சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்
Updated on : 13 May 2019

குழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கலைஞர்களுக்கு சினிமாவுடன் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கும். குழந்தை நட்சத்திரங்களாக இருந்து குடும்ப ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை பெற்று, இறுதியாக நல்ல வரவேற்புடன் நாயகிகளாக உயர்வார்கள், அந்த வகையில் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். இது நடிகை மனிஷாஜித்துக்கும் அப்படியே பொருந்தும், அவர் அடுத்த படமான "கடல போட பொண்ணு வேணும்" படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருக்கிறார்.



 



சினிமா துறையில் தனது நீண்ட கால பயணத்தை பற்றி நடிகை மனிஷாஜித் கூறும்போது, "எனது முதல் படம் கம்பீரம். அதில் சரத்குமார் சாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 40 படங்களில் நான் நடித்திருக்கிறேன்.



 



சஞ்சீவ் நாயகனாக நடித்த நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் முதன் முறையாக நாயகியாக நடித்தேன், அதனை தொடர்ந்து கமர்கட் படத்தில் நடித்தேன், அடுத்த படம் ஆண்டாள் விரைவில் வெளியாக இருக்கிறது. எனது தற்போதைய படமான "கடல போட பொண்ணு வேணும்" பற்றி சொல்வதென்றால், வித்தியாசமான கரு மற்றும் ஒரு அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம்.



 



இந்த படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் திறமையானவர்கள். அசார் உடன் நடிக்கும்போது அவர் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இயக்குனர் ஆனந்த் அவருக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பார்.



 



எங்களை போன்ற கலைஞர்கள் எப்போதும் எங்கள் பாணியில் நடிக்க முயற்சி செய்வது பொதுவான விஷயம். ஆனால் செட்டுக்குள் நுழைவதற்கு முன்பே கலைஞர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருப்பார். அவர் எங்களை சிறப்பாக நடிக்க வைக்க நடித்து காட்டவும் தயங்க மாட்டார்.



 



இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். அவர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நடத்தினார்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா