் இருக்கிறேன். மீனா மேடத்திடம் இருந்துதான் இந்தக் கதை ஆரம்பித்தது. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட இந்தக் கதையை சிறப்பாகக் கொண்டு வர வேண்டும் என புனே, பெங்களூருவில் இருந்தும் டீம் வரவழைத்து பணி செய்திருக்கிறோம். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”.
இசையமைப்பாளர் சி. சத்யா, “இந்தப் படத்தின் டைட்டிலே ஆங்கிலப் பாடலுக்கு இசையமைப்பது போன்ற உற்சாகத்தைக் கொடுத்தது. இந்த படமே எனக்கு புது அனுபவம். எந்தவிதமான மனக்கவலை இருந்தாலும் அந்த இடத்தில் குழந்தைகள் இருந்தால் எனர்ஜி கிடைக்கும். அப்படி எனக்குப் பிடித்த குழந்தைகளுக்கான படத்திற்கு இசையமைத்திருக்கிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி”.
புரொடக்ஷன் ஹெட் சிவராஜ், “குழந்தைகளுக்கான நேர்மறையான கதையம்சம் கொண்ட 80 நிமிட படம் இது. ஆர்வமூட்டும் விதமாகவும் எனர்ஜியாகவும் இந்தப் படம் இருக்கும்”.
குழந்தை நட்சத்திரம் ஸ்ரீனிகா, “நான் தான் இந்தப் படத்தில் கொகொ. கொகொவுக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் நடித்த பிறகு எனக்கும் நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது”.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட 'த்ரிபின்னா' என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை டிசம்பர் 27 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள பிக்வயலின்ஷாப்பில் தொடங்கி வைத்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் ஆல்பத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஸ்வரயோகா குழுவினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்கம் வாசிக்க, 'த்ரிபின்னா' ஆல்பத்தில் உள்ள இசையமைப்புகளை கணேஷ் ராஜகோபாலன் நேரடியாக வாசித்துக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான கிருஷ்ண குமார் மற்றும் பின்னி கிருஷ்ண குமார், வயலின் கலைஞர் குமரேஷ் மற்றும் வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் உள்ளிட்ட இசை மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
'த்ரிபின்னா' ஆல்பம், ஸ்வரங்களை வரிசையாக மட்டும் இசைக்காமல், அவற்றை பிரித்து பின்னர் ஒன்றாக இணைக்கும் ஒரு பழங்கால கர்நாடக இசைக்கருத்திலிருந்து உருவாக்கப்பட்டது ஆகும். ஆரம்பகால கமகம் கருத்துகளில் வேரூன்றிய இந்த ஆல்பம், ஒரு ராகத்திற்குள் பல ஸ்வரங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை ஆராய்ந்து, இந்திய பாரம்பரிய சூழலில் விரிவான இசை அமைப்புகளை உருவாக்குகிறது. இந்த அணுகுமுறையின் மூலம், இந்த ஆல்பம் ராகத்தின் வெளிப்பாட்டு எல்லையை விரிவுபடுத்துவதோடு, பாரம்பரியமும் கற்பனையும் ஒரு பெரிய இசைக்களத்தில் இணையும் இந்திய சிம்பொனியை உருவாக்குகிறது.
கர்நாடக இசையின் வேர்களைப் பாதுகாப்பதில் கணேஷ் ராஜகோபாலனின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை 'த்ரிபின்னா' ஆல்பம் பிரதிபலிக்கிறது. இந்த ஆல்பத்தில் கணேஷ் ராஜகோபாலனின் மாணவர்களான ஸ்வரயோகா குழுவினர், மேலும் புகழ்பெற்ற கலைஞர்களான பத்ரி சதீஷ் குமார், ஓஜஸ் ஆத்யா, திருச்சி கிருஷ்ணசாமி மற்றும் சுவாமிநாதன் செல்வ கணேஷ் ஆகியோர் பங்காற்றியுள்ளனர்.
இந்த ஆல்பம் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் கிடைக்கிறது.
பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார்.
இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது.
தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான ஒந்த் கதே ஹெல்லா Ondh Kathe Hella படத்தைத் தொடர்ந்து, நீண்ட காலமாக கன்னட படத்தில் தோன்றாமல் இருந்த பிரியங்கா மோகன் தற்போது பெரும் ஆளுமைகள் இணையும் பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார். இதுவரை காதல், குடும்ப உணர்வுகள், கமர்ஷியல் எண்டர்டெய்னர் போன்ற கதைகளில் நடித்து வந்த பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட, வலுவான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் என்பதே முக்கிய சிறப்பு.
‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற தலைப்பே, இப்படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் அல்ல” என்பதைக் கூறாமல் கூறுகிறது. பிரியங்கா மோகன் அழகான பார்பி டால் போல வெண்மை நிற தொப்பி, கருப்பு நிற கையுறை உடன், ரெட்ரோ லுக்கில் அசத்துகிறார்“.
தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும், பிரியங்கா மோகன் இப்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்திருப்பது, அவரது நடிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. மொழி எல்லைகளை தாண்டி, கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரது தேர்வுகள், அவரை பான்-இந்திய நடிகையாக மாற்றும் பாதையில் கூட்டிச் செல்கின்றன.
‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ படம் குறித்து முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம், கன்னட சினிமாவில் பிரியங்கா மோகனுக்கு ஒரு புதிய அடையாளத்தையும், தனித்துவமான மைல்கல்லையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை
முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'
விங்ஸ் பிக்சர்ஸ் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம் “செவல காள”. மதுரையைக் களமாகக் கொண்டு படம் வளர்ந்து வருகிறது.
இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார் பால் சதீஷ். யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் குறும்படங்கள் இயக்கி இன்று சாதனைபடைத்து வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வரிசையில் இவரும் குறும்படங்கள் இயக்கி, பின் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் மதுரை மேலூரில் ஆரம்பமானது.
தனக்கு தவறு என்று பட்டால் அதை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தயங்காதவன் நாயகன். மதுரை அருகே ஒரு கிராமத்தில் வாழும் நாயகனின் அண்ணனை, ஊரையே தனதாக்கி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் ஊர் பெரிய பணக்காரர் அவமானப் படுத்த.. நாயகனான தம்பி களம் இறங்க.. அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான காட்சிகள் தான் இந்த படம் .
வெளியூரில் இருந்து கிராத்துக்கு வரும் நாயகி..ஆரம்பத்தில் நாயகனின் முரட்டுத்தனத்தை பார்த்து பயந்தாலும்... அவனது குணத்தை அறிந்து அவனைக்காதலிக்க, அதற்கு எதிர்ப்பு எழ... நாயகன் வில்லனின் திட்டங்களை முறியடித்தாரா...? தன் காதலில் வெற்றி அடைந்தாரா...?? என்ற கேள்விகளுக்கு ஆக்ஷ்ன், காதல்,நகைச்சுவை, சென்டிமென்ட் ஆகிய அம்சங்களுடன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இப் படத்தை டைரக்ட் செய்துள்ளார் புது இயக்குநர் பால் சதீஷ்.
இதில் முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கிறார். அண்ணனாக ஆரியன், ஊர் பணக்காரராக சம்பத் ராம், நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார்கள்.

நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
படம் குறித்து அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் பகிர்ந்து கொண்டதாவது, "நான் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். சிவகார்த்திகேயன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர்கள், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகவே கொடுத்து கதையில் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் செய்யாமல் நினைத்தபடியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே படமும் நன்றாக வந்திருக்கிறது.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை பற்றிய கதையாகவும், அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுநடை, அவர்களின் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள், சடங்குகள் ஆகியவற்றை பேசும் படமாக இது இருக்கும். இந்த விஷயங்களை சீரியஸ் டோனில் இல்லாமல் நகைச்சுவை கலந்து பொழுதுபோக்காக திரையரங்குகளில் மக்கள் ரசிக்கும்படி கமர்ஷியலாக எடுத்திருக்கிறோம்" என்றார்.
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பற்றி அவர் கூறியதாவது, "இந்தப் படத்தில், 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா மேடம் நடித்திருக்கிறார். அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் ராமதாஸ் அண்ணனும் நடித்திருக்கிறார். இதுதவிர மற்ற முக்கிய இரண்டு கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும், உசிலம்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள நடிகர்கள் அல்லாத கிராமத்து மக்கள் பலரும் இதில் நடித்திருக்கின்றனர்" என்றார்.
தொழில்நுட்பக்குழு பற்றி கேட்டபோது, "என்னைப் போலவே மணிகண்டன் சாரிடம் பணிபுரிந்த விவேக் விஜயராஜ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சான் லோகேஷ் எடிட்டராகவும், ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். கிராமத்தில் உள்ள மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை மூலமும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தின் மதிப்பை கலகலப்பாக பேசியிருக்கிறோம். திரையரங்குகளில் இந்தப் படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளுடன் கூடிய படமாக உள்ளது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி புதிய உச்சமாக 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த மைல்கல் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன், “'சிக்மா' படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. பார்வையாளர்களும் 'சிக்மா' உலகில் வலுவாக இணைந்திருப்பதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படக்குழுவினருக்கும் இது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. படத்தின் வெளியீடு நெருங்கும்போது அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடுவோம்" என்றார்.
களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் திரு.ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு திரு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் அவர்களும், செயலாளர்கள் பதவிக்கு திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி.கமீலா நாசர் அவர்களும், பொருளாளர் பதவிக்கு திரு.என்.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இணைச்செயலாளர் பதவிக்கு திருமதி.சுஜாதா விஜயக்குமார் அவர்களும் போட்டியிடுகின்றனர்.
மூத்த தயாரிப்பாளர்களான திரு.அழகன் தமிழ்மணி, திரு.சித்ரா லட்சுமணன், திரு.எச்.முரளி, திரு.எம்.கபார், திரு.ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து திரு.சாலை சகாதேவன், திருமதி. பைஜா டாம், திரு.எஸ்.ஜோதி, திரு.வி.பழனிவேல், திரு.கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் திரு.ஏ.முருகன், திரு.ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், திரு.கே.முருகன், திரு.வி.ஞானவேல், திரு.பிரவின்காந்த், திரு.வி.என்.ரஞ்சித் குமார், திரு.எஸ்.ஜெயசீலன், திரு.ராஜா @ பக்ருதீன் அலி அகமத், திரு.எம்.தனசண்முகமணி, திரு.பி.ஜி.பாலாஜி, திரு,இசக்கிராஜா, திரு.பி.மகேந்திரன், திரு.எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், திரு.ஏ.ஏழுமலை, திரு.எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 22-12-2025 அன்று ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6.00 மணியளவில் தொடங்கி நடைப்பெற்றது. இக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர் திரு.ஏ.எஸ்.பிரகாசம், திரு.வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் திரு.தீனா, இயக்குனர் திரு.லிங்குசாமி, இயக்குனர் திரு.சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். வேட்பாளர்களை திரு.கலைபுலி எஸ்.தாணு அவர்கள் அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்கள் வேட்பாளர்களை வாழ்த்தி பேசினார்கள். திரு.ஜி.எம்.தமிழ்குமரன் மற்றும் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கள் அணி வெற்றி பெற்று நிர்வாகம் அமைந்தால் சங்க உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பேசினார்கள். இக் கூட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
“கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது.
விஜய் சேதுபதி என்ற நடிகர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, வலிகள், காதல், நகைச்சுவை என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்துபவர். அவரின் அந்த “ரியலிஸ்டிக்” திரைத் தோற்றத்திற்கு, ஸ்ருதிஹாசனின் குரல் ஒரு மென்மையான ஆன்மாவை சேர்த்தது போல அமைந்துள்ளது. குறிப்பாக, பாடலின் வரிகளில் வரும் சின்ன சின்ன உணர்ச்சிகள், குரலின் ஏற்றத் தாழ்வுகள் மூலம் இன்னும் ஆழமாக மனதில் பதிகின்றது.
இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பம்சமாக, இயக்குநர் மிஷ்கின் இதற்குத் தானே இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இசை, வரிகள், குரல் – மூன்றும் ஒன்றாக இணைந்து, பாடலை ஒரு தனித்த அனுபவமாக மாற்றியுள்ளன.
ஸ்ருதிஹாசனின் மயக்கும் குரலில் “கன்னக்குழிக்காரா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இசை தளங்களில் முன்னணி வரிசையில் இடம் பிடித்துள்ளது.
ஒரு பக்கம் ஹாலிவுட் படைப்புகள், சலார் முதலாக பான் இந்திய படங்கள் என நடிகையாக கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் தவறுவதில்லை. பெரிதும் எதிர்பார்க்கும் விரைவில் அவரது அடுத்த இசை முயற்சி மற்றும் திரைப்பட அறிவிப்புகள் குறித்த விவரங்கள் ரசிகர்கள் வெளியாகும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













